Tuesday 23 May 2017

புது ஆடைகள் அணிய உகந்த நாடகள்:-

                   புது ஆடைகள் அணிய உகந்த நாடகள்:-


பொதுவாக எல்லா நாளும் தான் விடிகிறது
எல்லா நாளும் தான் உணவு உண்கிறோம் [ உண்ண உணவு ]
எல்லா நாளும் வீடு கட்டுவது இல்லை [ இருக்க இருப்பிடம் ]
எல்லா நாளும் புது உடை அணிவதில்லை [ உடுக்க உடை ]
இன்று எந்நாளில் புது ஆடைகளை அணிவது என்பதை பற்றி கொஞ்சம் கவனிப்போம் !!!
சாஸ்திரங்களில் வகுக்கப்பட்டதே தவிர இதில் புதுமைகளை புகுத்தி எதையும் சொல்லவில்லை என்பதை மனதில் கொண்டு தொடருங்கள் !!
புது ஆடை அணிய பொதுவான நல்ல நடசத்திரம் உள்ள நாடகள் :-
1] அசுவினி , 2] ரோஹிணி, 3] புனர்பூசம், 4] பூசம், 5] உத்திரம், 6] ஹஸ்தம், 7] சித்திரை, 8] சுவாதி, 9] விசாகம், 10] அனுஷம், 11] உத்திராடம்,12] அவிட்டம், 13] உத்திரட்டாதி ,14] ரேவதி
ஆகிய 14 நடசத்திரம் கொண்ட நாட்கள் ஆகும்..
கிழமையில் புதன் வியாழன் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மிக சிறப்பு
ஞாயிறு ,திங்கள் சுமாரான நாட்கள்
செவ்வாய் , சனி கிழமையில் புது ஆடை அணிவது மிகுந்த சிரமங்களை தரும் …
ஒவ்வொரு நட்சத்திர நாளில் புது ஆடைகளை அணிவதால் வரும் பலாபலனை கொஞ்சம் இப்போது கவனிப்போம்..
1] அசுவினி :- அரசாங்க கெளரவம் கிட்டும் [ அரசு ஊழியர் கவனிக்க ]
2] பரணி :- மனைவிக்கு தீமை தரும்
3] கிருத்திகை:- உடலில் எரிச்சல் ஏற்படும் [ கோடைகாலம் கவனிக்க ]
4] ரோஹிணி:- சகல லாபம் [ சிரமத்தில் இருப்போர் கவனிக்க ]
5] மிருகசீர்ஷம்:- எலி கடிக்கும் [ ஆடைகளை மட்டுமே ]
6] திருவாதிரை:- மரண கண்டம் ஏற்படுத்தும்
7] புனர்பூசம்:- தனதான்ய விருத்தி [ வறுமையில் இருப்போர்களுக்கு நன்மை ]
8] பூசம்:- சகல சமத்து கொண்டு வாழ்வார்கள் [ சுபிட்ஷம் ]
9] ஆயில்யம்:- நோய் நொடியும் கடனும் சேரும்
10] மகம்:- மரணத்திற்க்கு ஒப்பான கண்டம் வரும்
11] பூரம்:- நோயும் தொல்லைகளும்
12] உத்திரம்:- மேலும் மேலும் புது ஆடைகள் சேரும் [பெண்கள் கவனிக்க]
13] ஹஸ்தம்:- இனிமையான வாழ்வும் சுகமும் [ தம்பதியினர் இடையே சண்டை நடக்கும் குடும்பத்தில் இந்நாளில் இருவரும் அணியலாம் ]
[ இங்கே இன்னும் ஒரு சிறு குறிப்பு சூடாமணி உள்ளமுடையான் நூல் என நினைக்கிறேன் ..பிரிந்த தம்பதிகள் அஸ்த நட்சத்திரத்தில் மீண்டும் இணைத்து வைத்தால் பிரிவினை இல்லாமல் வாழ்வார்கள் என சொல்கிறது ]
14] சித்திரை:- பலதரப்பட்ட புத்தாடைகள் கிடைக்கும் [ தாய்மார்கள் கவனிக்க ]
15] சுவாதி:- சிறந்த உணவுகள் கிடைக்கும் [ வறுமையில் இருப்போர்கள் கவனிக்க ]
16] விசாகம்:- மனசந்தோசம் தரும் [ நிம்மதி இல்லாமல் இருப்போர் கவனிக்க]
17] அனுஷம்:- உறவினரால் நல்ல லாபம் தரும்.. [மருமகன்கள் கவனிக்க ]
18] கேட்டை:- ஆடைகள் கிழியும் [உண்மை ]
19] மூலம்:- தான்ய நாசம் அடையும் [ விவசாயிகள் இந்நாளை தவிர்க்கவும் ]
20] பூராடம்:- நோய் நொடியை தரும்..
21] உத்திராடம்:- பற்பல புது ஆடைகள் கிடைக்கும்
22] திருவோணம்:- கண்நோய் அடையும்
23] அவிட்டம்:- தான்ய விருத்தி அடையும் [ விவசாயிகள் இந்நாளில் புது ஆடைகள் அணியலாம்நன்மை ]
24] சதயம்:- விஷ ஜந்துக்கள் அபாயம் வரும்
25] பூரட்டாதி:- அரசாங்கத்தால் பயம் வரும் [ வழக்கில் இருப்போர் கவனிக்க ]
26] உத்திரட்டாதி:- புத்ரலாபம் கிடைக்கும் [ குழந்தை இல்லாதவர்கள் கவனிக்க ]
27] ரேவதி:- உயர்ந்த பொருள் ஆதாயம் [ சகல மக்களுக்கும் உகந்தது ]
அதுபோக திதிகளை கவனிப்போம்
துவிதியை, திருதியை ,பஞ்சமி, சப்தமி ஆகிய நாட்கள் புது ஆடை அணிய நன்மை தரும்
சதுர்த்தி மற்றும் நவமி திதி, சதுர்தசி , அமாவாஸை ஆகிய திதிகள் புது ஆடை அணிவதை தவிர்க்கவும் ,
கிழமைகள் தரும் பலன்கள் பின்வருமாறு :-
ஞாயிறு :- உடல் நோய் வரலாம்
திங்கள்:- துயரம் [புது ஆடை கண்ணீரால் நனையும்
செவ்வாய்:- உடையில் தீயினால் சேதம் தரும்
புதன்:- பலவகை ஆதாயங்கள் அடையலாம்
வியாழன்:- சிறப்பான பலன்கள் தரும் அதுவும் குளிகை காலம் காலை 9 முதல் 10-30 ஆடைகள் பெருகும் [ வாகனம் எடுக்கவும் குளிகை காலம் சிறப்பு ஆகும் வாகனம் பெருகும்]
வெள்ளி: நல்ல பலாபலனை தரும்
சனி:- பெரும் துயரம் வந்து சேரும்
இந்த பதிவினை செய்ய ஒரு சம்பவம் காரணம் ஆகும்..
இரு மாதம் [17-01-2015 அன்று சனிக்கிழமையும் கேட்டையும் ] முன்பு ஒரு திருமண பெண் இரவில் வரவேற்புக்கு அணிந்த புது ஆடை மணமகள் அறை கதவில் இருந்த ஆணி கிழித்து விட்ட்து … மிகுந்த வருத்தம் அந்த பெண்ணுக்கு சில நாட்கள் முன்பு ”கால ப்ரகாசிகை” நூலில் வாசித்த செய்தி கண்டு அந்த பெண்ணுக்கு
“நீங்கள் அணிந்தது சனிக்கிழமை கேட்டை நட்சத்திரம் கூடிய நாள் ஆகும் . கேட்டை ஆடையை கிழித்தது..சனிக்கிழமை மனத்துயரம் தந்தது.. இனி வருந்த வேண்டாம் “
என ஆறுதல் சொன்னேன் .. ஆடை கிழிந்த மனதுயரம் நம் ஆறுதல் தரும் வரை அந்த பெண்ணுக்கு கடந்த மூன்று மாத காலத்திற்க்கு சனிகிழமை கேட்டை மனதுயரம் தந்தது…..ஆகவே இதை வாசிக்கும் நண்பர்கள் கொஞ்சம் நாட்களையும் நட்சத்திரமும் திதியை அனுசரித்து புது ஆடைகளை அணியுங்கள்…நன்றி

என்றும் ஜோதிட பணியில்!! 

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...