Tuesday 16 May 2017

கொதிக்கும் கோடையில் உங்களை காத்துக் கொள்ள சில பயனுள்ள டிப்ஸ்

கொதிக்கும் கோடையில் உங்களை காத்துக் கொள்ள சில பயனுள்ள டிப்ஸ்

தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் - கண்டிப்பாக ஒரு நாளைக்கு மூன்று லிட்டராவது குடியுங்கள். மோர், இளநீர் குடித்தாலும் நல்லது. இது உங்களுக்கு வெயில் காலத்தில் குறிப்பாக வரும் மஞ்சள் காமாலை நோயிலிருந்து காக்கும். சிறுநீரக் கல் வராமலும் தடுக்கும்.

- வெப்பத்தினால் வேர்க்குரு தொல்லை அதிகம் இருக்கும். கோடையில் இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை பனை நுங்கு. இந்த நுங்கு கொண்டு வேர்க்குரு உள்ள இடத்தில் தேய்த்தால் பலன் கிடைக்கும்.

- நுங்கு கிடைக்காதவர்கள் சந்தனத்தை பூசலாம்.



உடல் உஷ்ணம் நீங்க:

- உடல் உஷ்ணத்தில் அவதிப்படுகிறவர்கள் உணவில் வெந்தயத்தை அதிகம் சேர்த்தக்கொள்ளலாம். மணதக்காளி கீரை, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொண்டாலும் உஷ்ணம் தணியும்.

- திராட்சைப்பழத்திற்கு உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி மலச்சிக்கலையும் போக்கும்.

- உடல் சூட்டினால் வயிறுவலி ஏற்படுவது இயற்கை. அதனைப்போக்க ஒரு காய்ந்த மிளகாய் போதும். அதன் காம்பை கிள்ளிவிட்டு உள்ளே இருக்கும் விதைகளை மட்டும் எடுத்து வாயில்போட்டு கொஞ்சம் வெந்நீர் அருந்தி விழுங்கிவிடவேண்டும். வயிற்றுவலி போய்விடும்.

அம்மை நோயிலிருந்து பாதுகாக்க:

- வெயில் காலம் என்றாலே குழந்தைகளுக்கு கட்டி, அம்மை, அக்கி போன்ற நோய்கள் ஏற்படும். அம்மை நோய் கண்டவர்களுக்கு செந்தாழம்பூ சிறந்த மருந்து. இந்த பூக்களின் மடல்களை இடித்து நீரில்போட்டு நன்றாக சுண்டும்படி காய்ச்ச வேண்டும். ஆறியபின்னர் காலை,மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர நோய் கட்டுப்படும்.

- அக்கி நோய் உஷ்ணத்தினால் ஏற்படுவது. இதற்கு வெண்தாமரைப்பூவை கஷாயமாக போட்டு இருவேளைக்கு ஒரு ஸ்பூன் சாப்பிட உஷ்ணம் நீங்கும். பசலைக்கீரையை அரைத்து பசும் வெண்ணையில் குழைத்து அக்கியின் மேல் தடவி வர குணமாகும்.

கட்டி, கண் எரிச்சல் நீங்க:

- உடலிலும், தலையிலும் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்த சீதாப்பழமர இலையையும், உப்பையும் சேர்த்து அரைத்து கட்டிமீது வைத்த கட்டவேண்டும்.

- கட்டிகளின் மேல் எருக்கம்பாலை தடவிவர அவை விரைவில் பழுத்து உடைந்துவிடும்.

- கண் எரிச்சலை போக்க வில்வம் பழம் சிறந்த மருந்து. வில்வம் பழத்தை நெருப்பில் இட்டு சுட்டபின், அதனை உடைத்து அதனுள் இருக்கும் விழுதை தலையில் தேய்த்துக்குளித்தால் எரிச்சல் நீங்கும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...