Tuesday 23 May 2017

வாஸ்து கட்டுமான டிப்ஸ்:

                                வாஸ்து கட்டுமான டிப்ஸ்:


வீட்டின் வரைபடம் அமைக்க கீழ்க்கண்ட விதிகளைக் கையாள வேண்டும்:
வீட்டின் கட்டிடம் கட்ட உத்தேசித்துள்ள வீடு:
> கிழக்குப் புறத்தில் விளையாட்டு அல்லது யோகப்பயிற்சி செய்யக்கூடிய இடமும்,
> தென்கிழக்கில் தானியங்கள் போன்ற சாமான்கள் வைக்கவும், சாமான்கள் வீட்டிற்கு வேண்டியவை சேகரிக்கவும்,
> தெற்குப் பகுதியில் சாப்பாட்டு அறையையும்,
> தென்மேற்கில் ஓய்வெடுக்கும் அறையையும்,
> மேற்குப் பக்கத்தில் படுக்கை அறையையும்,
> வடமேற்கில் பூஜை அறையையும்,
> வடக்குப் பக்கத்தில் பொருள் வைக்கவும்,
> வடகிழக்கு பக்கத்தில் சமையல் அறையும்.
கட்டுமான டிப்ஸ்கள்
1. வீட்டின் ஈசான்ய மூலை (வடகிழக்கு) ஈரமாக எப்போதும் இருக்க வேண்டும். கிணறு, போர் (Borewell) தொட்டி போன்றவை ஈசான்யத்தில் அமைக்க வேண்டும். அதில் தண்ணீர் சிறிதளவாவது இருக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் பணப்புழக்கம் அதாவது பணம் இருந்து கொண்டே இருக்கும்.
2. வீட்டின் மேற்குப்புறம் குறைந்த அளவு காலியிடம் இருந்தால் (கிழக்கு, வடக்கை விட) உங்கள் கணவர் காலாகாலத்தில் வீட்டிற்குத் திரும்புவார். அதிகமாக இருந்தால் தாமதமாகத்தான் வீட்டிற்குத் திரும்புவார்.
3. உங்கள் கணவருக்கும், உறவினர்களுக்கும் வேலைச்சுமை குறைந்து, உத்தியோக உயர்வு கிடைக்க வேண்டுமானால் வீட்டின் மேற்குப் பாகத்தில் முதல் மாடி கட்டிக் கொள்ள வேண்டும்.
4. ஒரு வீட்டைக் கட்டிய பின்பு அதை பாகம் பண்ணக்கூடாது. தனித்தனி வீடுகளாகக் கட்டி அதை பிரித்துக் கொள்ளலாம்.
5. தந்தையின் வீட்டை பாகப்பிரிவினை செய்யும்போது மூத்தவர்களுக்கு மேற்குப் பாகத்தையோ, தெற்குப் பகுதியையோ கொடுக்க வேண்டும். இளையவர்களுக்கு கிழக்கு அல்லது வடக்குப் பகுதிகளில் கொடுக்க வேண்டும்.
6. காம்பவுண்ட் சுவர்கள் கட்டிய பின்பு கிரகப்பிரவேசம் செய்வது மிகவும் சிறப்புத் தரும். ஆனால், வசதியில்லாதவர்கள், தங்களது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறிய பின்பு, எவ்வளவு சீக்கிரம் காம்பவுண்ட் சுவரினைக் கட்டமுடியுமோ கட்டிவிட வேண்டும். சுற்றுப்புறத்தில் உள்ள தோசங்கள் நீக்கி, பந்துக்களை நம்மிடம் உறவு கொள்ள வைக்கும்.
7. தொழிலுக்கு முக்கியமானது கிழக்குத் திசை. எனவே, கிழக்கில் காலியிடம் இருந்தால், நாம் செய்யும் தொழில், வியாபாரம் நல்ல முறையில் இருக்கும். கிழக்கினை அடைத்து விடக் கூடாது.
8. வீட்டிற்கு அருகில் கோவில்கள் 150 அடிக்கு மேல் இருந்தால் தோசங்கள் இல்லை. கோபுரத்தின் நிழல் வீட்டின் மேல் விழக் கூடாது.
9. வீட்டிற்கு மேற்கு, தெற்கில் காலியிடம் அதிகம் இருந்தால், கடன் தொல்லைகள் அதிகம் ஏற்படும். அதே போன்று கிழக்கும், வடக்கும் மற்ற திசைகளை விட உயரமாக இருந்தாலும், கடன் தொல்லை, குழந்தைகள் பிரச்சினை, தொழிலில் முடக்கம் உருவாகும்.
10. ஈசான்ய திசையில் உள்ள காம்பவுண்ட் சுவரினை எக்காரணம் கொண்டும் வளைக்கக் கூடாது. அது குழந்தைகளுக்கு கண்டத்தை உண்டாக்கும். தலைவனின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
11. வீட்டின் அருகில் வளர்க்க வேண்டிய மரங்கள் மாமரம், வாழை மரம், வேப்பமரம், எலுமிச்சை, மல்லிகைப் பூச்செடி போன்றவை. இவை மனதிற்கு உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பதன்றி, விக்ஷக்காற்றுகளைத் தடுத்து உதவி செய்யும்.
12. வில்வமரம், அகத்திச் செடி, மிளகு, இலுப்பை மரம், அவுரி, பனைமரம், எருக்கு, எட்டிமரம் போன்றவை வளர்க்கக்கூடாது. லட்சுமி கடாட்க்ஷத்தைக் குறைத்து விடும்.
13. மேற்கு திக்கிலுள்ள சுவர் வெடிக்குமானால் வர்த்தகத்தில் நஷ்டமடைவான். கட்டிடச்சுவர் விழுமானால் வீட்டுச் சொந்தக்காரன் நாசமடைவான்.
14. கட்டும்போது வெளிப்பக்கமாகச் சுவர் இடிந்து விழ, திருடர்களால் கொள்ளை அடிக்கப்படுவார்கள்.
15. வாசம் செய்யும் வீட்டில் திடீரென்று கிழக்குச் சுவரில் வெடிப்பு உண்டானால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் தரித்திர தசையடைவார்கள்.
16. தெற்கில் உள்ள சுவர்களில் வெடிப்புக் கண்டால் அந்த வீட்டில் யாராவது மரணமடைவார்கள்.
17. வடக்கில் உள்ள சுவரில் வெடிப்பு உண்டானால் திடீர் விரையங்கள் உண்டாகும்.
18. வீடுகளுக்குத் தாழ்வாரம் ஐந்தரை அடிக்குக் குறையாமல் அமைக்க வேண்டும்
19. வீட்டிற்குத் தலைவாயில் வைக்கும்போதும், மற்ற பிரதான இடங்களில் வாசல்கள் வைக்கும்போதும் பலிசுற்று பூசணிக்காயைச் சுற்றிய பின்பு, அவ்விடத்தில் தானே உடைக்கச் செய்யாமல், வேறு ஒருவரிடம் (வேலைக்காரர்) கொடுத்து, சற்றுத் தூரத்தில் கொண்டு போய் உடைக்க வேண்டும். அப்படிப் போடுபவர் அன்று ஒரு நாள் மட்டும் வீட்டுச் சொந்தக்காரரைப் பார்க்கக் கூடாது.
20. குடியிருப்பதற்காகக் கருங்கல்லில் கட்டிடங்கள், வீடுகள் கட்டக்கூடாது. அது குடும்பத்தில் பல பிரச்சினைகளைக் கொடுத்துக் குடும்பத்தின் நிம்மதியைக் குலைத்து விடும். அதே போன்று வீட்டின் முன்புறத்தில் காட்சிக்காக கருங்கற்களால் கட்டக் கூடாது.
21. ஏற்கனவே இடம் அல்லது
வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டை ஒட்டியோ அல்லது இடத்தை ஒட்டியோ உள்ள வடக்கு அல்லது கிழக்கில் உள்ள வீடு, மனை வாங்கலாம். தெற்கு, மேற்கு கூடாது.
22. வீடுகள் எந்தத் திசையில் வாசல் இருந்தாலும், வெளியில் இருக்கும் ரோடு மட்டத்தை விட வீட்டுத்தளம் உயரமாக இருக்க வேண்டும்.
23. பிரதான வாசற்காலை விட மற்ற உள்வாசற்கால்கள் கொஞ்சம் சிறிதாக உள்ளடக்கமாக இருக்க வேண்டும்.
24. கடைக்கு எதிரிலும், வீட்டிற்கு எதிரிலும் பெரிய மரம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதை அகற்ற வேண்டும். முடியாது என்றால் மரத்திற்கு எதிராக வீட்டில் ஒரு பெரிய கண்ணாடி வைத்து மரத்தின் நிழல் தெரியும்படி செய்தால் தோசம் ஓரளவுக்கு நிவர்த்தியாகிவிடும்.
25. வீட்டின் கழிவுநீர் ஈசான்யத்தில் வெளியேற வேண்டும். இல்லையெனில், கழிவுநீர் ஈசான்யத்தில் ஒரு சின்னத் தொட்டியில் விழுமாறு செய்து, பின்பு அங்கிருந்து தனியே வாட்டம் கொடுத்து மற்ற திசைகளில் கொண்டு செல்ல வேண்டும்.
26. ஒரு கதவுக்கு இரண்டு ஜன்னல்கள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். கட்டிடம் கட்டுவதற்காக பில்லர்கள் (கான்கிரீட் தூண்கள்) மற்றும் பீல்கள் அமைக்கும்போதும் இரட்டைப் படை எண்களிலேயே அமைக்க வேண்டும். கதவை ராஜா என்றும், அருகில் உள்ள இரண்டு ஜன்னல்களை மந்திரிகள் என்றும் கூறுவர்.
வாஸ்து சாஸ்திரம் முக்கிய பலன்கள் :
1. மேற்கு திசை உயரமாகவும், கிழக்குத் திசை பள்ளமாகவும் இருந்தால் செல்வந்தராக்கி விடும்.
2. கிழக்கு மேடாகவும், மேற்கு பள்ளமாகவும் இருந்தால், ஏழையாக்கிவிடும். தரித்திரம் ஏற்படும்.
3. வடக்கு மேடாகவும், தெற்கு பள்ளமாகவும் இருந்தால், வீட்டுத் தலைவனுக்கு மிகத் தீயதைக் கொடுக்கும். கண்டங்கள் ஏற்படும்.
4. தெற்கு உயரமாகவும், வடக்கு பள்ளமாகவும் இருந்தால், செல்வ வளர்ச்சியைக் கொடுக்கும்.
5. தென்மேற்கும் (கன்னி) மேற்கும் உயரமாக இருந்தால் பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.
6. வாயுமூலையும் மேற்கும் உயர்ந்து, அக்னி மூலையும் கிழக்கும் தாழ்ந்து இருந்தாலும், பகைவரையும், துயரத்தையும் ஏற்படுத்தும். தீ அபாயங்களை ஏற்படுத்தும்.
7. வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும், அக்னி மூலையும் பள்ளமாகவும் இருந்தால் நோய்கள் வாட்டும். நீண்டகால வியாதிகள் தோன்றும்.
8. வடக்கும், வடமேற்கும் உயர்ந்தும், தெற்கும் தென்மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், தீய நடவடிக்கையில் ஈடுபடுத்திவிடும். சிறைத் தண்டனை கிடைக்க நேரிடும்.
கீழே கூறப்படும் கட்டிடத்திற்கு மரங்களின் மரக்கட்டைகளை உபயோகிக்கக் கூடாது:
1. நிழல் தரும் மரம்.
2. கோயிலுக்குள்ளோ, தெருவோரமாகவோ வளர்ந்திருக்கும் மரம்.
3. துளையுள்ள மரம்.
4. இடியினாலோ, மழையினாலோ, மின்னலினாலோ தாக்கப்பட்டிருக்கும் மரம்.
5. கரையான் பிடித்த மரம்.
6. தித்திப்பாயான மரம்.
7. இடுகாட்டில் நெருப்பினால் பாதிக்கப்பட்டு உள்ள மரம்.
8. கீழே உடைந்து விழுந்த மரம்.
9. காளியின் பகவதி கோவிலில் வளர்ந்த மரம்.
10. ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் உள்ள மரம்.
11. பிறருக்கு சொந்த மரம்.
12. துன்டுக்கம், சிலேஸ்மா, வில்வம், மலாக்கம், கொங்கு ஆகியவை கடவுளுக்கு மிகவும் விருப்பமான மரங்கள்.
செய்யத் தகுந்தவை. ஜென்ம நட்சத்திரத்தில்
> அஸ்திவாரம் போடவும், வீட்டிற்கு அழகுபடுத்தவும்,
> வேலைகளும், நிலச் சம்பந்தமானவைக்கும்,
> செய்யும் வேலைகளும், விவசாயமும்,
> படிப்புக்கலை துவக்கவும்,
> அவரவர் தொழிலில் பதவி ஏற்கவும்,
ஆகிய இவை அனைத்தும் ஜென்ம நட்சத்திரத்தில் செய்தல் மிகவும் உசிதமானது..
வளம் தரும் வாஸ்து - 1
- - - - - - - - - - = - - - - - - -
இன்று முதல் வளம் தரும் வாஸ்து என்ற தலைப்பில் வாஸ்து பற்றிய தகவல்களை எல்லோருக்கும் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
தினமும் வாஸ்து பற்றிய தகவல்கள் தங்களுக்கு பகிரப்படும்.
திசைகள்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி மொத்தம் எட்டு திசைகள் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதை அஷ்டதிக் திசைகள் என்று கூறுவார்கள். இந்த அஷ்ட திசைகளையும் அஷ்ட அதிபதிகள் இருந்து அருள் பாலிக்கிறார்கள். அந்த அஷ்டஅதிபதிகளுக்கும் அஷ்டதிக்கு பாலகர்கள் என்று பெயர்.
நாம் காந்த ஊசியின்(Compass) மூலமாக மிக எளிதாக வடக்கு திசையை கண்டுபிடித்து அதில் இருந்து மற்றும் தசைகளை எளிதில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
ஈசான்யம்:
இது ஒரு மனைஇடத்தில் வடகிழக்கில் உள்ள மூலையை குறிக்கும் திசையாகும். இந்த இடத்திற்கு அதிபதியாக ஈஸ்வரன் வருகிறார் எனவே இந்த திசையானது ஈசான்யம் என்று அழைக்கப்படுகிறது. வடகிழக்கின் அதிபதியான ஈஸ்வரன் வாழ்க்கையையும், வம்ச வளர்ச்சியையும் கட்டுப்படுத்துபவர். இந்த திசை வாஸ்து சாஸ்திரப்படி நல்லபடியாக அமைந்தால் அந்த இடத்தில் அமையும் வீடானது சகல நலன்களையும் வாரி வழங்கும் . இந்த வடகிழக்கு ஈசானியத்தில் சிறு குறைபாடுகள் இருந்தாலும் அது பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது குழந்தைகள் மற்றும் அவர்களின் படிப்பு சம்பந்தப்பட்ட இடம் .
வடகிழக்குப் பகுதியில் கிழக்கு முனையை வடக்கு ஈசானியம் என்றும் கிழக்குப் பகுதியில் வடக்கு முனையை கிழக்கு ஈசானியம் என்றும் கூறுவார்கள்.
கிழக்கு திசை :
கிழக்கு திசையின் திக்பாலராக இந்திர பகவான் வருகிறார்.
இந்த கிழக்கு திசையின் அதிபதியான இந்திர பகவான், அழகையும் செல்வத்தையும் அறிவையும் கொடுப்பவராக ஆதிபத்தியம் பெறுகிறார். இந்தப் பகுதியில் சரியாக அமைந்தால் வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி, ஞானம், அமைதி, உற்சாகம், சுகம் ஆகியவற்றை சிறப்பாக கொடுக்கும்.
அக்னி ( ஆக்னேயம்):
ஒருமனை இடத்தில் தென்கிழக்கில் உள்ள பகுதி ஆக்னேயம் அல்லது அக்னி மூலை என்று அழைக்கப்படும்.
தென்கிழக்கில் உள்ள அக்னி ஆனவர் ஆரோக்கியம் புகழ் நற் பெயர்களை தருவதற்கு ஆதிபத்தியம் பெறுகிறார். அக்னி மூலையானது சரியாக அமையவில்லை எனில், நோய்கள், வழக்குகள் மற்றும் விபத்துக்கள் உண்டாகும். மேலும் திருமண உறவு, திருமண உறவில் விரிசல், மற்றும் பிரிவினைக்கும் காரணமாக அமையும்.
கிழக்குப் பகுதியின் தெற்கு பாகத்தை கிழக்கு அக்னி என்றும், தெற்குப் பகுதியின் கிழக்கு பாகத்தை தெற்கு அக்னி என்றும் கூறுவர்.
தெற்கு:
ஒரு மனையிடத்தில் தெற்குப் பகுதியில் நடு பாகம் தெற்கு திசையை குறிக்கும் .இந்த தெற்கு திசைக்கு அதிபதியாக யமபகவான் வருகிறார்.
இதற்கு இசையானது சரியானபடி அமைந்தால் நல்ல செல்வம், சுகம், மன அமைதி, ஆரோக்கியம், உண்டாகும். பெண்களுக்கு உண்டாகும் நோய்கள் மற்றும் விபத்துக்களை கட்டுப்படுத்தும்.
நைருதி (கன்னி மூலை):
ஒரு மனையிடத்தில் தென்மேற்கு மூலையானது கன்னி மூலை அல்லது நைருதி மூலை என்று அழைக்கப்படும். இதன் அதிபதியாக நைரு என்ற அரக்கர் குல தலைவன் அதிபதியாக வருகிறார்.
தென்மேற்கு மூலை சரியாக அமைந்தால், நல்ல உடல் நலம் உண்டாகும், விபத்துக்கள் தவிர்க்கப்படும், தீய எண்ணங்கள் உண்டாகாது .இந்த நைருதி மூலையானது சரியானபடி அமையாவிட்டால் அந்த மனைஇடத்தில் வசிப்பவர்களுக்கு தீய எண்ணங்களும் தற்கொலை முயற்சியும் உண்டாகும். இந்த இடத்தின் அமைப்பைப் பொறுத்தே அங்கு வசிப்பவர்கள் குணம் நடத்தை மற்றும் ஆயுள் உண்டாகும்.
மேற்குப் பகுதியில் தென் மூலை மேற்கு நைருதி என்றும் தெற்குப் பகுதியில் மேற்கு மூலை தெற்கு நைருதி என்றும் அழைக்கப்படும்.
மேற்கு:
மேற்கு திசையில் நடுப்பகுதி அதிபதியாக மழைக்கு காரகனான வருணபகவான் ஆதிபத்தியம் பெறுகிறார். இந்த மேற்கு திசை சரியானபடி அமைந்தால் அந்தஸ்து புகழ் செல்வம் வம்ச வளர்ச்சி ஆகியவை நல்லபடியாக உண்டாகும் மேலும் வெற்றி புகழ் போன்றவைகள் உண்டாகும். மேலும் வருணபகவான் கருணை போல் கேட்காமலேயே இந்த நல்ல பலன்கள் உண்டாகும்.
வாயு மூலை :
ஒரு மனை இடத்தில் வடமேற்கு திக்கை குறிப்பது வாயுமூலை எனப்படும். இதன் அதிபதியாக வாயு பகவான் ஆதிபத்தியம் பெறுகிறார். இந்த வாயு மூலையானது சரியானபடி அமைந்தால் உறவுகள் நல்லபடியாக அமையும், பொருளாதார நிலை மேம்படும், வர்த்தக முன்னேற்றம் வியாபார முன்னேற்றம் உண்டாகும். இதன் அதிபதியான வாயு பகவான் கரு உண்டாவதற்கும், குழந்தைகள் வளர்வதற்கும், மகப்பேறு சமயத்தில் நல்லருள் புரிவார். இந்த இடம் சரியாக அமைந்தால் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையும்.
வடக்குப் பகுதியில் மேற்கு முனை வடக்கு வாயு என்றும் மேற்குப் பகுதியில் வடக்கு முனை மேற்கு வாயு என்றும் வழங்கப்படும்.
வடக்கு :
வட திசையின் நடுப்பாகத்தில் அதிபதியாக செல்வத்தின் கடவுளான குபேர பகவான் ஆதிபத்தியம் பெற்று வருகிறார். இந்த திசையானது நல்லபடியாக அமைந்தால் அந்த மனை இடத்தில் வசிப்போருக்கு நல்ல செல்வ செழிப்பு உண்டாகும். மேலும் குபேர பகவான் பெண்களின் வாழ்க்கை ஆரோக்கியம் கல்வி போன்றவற்றை கட்டுப்படுத்தி நல்ல வணிக திறமையையும் தந்தருள்வார்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...