Wednesday 18 September 2019

*புலம்பாத மனிதன்...* *யார் இருக்கிறான்...?*

 புலம்புவதற்கு மனிதன் சந்தர்ப்பம் தேடி காத்திருக்கிறான்.
புலம்புதல் என்பது புண்ணுக்கு மனம் இடும் மருந்து என நினைத்து அதை மேலும் புண்ணாக்குகிறான்...
இதோ பாருங்கள்...
கர்ணன் கண்ணனிடம் புலம்புகிறான்...
"கண்ணா! என்னைப் பெற்றவுடன் என் அன்னை என்னை கை விட்டு விட்டாள்...
அங்கீகரிக்கப் படாத பிள்ளையாய் பிறந்தது என் குற்றமா?"
"எனக்கு கல்வி பயிற்றுவிக்க துரோணாச்சாரியார் மறுத்துவிட்டார்...
நான் க்ஷத்ரியனாகப் பிறக்காதது என் குற்றமா?"
"பரசுராமர் எனக்கு கல்வி பயிற்றுவித்தார்...
நான் க்ஷத்ரியன் என்று தெரிந்த பின் என்னை சபித்துவிட்டார்."
"எதேச்சையாக நான் எய்த ஒரு அம்பு பசுவைக் கொன்றது...
அதன் சொந்தக்காரனும்
என்னை சபித்தான் அதுவும் என் குற்றமா?"
"திரௌபதியின் சுவயம்வரத்திலும் அவமானப்பட்டேன்..."
"தான் பெற்ற மற்ற பிள்ளைகளைக் காப்பதற்காகவே அன்னை குந்தி என்னிடம் கடைசியில் தான் உண்மையைச் சொன்னாள்..."
"எனக்குக் கிடைத்த பெருமை எல்லாம் துரியோதனன் வழங்கிய கொடை...
எனவே நான் அவன் பக்கம் இருந்தது எப்படி என் குற்றம் ஆகும்?"
இதற்கு
கண்ணன் பதில் சொல்கிறான்...
"கர்ணா! நான் சிறையில் பிறந்தேன்...
அந்த இரவே நான் பெற்றோரைப் பிரிந்தேன்...
நான் பிறப்பதற்கு முன்பே மரணம் என்னை துரத்தியது...
இளம் பிராயத்தில் நீ குதிரைகள் குளம்படியும்
யுத்த தளவாடங்கள் ஓசைகளையும் கேட்டிருப்பாய்...
இளம் பிராயத்தில்
நான் சுவாசித்தது
பசுக்களின் மூத்திர சாண நாற்றமடித்த தொழுவ வாசனையைத்தான்...
பலமுறை என்னைக் கொல்ல முயற்சிகள் நடந்தன... அவைகளைச் சந்தித்தேன்...
எனக்கு படிப்பும் கிடையாது! படையும் கிடையாது!
என் தவறு ஏதும் இல்லாமல் எல்லா பிரச்சனைகளுக்கும் நீதான் காரணம் என்ற வசவுகளைக் கேட்டேன்...
உன் வீரத்தை உன் ஆசிரியர்களும் பெரியோர்களும் பாராட்டினார்கள்...
எனக்கு படிப்பே கிடையாது. சாந்திபநி என்ற ரிஷியிடம் பாடம் படித்தேன்...
உன் மனம் போல் ஒரு பெண்ணை நீ மணந்தாய்...
நானோ... விரும்பிய பெண்ணை மணக்கவில்லை. என்னை விரும்பிய பெண்களை /அசுரர்கள் கை விட்ட பெண்களையே நான் மணந்தேன்..."
"ஜராசந்தனிடமிருந்து என் இன மக்களைக் காக்க யமுனா நதிக்கரையில் இருந்து வெகுதூரம் சென்று கடற்கரையில் உள்ள
மதுராவிற்கு இடம் மாற்றினேன்...
இதற்காக ஓடி ஒளிந்த கோழை என இகழப்பட்டேன்..."
"யுத்தத்தில் துரியோதனன் வென்றால் உனக்கு புகழ் கிடைக்கும்...
யுத்தத்தில் தருமன் வென்றால் எனக்கு என்ன கிடைக்கும்..?
யுத்தம் நடத்தினேன் என்ற இகழ்ச்சி தான் கிடைக்கும்!"
"ஒன்றை மனதில் கொள் கர்ணா...!
சவால்கள் நிறைத்தது வாழ்க்கை..."
"எல்லோருக்கும் வாழ்க்கை சரிசமமாக இருப்பதில்லை.
தருமன் துரியோதனன் ஆகிய இருவருக்குமே வாழ்க்கை நியாயமாக இருந்ததில்லை."
*"தர்மத்தின் பக்கம் நின்றவனின் மனசாட்சி வருந்துவதில்லை..."*
"அந்த அவமானங்களை
நீ எப்படி எதிர்கொண்டாய் என்பதுதான் முக்கியம்!"
"புலம்புவதை நிறுத்து
கர்ணா!"
*"அநீதிகளை சந்தித்தேன் என்பதற்காக அதர்மம் செய்ய அனுமதி கிடைக்காது..."*
"புலம்புவதால் பொழுது விடிவது நிற்காது..."
"புலம்புவது என்பது ஒரு சப்பைக்கட்டு..."
"கீழே விழுந்தவன் கையை துடைத்துக் கொண்டு தொடர்ந்து நடப்பதைப்போல...
வாழ்க்கையில் நடந்த அவமானங்களைக் கண்டு துவண்டு விடாமல் கைகளை வீசி முன்னோக்கி நட... இந்த கண்ணன் கூட வருவான்.!"
*நம்பிக்கையுடன் நடப்பவர்களுக்கு... இறையருள் எப்போதும் துணை நிற்கும்!*

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...