Tuesday 30 July 2019

மறந்தேன் எதை?

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 டிவி என் வீட்டிற்கு வந்தபோது. ... புத்தகங்களை எப்படி படிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
கார் என் வீட்டிற்கு வந்தபோது..... ​​
நான் எப்படி நடக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
என் கையில் மொபைல் கிடைத்தவுடன்..... கடிதங்களை எப்படி எழுதுவது என்பதை மறந்துவிட்டேன்.

என் வீட்டிற்கு கணினி வந்தபோது....... ​​
எழுதவதை மறந்துவிட்டேன்.
ஏசி வந்ததும்......
இயற்கைக் காற்றை மறந்து விட்டேன்.
நகரத்திற்கு வந்தவுடன்...
அழகு நிறைந்த கிராமத்தை மறந்துவிட்டேன்.
வங்கிகள் மற்றும் கார்டுகளை கையாளுவதால்...
பணத்தின் மதிப்பை மறந்துவிட்டேன்.
வாசனை திரவியத்தை பயன்படுத்தியதால்...
பூக்களின் மனத்தை மறந்துவிட்டேன்.
துரித உணவு வருவதால்...
பாரம்பரிய உணவு வகைகளை சமைக்க மறந்துவிட்டேன்.
சம்பாதிக்க சுற்றி, சுற்றி ஓடுவதால்.....
ஓடுவதை எப்படி நிறுத்துவது என்பதை மறந்துவிட்டேன்.
கடைசியாக எப்படி பேசுவது என்பதையே..மறந்துவிட்டேன்....
                                               மறந்தேன் எதை?
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது..அங்கே
கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: "வா மகனே....நாம் இங்கிருந்து கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது...."
ஆச்சரியத்துடன் மனிதன், "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய கடமைகள்,கனவுகள் என்ன ஆவது? நான் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன."ஏன் மனைவி,மக்கள் அழுகின்றனர்.
"மன்னித்து விடு மகனே..இதோடு உனக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. உன்னைப் புதைத்த மண்ணின் ஈரம் காயும் முன் அவர்கள் உன்னை மறந்து விடுவார்கள்.இப்போது உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."
"சரி நீங்கள் வைத்திருக்கும் அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள் மானிடனே....."
"என்னுடைய உடைமைகளா!!!..
அப்படி என்றால் அது என்னுடைய பொருட்கள், உடைகள்,சொத்து பணம்,.....இவை தானே...?"
"நீ சொன்ன பணம்,காசு.பொருள்,
சொத்து,பத்து இவை அனைத்தும் உன்னுடையது அல்ல....அவை பூமியில் நீ வாழ்வதற்கானது...."
"சரி கடவுளே பெட்டியில் இருப்பது என்னுடைய நினைவுகளா?..."
"இல்லை மானிடனே.அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது...அவை காலத்தின் கோலம் அது இந்த பிறவியோடு முடிந்தது..."
"என்னுடைய திறமைகளா?..........."
" இவை எதுவும் கண்டிப்பாக உன்னுடையது கிடையாது...அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?..."
"மன்னிக்கவும்....குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது...அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்.."
"அப்படியென்றால் கடவுளே பெட்டியில் இருப்பது என் உடலா?...."
"அதுவும் உன்னுடையது கிடையாது....உடலும் குப்பையும் ஒன்று தான்.."
"என் ஆன்மாவா?"
"ஆம்...அது மட்டும் என்னுடையது...எனது கட்டுப்பாட்டில் இருப்பது."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், அதிர்ச்சிக்குள்ளாகிறான்..
பெட்டி காலியாக இருப்பதைக் கண்டு....
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எவ்வளவு சம்பாதித்தேன்,என் ஆன்மா மட்டும் உன்னுடன் தனியாக வரவேண்டுமா..?
எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.அது மட்டும் தான் உனக்கு வழங்கப்பட்டிருப்பது..நீ பிறக்கும் போதே அந்த countdown தொடங்கி விட்டது.
வேறு எதுவும் உனக்கு சொந்தம் கிடையாது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். உன் மனைவி மக்களுக்கு நல்லது செய். உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் நல்லவானாக இரு. எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே..."
ஒவ்வொரு நொடியும் வீணாக்காமல்
உன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து முடி.
மகிழ்ச்சியாக நல்லவனாக வாழ மறக்காதே...அது மட்டுமே நிரந்தரம்...
உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் மேலே கொண்டு போக முடியாது,நீ செய்த புண்ணியத்தை தவிர"..!


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...