Sunday 7 July 2019

வினா விடை


வினா விடை
வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து விட்டது. அதை அகற்ற மனமில்லை. மீண்டும் பயன்படுத்தலாமா? பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தால், தாராளமாக உபயோகிக்கலாம். தோஷம் எதுவும் கிடையாது. நல்ல பலனே ஏற்படும்

யாகத்தீயில் பட்டு வஸ்திரம், பழவகைகள், நாணயம் இவைகளை இடுவதால் என்ன பயன்? இந்தப் பொருட்கள் ஆகுதிப் புகையாக சூரியனைச் சென்றடைந்து மேகமாக மாறி மழையாக நமக்குக் கிடைக்கிறது. யாகத்தில் இட்ட பொருட்கள் பல்லாயிரம் மடங்காக விளைகிறது என்கிறது தர்ம சாஸ்திர ஸ்லோகம்.

""அக்னௌ ப்ரஸ்தாகுதி: ஸம்யக் ஆதித்யம் உபதிஷ்டதி

ஆதித்யாத் ஜாயதே விருஷ்டி: வ்ருஷ் டேரன்னம் தத:ப்ரஜா:''
யாகத்தீயில் பொருட்களை இடுவதால் நல்ல மழை பெய்யும். சுவையான நீர் கிடைக்கும். காற்று மண்டலம் சுத்தமாகும். விளைச்சல் அதிகமாகும். விளைபொருட்களை ஏராளமாகப் பெறலாம். செல்வ அபிவிருத்தி கிடைக்கும்.

கிரகண வேளையில் கோயில் நடை சாத்துகிறார்கள். அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா? அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.

கடவுளின் படம் அல்லது சிலை.. எது வழிபாட்டிற்கு உகந்தது? மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிக உயர்ந்தது. இரண்டாவது சிலை, அடுத்தது படம். முதலில் கூறியதற்கு மன ஒருநிலைப்பாடு அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியம். உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்யம் ஆகிய கிரியைகள் அதிகம். அவசரமான காலகதியில் எல்லோருக்கும் இயலாது. பட வழிபாடு எளிமையானது. தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கற்கண்டு நிவேதனம் செய்தால் போதும். எது உயர்ந்தது என்று கவலைப்படுவதை விட, எது இயன்றது என்று முடிவெடுத்து, அதை விடாமல் செய்வது தான் உயர்ந்தது.

ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பது உண்மைதானா?
சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களால் வீட்டில் சிலருக்கு ஆகாது என்பது ஜோதிட சாஸ்திரப்படி உண்மைதான். அதற்காகப் பயந்து கொண்டு குழந்தைகளை வெறுக்கக் கூடாது. சாந்தி ரத்னாகரம், சாந்தி குஸூமாகரம் போன்ற நூல்களில் இவற்றிற்கான பரிகாரம் கூறப்பட்டுள்ளது. இதன்படி தக்க பரிகாரம் செய்து கொண்டால்,தீயவையும் நல்லதாகிவிடும். விஷத்தையே மருந்தாக மாற்றும் நாம், ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்?

வீட்டில் வழிபாட்டிற்காக இருக்கும் துளசிச் செடியின் இலைகளை மருந்துக்காகப் பறிக்கலாமா? வீட்டில் துளசிச் செடி வழிபாட்டில் இருப்பதே பெரிய மருந்து தான். இதன் இலைகளைப் பறிக்கக் கூடாது. வேறு துளசிச் செடிகளை வளர்த்து மருந்துக்கு உபயோகிக்கலாம்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்துவது ஏன்? மற்ற தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு சாத்துவது போல் ஆஞ்சநேயருக்குப் பிரியமான வெண்ணெயினால் சாத்துபடி செய்வது சிறப்பு. அவரது வாலில் தீ வைக்கப்பட்டதால், உஷ்ணத்தைத் தணிக்க பக்தர்கள் அன்புடன் வெண்ணெய் சாத்துகின்றனர்.

சுமங்கலிகளை வழியனுப்பும்போது குங்குமம் கொடுக்க வேண்டுமா? அவசியம் கொடுக்க வேண்டும். இதில் இரு விஷயங்கள் உள்ளன. சுமங்கலிகள் நம் வீட்டிற்கு வந்தால் அம்பாளே வந்திருப்பதாக எண்ண வேண்டும். குங்குமம், ரவிக்கைத்துணி, வெற்றிலைபாக்கு, மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை வழியனுப்பும்போது கொடுத்தால் அம்பாளின் அருள் கிடைக்கும். மற்றொன்று வந்திருப்பவர் நம்மை விட வயதில் சிறியவராக இருந்தால் வாழ்த்தியும், பெரியவராக இருந்தால் வாழ்த்துப் பெற்றும் குங்குமம் கொடுக்க வேண்டும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்ட இதனைச் செய்வது வழக்கில் உள்ளது.

நோய்க்கு மருந்தாவான்: காலையில் படுக்கையை விட்டு, ஹரி ஹரி என்று ஏழுமுறை சொல்ல வேண்டும்.பணிக்கு கிளம்பும் போதும், வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் காபி போடுவதற்கு முன்பும் கேசவாய நம என ஏழுமுறை சொல்ல வேண்டும்.
சாப்பிடும் முன்பு கோவிந்தனை(திருப்பதி ஏழுமலையான்) நினைக்க வேண்டும்.

இரவில் உறங்கச்செல்லும் போது மாதவா... மாதவா என ஏழுமுறை சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...