Sunday 28 May 2017

தர்மசாஸ்திரம் கூறுவது: இது பெண்களுக்கு மட்டுமே

                                  தர்மசாஸ்திரம் கூறுவது: இது பெண்களுக்கு மட்டுமே


பெண்களை வீட்டின் மகாலெஷ்மி என்று போற்றுவார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு என்பது நம் அனைவருக்கும் தெரியும் அல்லவா?
அந்த வகையில், பெண்கள் ஒருசில செயல்களை செய்யக் கூடாது என்று தர்மசாஸ்திரம் கூறுவதை தெரிந்துக் கொள்வோம்.
பெண்களுக்கு தர்மசாஸ்திரம் கூறுவது என்ன?
  • சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக் கூடாது.
  • பெண்கள் தங்களின் இரண்டு கைகளாலும் தலையை சொறியக் கூடாது.
  • பெண்கள் அடிக்கடி வீட்டில் இருக்கும் போது அழுகக் கூடாது.
  • உணவு பரிமாறும் போது ஒரு இலையில் பரிமாறியதில் இருந்து, அதை எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறக் கூடாது.
  • வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வந்தால், அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது, தேங்காயை உடைக்கக் கூடாது.
  • பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கு ஏற்றக் கூடாது.
  • திருஷ்டிக் கழிக்கும் போது பெண்கள் பூசணிக்காயை உடைக்கக் கூடாது.
  • பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இடுவது மிகவும் அவசியம்.
  • வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இருந்தால் அதை கணவனிடம் கூறும் போது, இல்லை என்ற வார்த்தையை கூறாமல், அந்த பொருள் வேண்டும் என்று கூறுவது சிறந்தது.
குறிப்பு

தர்மசாஸ்திரம், பெண்களுக்கு என்று கூறும் இந்த அனைத்து செயல் முறைகளைக் கடைபிடித்து வந்தால், வீட்டில் உள்ள அனைத்து கவலை மற்றும் கஷ்டங்கள் விலகி, நமது வீட்டில் செல்வம், மகிழ்ச்சிகளே நிறைந்து இருக்கும். 

அன்னதானத்தின் மகிமையை அறிந்து கொள்வோம் 

 “தானங்கள் பலவற்றில் சிறந்தது அன்னதானம் தானத்தை செய்வோர்தான் பெறுவோர் பேரனைத்தும் தக்கபேறு தக்கநேரம் தான் வந்து காப்பளிக்கும் தற்காப்பு இதுவன்றி தான் வேறு இல்லை சொல்ல " தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான் கிருஷ்ணபகவானும் கீதையில், “ எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்". போதும் என்ற மனம் அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும். என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும், அவனால் ஒரு அளவிற்கு மேல் சாப்பிட முடியாது. அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. – அது விரதம். அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். – அது விரதம். அன்னத்தை வேண்டி வந்த எவரையும் தள்ளிவிடக் கூடாது. – ஆகையால் எவ்விதத்திலாவது மிகுதியாக அன்னத்தை தேடிக் கொள்ள வேண்டும். வருபவர்களுக்கு அன்னம் தயாராக இருக்கிறதென்று சொல்லுவர் பெரியோர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான். பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம். அட்சய பாத்திரம் உயிரோடு உடம்பை சேர்த்து வைத்து ரட்சிப்பதும் அன்னம்தான். அதனால்தான் 'உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே" என்று சொல்லியிருக்கிறது. மணிமேகலையில் இப்படி அன்னதானத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. மணிமேகலைக்கு காஞ்சியில் அட்சய பாத்திரம் கிடைத்தது. அவள் அதை வைத்துக்கொண்டு சகல ஜனங்களின் பசிப்பிணியை போக்கினாள். இதற்கு அநேக யுகங்கள் முன்பே காஞ்சிபுரத்தில் அம்பாளும், இதே அன்னதானத்தை செய்திருக்கிறாள். ஜகன்மாதா இங்கே, “ இரு நாழி நெல் கொண்டு எண் நான்கு அறம் இயற்றினார்." என்று சொல்லியிருக்கிறது. இங்கே அன்னபூரணிக்கு தனி சன்னதி இருக்கிறது. திருவையாற்றிலும்அம்பாள், தர்மசம்வர்த்தினியாக, “ அறம் வளர்த்த நாயகியாக " காட்சி தருகிறாள். உலக மக்களின் பசிப் பிணியைப் போக்க பராசக்தி அன்னபூரணியாக அவதரித்து காசியில் அருள் புரிந்து கொண்டிருக்கும் அன்னபூரணியை தினமும் வணங்கினால் என்றைக்கும் உணவிற்கு குறைவு வராது

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...