Tuesday 2 July 2019

அமாவாசையில் வீட்டுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

அமாவாசையில் வீட்டுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; துஷ்ட சக்திகள் ஓடும்; தரித்திரம் விலகும்!
அமாவாசை நாளான இன்று, மாலையில் வீட்டுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள். துஷ்ட சக்திகள் தெறித்து ஓடும். வீட்டின் தரித்திர நிலை விலகும்.
திருஷ்டி சுற்றிப் போடுவது என்பது தொன்றுதொட்டு இருந்துவருகிறது. கண்ணேறு கழித்தல் என்று கிராமங்களில் இதனைச் சொல்லுவார்கள். வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில், வீட்டில் உள்ளவர்களை, நடுக்கூடத்தில், அதாவது ஹாலில் அமரவைத்து திருஷ்டி சுற்றிப் போடுவார்கள், பெரியவர்கள்.
உப்பு எடுத்து திருஷ்டி, மிளகாய் வைத்து திருஷ்டி, எலுமிச்சை பழம் கொண்டு திருஷ்டி, தேங்காய் கொண்டு திருஷ்டி... என திருஷ்டி கழிப்பதற்கு பல முறைகள் இருக்கின்றன.
அவரவரும் அவருக்குத் தெரிந்த வழக்கப்படி, திருஷ்டி கழிப்பார்கள். இன்னும் சிலர், தேங்காய் மீது சூடமேற்றியும் பூசணிக்காய் மீது சூடமேற்றியும் எலுமிச்சை மீது சூடமேற்றியும் திருஷ்டி கழிப்பார்கள்.
அமாவாசையன்று, திருஷ்டி கழிப்பதற்குப் பலன் அதிகமுண்டு என்பது ஐதீகம். அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமையும் அமாவாசையும் இணைந்து வரும் நாளில், மாலையில் திருஷ்டி கழிப்பது வலிமை மிக்கது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று செவ்வாய்க்கிழமை, அமாவாசை. இந்தநாளில், மாலையில் வீட்டைச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். நடுஹாலில், வீட்டில் இருப்பவர்களை கிழக்கு முகமாக உட்காரச் சொல்லுங்கள். பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை ஆகியவற்றில் சூடமேற்றி, திருஷ்டி சுற்றுங்கள்.
பின்னர், வீட்டு நிலைவாசலில் இருந்துகொண்டு வீட்டுக்கு சுற்றிப் போடுங்கள். இதையடுத்து, முச்சந்தியில் அல்லது சாலையில் பூசணியையும் தேங்காயையும் சிதறுகாயடித்து, வீட்டுக்கு வந்து விளக்கேற்றுங்கள். குடும்பத்தினர் அனைவரும் நன்றாக வேண்டிக்கொண்டு, சுவாமியையும் முன்னோரையும் நமஸ்கரித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும், இதுபோல் திருஷ்டி சுற்றிப் போட... வீட்டைச் சுற்றியுள்ள துஷ்ட சக்திகள் தெறித்து ஓடும். முன்னோர் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம். வீட்டின் தரித்திர நிலை அடியோடு மாறும். சுபிட்சம் நிலவும்.
வீட்டில் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள், கல்விகேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள். தேக ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...