Tuesday 23 May 2017

மனைஅடி வாஸ்து சாஸ்திரம்;-

                             மனைஅடி வாஸ்து சாஸ்திரம்;- 



இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும்.
இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங்சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளை களை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர் மறை சக்திகூடும்.
1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக் கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்க ள் மாற்றத்தை.
2) கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்க ள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரு ம். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.
3) சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனா ல் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையி ல் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.
4) முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண் டும். மேலும் தூங் கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.
5) குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதா ல், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.
6) வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்க க் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.
7) வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்ச னைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியி ருக்கிறது.
8) மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடா து. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும்.
9) தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட் ட க்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.
10) பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத் தால் அது மன அழுத்தத்தை தரும்.
11) வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களா ன பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்
12) போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க் காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.
13) வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடி யே போகும்.
14) வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியா னால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.
15) படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும்
கிழக்கு - குடிநீர் ஆதாரம்
தென் கிழக்கு .. சமையலறை
தெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை
மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை
வடமேற்கு .. டாய்லெட மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை
வடக்கு ... குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்துக் கொள்ளும் படியாக அமைக்கவும்.
வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.
மேற்குறிப்பிட்ட விளக்கங்களுடன், மனையில் உள்ள அறைகள் கீழ்க்கண்டவாறு உள்கூடு அளவுகள் அமைத்து (நீள அகலங்கள்) சிறப்பாக செயல்பட வேண்யுள்ளது. கடவுள் அருள் கிடைக்கும் வீட்டில் சுபிட்சம் பொங்கும். செல்வமும், போகமும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும், நிறைந்திருக்கும்
6 அடி பலன்- நன்மை ஏற்படும்
7 அடி பலன்- தரித்திரம் பிடுங்கி தின்னும்
8 அடி பலன்
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். உயர்ந்த பதவிகள் கிட்டும். பொருளாதார நிலை மிக வேகமாக உயர்ந்துவிடும். தெய்வ அருள் உண்டு.
9 அடி பலன்- துன்பம் துயரம்
10 அடி. பலன் பொருளாதார நிலையில் சரிவு என்பதே ஏற்படாது. செல்வநிலை மேலும், மேலும் உயர்ந்து கொண்டே போகும். எதிர்பாராத வகையில் பொருள் வரவு ஏற்படும். திடீர் யோகம் உண்டு.
11 அடி பலன்எந்த காரியத்திலும் தோல்வி என்பதே ஏற்படாது. வெற்றிக்கு மேல் வெற்றியாகக் குவியும். குடம்பத்தில் குதூகலம் நிலவும் செல்வ நிலை உயரும்.
12 அடி பலன்- துயரம் புத்திரசோகம்
13 அடி பலன்- துன்பம் நோயினால் அவதி
14 அடி பலன்- பொருள் இழப்பு, கவலை
15 அடி பலன்- துன்பம் துயரம்
16 அடி பலன்
சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். பொருளாதார நிலை மிக வேகமாக உயரும் பலவகையான பொருள்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
17 அடி பலன்
தொழில் அல்லது வியாபாரத்தில் நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும். எந்த காரியத்திலும் வெற்றி காணலாம்.
18 அடி பலன்- கைப்பொருள் இழப்பு, வீடு அழியும்
19 அடி பலன்- புத்திர பாக்கியம் கிடையாது, வறுமை உண்டு
20 அடி பலன்
பண்ணைத் தொழிலில் சிறப்பான லாபம் ிகடைக்கும். பல கைகளிலும் வருமானம் பெருகும். உ்லாசமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
21 அடி பலன்
வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. எல்லா முயற்சிகளிலும் வெற்றியே கிடைக்கும். பொரளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பொன்னும பொருளும் சேரும்.
22 அடி பலன்
மனதில் தைரிய உணர்வு மேலோங்கி யிருக்கும். எதிரிகளின் சதித் திட்டங்களை எளிதாக முறியடிக்க முடியும், வீண் பழிகள் வேகமாக அகலும்.
23 அடி பலன்- கெடுதி ஏற்படும்
24 அடி பலன்- வரவும் செலவும் சமம்
25 அடி பலன்- மனைவிக்கு கண்டம்
26 அடி பலன்
உற்சாகமும், உல்லாசமும் நிறைந்த வாழ்க்கை அமையும். போகமும் யோகமும் தேடிவரும். பொருளாதர நிலை செழித்தோங்க, பொன்னும் பொருளும் சேரும்.
27 அடி பலன்
பொது வாழ்க்கையில் புகழும் செல்வாக்கும கிட்டும். பலரும் வலிய வந்து, உதவி செய்வார்கள். அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் தேடிவரும்.
28 அடி பலன்
கடவுள் அருள் உண்டு. வேதனைகளும், துன்பங்களும். விலகி ஓடும். இன்பமாக வாழக்கை அமைக்க எல்லா முயற்சிகளிலும எளிதாக வெற்றி கிட்டும்.
29 அடி பலன்
பண்ணைத் தொழிலில் பால் வியாபாரம் ஆகியவற்றில் நிறைந்த லாபம் கிட்டும். வாழ்க்கயைில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
30 அடி பலன்
புத்திர பாக்கியம் தாராளமாக இரக்கும். எதிர்பாராத சொத்துக்கள் கிட்டும். திடீர் யோகம் உண்டு. பொருளாதார நிலை மகவும சிறப்பாக இருக்கும்.
31 அடி பலன்
நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வார்கள். தீயவர்கள் விலகியோடுவார்கள். பொன்னும் புகழும் கிட்டும். வாழ்க்கையில் உயர்வான நிலை உண்டாகும் காரியசித்தி உண்டு.
32 அடி பலன் - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்
33 அடி பலன்- வாழ்க்கையின் நிலை உயரும்
34 அடி பலன்- இடமாற்றம் ஏற்படும்
35 அடி பலன்- திருமகள் அருள்
36 அடி பலன்- சுகபோக வாழ்க்கை ஏற்படும்
37 அடி பலன்- செய்தொழில் முன்னேற்றம்
38 அடி பலன்- வறுமை, துன்பம்
39 அடி பலன்- நல்ல வாழ்வு
40 அடி பலன்- விரோதிகள் வலிமை பெறுவர்
41 அடி பலன்- செல்வம் பெருகும்
42 அடி பலன்- அஷ்டலட்சுமி வாசம்
43 அடி பலன்- நன்மை ஏற்படாது
44 அடி பலன்- பெரிய இழப்பு உண்டாகும்
45 அடி பலன்- மக்கள் செல்வம் அதிகரிக்கும்
46 அடி பலன்- வறுமை, நோய்
47 அடி பலன்- பொருள் இழப்பு
48 அடி பலன்- தீயினால் ஆபத்து
49 அடி பலன்- தவறுகள், இழப்புகள்
50 அடி பலன்- நன்மை உண்டாகாது
51 அடி பலன்- வீண் தொல்லைகள்
52 அடி பலன்- பொருள் அபிவிருத்தி
53 அடி பலன்- பெண்களால் பொருள் நட்டம்
54 அடி பலன்- அரசின் சீற்றம்
55 அடி பலன்- உறவினர் விரோதம்
56 அடி பலன்- குடும்ப விருத்தி
57 அடி பலன்- சந்ததி நாசம்
58 அடி பலன்- கண்டம் ஏற்படும்
59 அடி பலன்- கவலைகள் வறுமை
60 அடி பலன்- செய்தொழில் அபிவிருத்தி
பொதுவாக வீடு கட்டும் தாய், தந்தை மூத்த சகோதரர், ஆசிரியர், மூத்த உறவினர்கள் வாழும் பகுதிக்கு வடக்கு திசையிலும்,
கிழக்குத் திசையிலும், தான் மனை வாங்க வேண்டும்.. என்பது சாஸ்திரங்கள் கூறும் கருத்தாகும்.
வீட்டின் பகுதிகள்
அலுவலக அறை வடமேற்கு திசை
புத்தக அறை தென்மேற்குத் திசை
சமையல் அறை தென் கிழக்குத் திசை
உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை
படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
குளியல் அறை கிழக்கு திசை
சேமிப்பு அறை வடக்கு திசை.
கழிவறை வட மேற்கு திசை.


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...