Sunday 21 May 2017

விநாயகப் பெருமான் அரவத்தை

                                           விநாயகப் பெருமான் அரவத்தை 



கேள்வி : விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக
அணிந்திருக்கும் தத்துவம் என்ன.!?
பதில்: மாயையினைத் தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை பெற்றவர் என்பதாகும்.
கேள்வி . விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் என்ன..?
பதில்: பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். அதனால் அது அறியாமை அல்லது ஆணவ மலத்தைக் குறிக்கும். எனவே அப் பெருச்சளியைப் பிள்ளையார் தமது காலின்கீழ் கொண்டிருப்பது அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை உணர்த்துகின்றது.
கேள்வி – காகவடிவாக வந்து கமண்டல தணணீரை தட்டி ஊத்திய தத்துவம்
உணர்துவது எதனை!?
புதில்: அகத்தியரின் கமண்டலத்தில் உள்ள காவிரி நதியினை காகவடிவத்தில் வந்த விநாயகப் பெருமான் கவிழ்த்துவிட இந்த நதி பெருகி பலசோலைகளைக் கடந்து இறுதியில் கடலுடன் கலந்தது என்றகதை என்ன தத்துவத்தை விளக்குகின்றது என்றால், கமண்டலம் மனித உடல் அதற்கள் இருந்த காவிரிநீர் ஆனமசக்தி. ஆன்மா அறியாண்மை காரணமாக இவ்வுடலே நிலையானது என்று நினைத்திருக்கின்ற காலத்தில் குரு வந்து நினைப்பது பிழை நீ போகவேண்டிய தூரம் வெகுதொலைவு என்பதைப்போல காக வடிவத்தில் வந்த விநாயகர் கமண்டலத்தை கவிழ்த்துவிட. வெறும் உடம்புக்குள் இருந்த ஆன்மா இறுதியில் இறைவனைப்போய் சேருவது போல காவிரி நீரானது இறைவனைப்போய் சேருகின்றது. என்ற பரந்த ஆழமான தத்துவத்தை அர்த்தப்புடுத்தி விளக்குகின்றது.
கேள்வி: விநாயகநின் பெருவயிற்றின் தத்துவ விளக்கம் என்ன..?
பதில: பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்துகின்றது விநாயகருக்கு அமைந்துள்ள பெருவயிற்றின் தத்துவம்.
கேள்வி: இருபெருங் காதுகளின் விளக்கம் என்ன.!?
பதில்: பலகோடி உயிர்களின் முறையீடுகளைக் களைவதற்காகப் பெருங்ம் இரு காதுகளை கொண்டுள்ளார் என்பதாகும்.
கேள்வி : பஞ்சபூத தத்துவத்தின் விளக்கம் என்ன..!?
பதில்: பஞ்சபூதங்களை தம்முள் அடக்கி ஆள்பவர் என்பதைக் காட்டுவதற்காக. அவர் மடித்து வைத்தள்ள ஒருபாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவருடைய மார்பு நெருப்பையும், இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம் காற்றையும், அதன் நடுவில் வளைந்திருக்கும் கோடு அகாயத்தையும் உணர்தி நிற்கின்ற னஎன்பதாகும்.
கேள்வி – அவர் வைத்திருக்கம் ஆயுதங்கள் எதை விளக்குகின்றன.!?
பதில்: விநாயகப் பெருமான் திருக்கரங்களில் ஏந்தியுள்ள ஆயுதங்கள் ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும், அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன.
கேள்வி : கணபதி தத்துவம் என்றால் என்ன..!?
பதில்:கணபதி தத்துவ விளக்கம் யாதெனில் கணபதி
என்ற சொல்லில் உள்ள (‘க்’) என்ற எழுத்து
ஞானத்தைக் குறிக்கின்றது. ‘(ந’) என்ற எழுத்து மோட்ஷத்தை குறிக்கின்றது.(‘பதி’) என்பது பரம்பொருளைக் குறிக்கின்றது. அதாவது தன்னை வழிபடுவோருக்கு ஞானத்தையும் மோட்ஷத்தையும் கொடுப்பவர் கணபதியாவார் என்பதேயாகும்.
கேள்வி: விநாயகருக்குமுன் நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம்
போடுவதின் விளக்கம் என்ன?
பதில்: விநாயகருக்கு முன் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதற்கான தத்துவ விளக்கமானது நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதால் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப் படுகின்றது. தொடர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவதற்கு எற்ற முறையில் மனதைக் கட்டுப்படுத்துகின்றது இதைவிட மனிதரின் நெற்றிப்பொட்டில்தான் உடலின் சகல நரம்புகளும் ஒன்றிணைவதால் ஞாபக சக்தியும் பலப்படுகின்றது. உடலுக்கும் உற்சாகம் தருகின்றது. தோப்புக் கரணம் போடுவதற்கான காரணம.; அகந்தையும், ஆணவமும் அழிவதைக் காட்டுவது என்பதும், உடல் இயக்க ரீதியாக பெரும்பயன் தருகின்றது என்பதுவும் ஆகும்.
கேள்வி: விநாயகரின் திருக்கரங்கள் உணர்த்துகின்ற தத்துவங்கள் என்ன?
பதில்: “சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை உணர்த்துவதாக விநாயகரின் அங்குசம் தாங்கிய வலக்கை, சிகரம், பாசம் பற்றிய இடக்கை வகரம், தந்தம் ஏந்திய வலக்கை யகரம், மோதகம் உள்ள இடக்கை நகரம், துதிக்கை மகரம், இவ்வாறு “சிவாய நம” என்ற திருவைந்தெழுத்தை விநாயகரின் ஐந்து திருக்கரங்களும் உணர்த்துகின்றன.
கேள்வி: சிதறுதேங்காய் உணர்த்தும் தத்துவம் என்ன?
பதில்: விநாயகருக்கு முன் சிதறு தேங்காய் உடைப்பது என்பது இரண்டு தத்துவங்களை கொண்டுள்ளது. ஒன்று மனிதருக்குள் இருக்கின்ற தான் என்ற அகம்பாவ உணர்ச்சி தேங்காயின் ஓட்டைப்போல உறுதியானது. அது தேங்காயைப்போல உடைந்து சிதறிவிட்டால் இனிய நீரும், வெண்மையான தேங்காயும், கிடைப்பதைப் போல. பக்குவமான ஞான உணர்வு நமக்குள் கிடைக்கின்றது. இப்படி நாம் விநாயகருக்கு முன் நாம் பக்குவம் பெற முயலுவதாக உணர்த்துவது ஒரு தத்துவம். இரண்டாவதாக இறை சன்னிதானத்தில் தேங்காய் உடைக்கும் போது தேங்காய் சிதறுவதுபோல் நம் மனக் கவலைகளும் சிதறிப்போகும் என்பதாகும்.
கேள்வி: அறுகம்புல்லின் தத்துவம் என்ன ?
பதில்: தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே விநாயகப்பெருமான் எளிதான அறுகம் புல்லை விரும்பி ஏற்கின்றார். மேலும் அந்த அறுகம்புல் ஒரே காம்பில் மூன்று முனைகள் உடையதாக இருக்கவேண்டும் என்றும். மனம், வாக்கு, காயம். ஆகிய மூன்றையும் கூர்மைப்படுத்தி இறையருளை பெறவேண்டும் என்பதை காட்டவேயாகும்.

விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது? எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான்.
கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர். அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, “பிள்ளையார்’ என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான். சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். “என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?’ எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம். அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.
விநாயகருக்கு, “சுமுகர்’ என்ற பெயருண்டு. “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.
விநாயகர் சதுர்த்தி நன்னாளில், “ஓம் கணேசாய நம’ என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.  

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...