Tuesday 23 May 2017

சித்தர்கள் அருளும் கிரிவல முறை

                    சித்தர்கள் அருளும் கிரிவல முறை

சித்தர்கள் அருளும் கிரிவல முறை
உலகின் மிகப்பெரிய சுயம்பு லிங்க மூர்த்தியான திருஅண்ணாமலையாரை கிரிவலம் வரும் முறையில் இலட்சத்து எட்டு வகைகள் உண்டு. ஒவ்வொரு கிரிவல முறைக்கும் வெவ்வேறு விதமான தெய்வீக மற்றும் லௌகீகப் பலன்கள் உண்டு. கிரிவலம் வருகின்ற நாள், நட்சத்திரம், திதி, ஹோரை, யோகம், கரணம் போன்றவற்றைப் பொறுத்தும் பலன்கள் மாறுபடும்.
பல்வேறு கிரிவல முறைகள் இருந்தாலும், சித்த புருஷர்கள் சிறப்பாக வலியுறுத்துவது கோயிலின் உள்ளே தெற்கு கோபுர வாயில் அருகே உள்ள பிரம்ம லிங்கத்தில் கிரிவலத்தைத் தொடங்கி, தெற்குவாயில் வழியே வெளிவந்து, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பல்வேறு லிங்கங்கள், தீர்த்தங்கள், நந்திகள் மற்றும் கோயில்களை தரிசித்தவாறே வந்து இரட்டைப் பிள்ளையார் கோயிலுக்கு அருகே அமைந்துள்ள பூத நாராயணர் சன்னதியில் முடிப்பதுதான்.
முக்கியமாக, திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த பின்னரே, நாம் கோயிலுக்குச் சென்று ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், உண்ணாமுலைத் தாயாரையும் தரிசிக்கத் தகுதி பெறுகின்றோம். இது ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியதொன்று. கிரிவலம் வராமல் செய்யும் கோயில் தரிசனம் முழுப் பலனைத் தராது.
கிரிவலம் வந்த பின்னர், கோயிலில் உள்ள சுவாமி சன்னதியின் உள்பிரகாரத்தில், கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள தூர்வாச முனிவரை வணங்கிய பின்னரே, சுவாமியை தரிசிக்கச் செல்ல வேண்டும். அவ்வாறு கிரிவலம் வந்து தம்மை தரிசிக்கும் பக்தர்களை தூர்வாச முனிவர் மிகவும் மனமகிழ்ந்து ஆசிர்வதிக்கிறார்.
எந்நாளில் கிரிவலம் வருதல் சிறந்தது?
நம்மை மட்டுமன்றி அனைத்தையும் படைத்துக் காக்கும் சர்வேஸ்வரனை எந்நாளிலும், எப்போது வேண்டுமானாலும் கிரிவலம் வரலாம்.
லௌகீக வேண்டுதல்கள், பிரார்த்தனைகளை உடையோர் அவற்றிற்குரித்தான காலம், நேரம் பார்த்து கிரிவலம் வருதலே சிறப்பானது. ஏனெனில் திருஅண்ணாமலை கிரிவலப் பலன்கள் மற்றும் தரிசனப் பலன்கள் அந்தந்த நாள், நட்சத்திரம், திதி, ஹோரை, போன்ற பல கிரஹ / நட்சத்திர அமைப்புகளைப் பொறுத்து மாறுபட்டு அமைகின்றன. தக்க சற்குரு ஒருவரே நமது லௌகீகப் பிரார்த்தனைகளுக்கு ஏற்ற கிரிவல நேரத்தை அறிந்தவர்.
ஆனால் எதையும் வேண்டாமல், "இறைவா! எல்லாம் உன் செயல்! அனைத்தும் உன் விருப்பப்படியே நடக்கிறது. எனக்கு எது நன்மையோ அதனையே அருள்வாயாக!" எனப் பிரார்த்தித்தவாறே கிரிவலம் வருவதே மிக மிக உத்தமமான முறையாகும். நமக்கு எது நன்மை தரும் என்பதை நம்மை விட இறைவன் தானே நன்கு அறிவான்!
எங்களின் ஆஸ்ரம வெளியீடான "திருஅருணையின் கருணையே கருணை!" என்ற ஆன்மீக இதழின் மூலம் நாளுக்குரித்தான கிரிவல முறைகளையும், தரிசனங்களையும் அதன் பலன்களையும் அறியலாம். மக்கள் அறியும் பொருட்டு, இங்கே ஒவ்வொரு நாளுக்கான கிரிவல தரிசனங்களை பகுத்து அளிக்கின்றோம், அவற்றை அறிந்து முறையே பின்பற்றி பயனடையுங்கள்.
ஞாயிற்றுக்கிழமை

ஸர்ப்ப படேஸ்வர லிங்க முக தரிசனம், பஞ்சாயதன பஞ்சமுக தரிசனம், பாதாதி கரந்யாச தரிசனம், பாஸத்ரியாங்கு தரிசனம், இரு குன்று தரிசனம், திரிசூல தரிசனம், நந்தி திரும்புமுக தரிசனம், கல்பக பூர்ண தரிசனம், தூர்வா காஷ்ட தர்ப்பண தரிசனம், கோட்டி மயான லிங்க தரிசனம், மாயக் குழிவடு தரிசனம்.
திங்கட்கிழமை

சாணக்கிய தரிசனம், ராஜலிங்க தரிசனம், பழனி ராஜலிங்க தரிசனம், க்ஷூர பாக்கிய சிவஸ்வரூப தரிசனம், திருஷ்டி நிவர்த்தி லிங்க தரிசனம், மழலை தவழ் தரிசனம், பஞ்சேஷ்டி தரிசனம், சர்வ ஜீவ ப்ராப்த தரிசனம், குதிகால் லிங்க தரிசனம், சக்ராயுதபாணி தரிசனம், பிராயசித்த கர்மலிங்க தரிசனம்
செவ்வாய்க்கிழமை

நயன தீட்சை தரிசனம், ஸ்பரிச தீட்சை தரிசனம், மானஸ தீட்சா தரிசனம், வாசக தீட்சா தரிசனம், யோக தீட்சை தரிசனம், அவுத்ரி தீட்சா தரிசனம், ஞான தீட்சா தரிசனம், கிரியா தீட்சா தரிசனம், சுபிட்ச தீட்சா தரிசனம்
புதன் கிழமை

பாண லிங்கமுக தரிசனம், தொடுவான லிங்க மூர்த்தி தரிசனம், சிவபாத தரிசனம், அன்னாபிஷேக தரிசனம், ஏழுமுக தரிசனம், காமக் குரோத தரிசனம், பாலாழி லிங்கமுக தரிசனம், குத்து விளக்கு தரிசனம், சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம், சுஷ்வாட தரிசனம்
வியாழக்கிழமை

சுந்தர ரூப தரிசனம், நந்தி சேவக மகாலிங்க தரிசனம், வாக்சக்தி லிங்க தரிசனம், புத்தி பூர்வலிங்க தரிசனம், கிரகண பஞ்சமுக தரிசனம், கோமுக தரிசனம், பால சிக்ஷா லிங்க தரிசனம், பிநாகீ தரிசனம், அசுர சமன லிங்க தரிசனம், பாப நிவர்த்தி சூட்சும லிங்க தரிசனம், அசத்திய வாக்விமோசன லிங்க தரிசனம், தீர்த்த ஸ்நான தரிசனம், கூட்டு லிங்க தரிசனம்
வெள்ளிக்கிழமை

முழவு லிங்க முக தரிசனம், நுனிப்பூ தீப தரிசனம், கும்பமூர்த்தி தீப தரிசனம், மார்க்கப் பிறவி தீர்க்க தரிசனம், ஸ்ரீதைல லட்சுமி தீப தரிசனம், அஷ்ட நேத்ர தீப தரிசனம், எண்குண பஞ்சதீப லிங்க முக தரிசனம், கவிஞ்சல தீப லிங்கமுக தரிசனம், யட்ச தீப தரிசனம், காரணோதக தரிசனம், க்ஷீரோதக சிவதீப தரிசனம், கர்த்தம முனி தீப தரிசனம், சந்திர புஷ்டி தீப தரிசனம், கர்போதக சிவ தீப தரிசனம்
சனிக்கிழமை

முகட்டு பர்வத தரிசனம், நெளிவு கோடு லிங்க ஓட்டு தரிசனம், மஹாமக தரிசனம், ஏகமுக தரிசனம், சிவ பஞ்சமுக தரிசனம், எம லிங்க தரிசனம், திரிசடை ஜோதி லிங்க தரிசனம், ஸர்வ லிங்க தரிசனம், காமக்குரோத நிவர்த்தி தரிசனம், பாலிகை தீர்த்த தரிசனம், பிரம்ம பூர்ண சக்திமுக தரிசனம், தசமுக தரிசனம், பஞ்சலிங்க பஞ்சமுக தரிசனம், கோண லிங்க தரிசனம், பலாசர பகுலிங்க தரிசனம்


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...