Sunday 14 October 2018

அற்புத வாழ்க்கை*

                                                                 அற்புத வாழ்க்கை*


*அப்பன்*
*உயிர்துளி*
*கொடுத்து..*
*அம்மை*
*உயிரை*
*சுமந்து..*
*தொப்புள்*
*கொடி*
*உயிர் வளர்ந்து..*
*பத்து மாதம்*
*கருவறை*
*இருட்டில்*
*மூச்சுபயிற்சி*
*கண்டு*
*பூமியின்*
*வெளிச்சத்தில்*
*வந்து விழும்*
*குழந்தை*
*வித்தியாசமான*
*உருவம்*
*கொண்டு*
*வேற்றுமையான*
*எண்ணம்*
*கொண்டு*
*மனிதாபிமான*
*குணம்*
*கொண்டு*
*ஆண்டவன்*
*விருப்பபடி*
*நிறம்*
*கொண்டு*
*வளர்ந்து*
*வாழ்ந்து*
*நல்லதும் கண்டு*
*கெட்டதும் கண்டு*
*சுகமும் கண்டு*
*அவமானமும் கண்டு*
*ஒவ்வொருவரும்*
*ஒவ்வொரு*
*வித்தியாசமான*
*அனுபவம்*
*கண்டு*
*இது தான் உலகம்*
*இது தான் வாழ்க்கை*
*இது தான் பாதை*
*இது தான் பயணம்*
*என்று*
*தெளிவதற்குள்ளே*
*விதி சதி செய்து*
*இயற்கை*
*மாற்றம்*
*கொண்டு*
*உடலை வளர்த்து*
*அறிவை வளர்த்து*
*நட்பை வளர்த்து*
*எதிர்ப்பை வளர்த்து*
*கோழையை எதிர்த்து*
*வீரத்தை வளர்த்து*
*படிப்பு கண்டோம்*
*தினமும்*
*பிடித்த உணவு* *உண்டோம்*
*வேலை கொண்டோம்*
*உழைப்பு கொண்டோம்*
*பணம் கண்டோம்*
*திமிர் கொண்டோம்*
*ஆணவம் கொண்டோம்*
*அறியாமை கொண்டோம்*
*ஏளனம் கொண்டோம்..*
*எளிமை துறந்தோம்*
*பழைய நிலை மறந்து*
*பணம் கண்டு புது*
*வாழ்க்கை*
*வாழ்ந்தோம்*
*பணம் கண்டு பாசம்*
*என்ற வேசம்* *கொண்டோம்..*
*மனைவி மக்கள்* *கண்டோம்..*
*பேரப்பிள்ளை*
*கண்டு*
*பேரின்பம் கண்டோம்..*
*ஒருநாள்*
*அப்பன் உயிர்துளி*
*வெளுத்து சாயம் போக*
*அம்மை கொடுத்த*
*உயிர் போக*
*உணவு உண்டு*
*வளர்ந்த உடல்*
*மட்டும்*
*அனாதையாய்*
*இடுகாட்டில்*
*நெருப்பின்*
*வாயில்போக*
*பெத்தவளும் வர* *தயாராக இல்லை..*
*பெத்தவனும் வர*
*தயாராக இல்லை ..*
*உள்ளத்தாலும்* *உடலாலும் இணைந்து*
*வாழ்ந்த கட்டிய* *மனைவியும்*
*வர தயாராக*
*இல்லை..*
*பெத்த சீர்மிகு* *பிள்ளையும்*
*வர தயாராக இல்லை..*
*பேரின்பம் அடைந்த*
*ஆயிரம் முத்தம் நீ*
*கொடுத்த* *பேரப்பிள்ளையும்*
*உடன் வர*
*தயாராக இல்லை..*
*உன்னுடைய*
*உயிர் போனால்*
*சகலமும் போனது..*
*உடல் நெருப்போடு* *போனது..*
*பணம் வீட்டோடு*
*நின்றது ..*
*பாசம்*
*சுடுகாட்டோடு*
*போனது..*
*கடைசி வரை*
*யார் வருவார்*
*என்று*
*அறியும் ஆற்றல்*
*எவன் அறிவான்*
*அகிலத்தில்..*
*அனுபவத்தோடு*
*சேர்ந்த*
*கர்மவினையும்..*
*பாவமும்*
*புண்ணியமும்*
*கடைசி வரை வந்து*
*சேர்ந்தது..*
*ஆத்மா மட்டுமே*
*ஆண்டவனை*
*அடைந்தது..*
*சுடுகாட்டு*
*வெந்தணலில்*
*ஒரு கை பிடி*
*சாம்பல் மட்டுமே*
*மிஞ்சியது..*
*அறுபது வருடம்*
*இல்லை*
*நூறு வருட*
*வாழ்விற்கு*
*மிச்சம்..*
*இவ்வுளவுதான்..*
*வாழ்க்கையில்..*
*இப்பூவுலகில்*
*எதுவும் உடன் வர* *முடியாது*
*என்று*
*தெளிந்த*
*நமக்குள்*
*எதற்கு இந்த*
*கேவலமான*
*வஞ்சம்*
*வக்கிரம்*
*பொறாமை*
*ஏளனம்*
*வரம்பு மிறி பேச்சு*
*தகுதி மிறி ஆசை..*
*பொறுமையோடும்*
*எளிமையோடும்*
*நல்ல எண்ணத்தோடும்*
*வாழ்ந்தால்*
*போகும் பாதை*
*கடைசியில்*
*மோச்சத்திற்கு*
*வழி வகுக்கும்..*
*நாம் வாழும் காலத்தில்*
*போட்டி இன்றி*
*பொறாமை இன்றி*
*காமம் இன்றி*
*குரோதம் காட்டாமல்*
*களவு செய்யாமல்*
*பேராசை கொள்ளாமல்*
*அடுத்தவரின் குடியை* *கெடுக்காமல்*
*வாழ கற்றுக்*
*கொள்ளுங்கள்*
*பிறரின் தவறை* *மன்னித்து பழகுங்கள்*
*தன்னிடம் ஆயிரம்* *கறைகள்*
*ஆயிரம் குறைகள்*
*அவற்றை நீக்க*
*முயற்சியுங்கள்*
*பிறரை பழிக்காதீர்கள்*
*நல்ல வண்ணம்*
*வாழலாம்*
*வாழ்வில் வளம்*
*பெறலாம்*
*வாழ்க வளமுடன்* *வளர்க நலமுடன்...*
*சுடுகாடு, சாம்பல் தவிர்த்து..* இவ்வளவு தான் வாழ்கை...

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...