Tuesday 21 March 2017

பொன்மொழி...

                                                           பொன்மொழி...



வாடா மல்லிக்கு வண்ணம்
உண்டு வாசமில்லை,


🌸 வாசமுள்ள  மல்லிகைக்கோ

வயது குறைவு.

🐹வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
🐐கொம்புள்ள மானுக்கோ
வீரம் இல்லை.

🐦கருங்குயிலுக்குத்
தோகையில்லை,

🐤தோகையுள்ள மயிலுக்கோ
இனிய குரலில்லை.

🍃 காற்றுக்கு
உருவமில்லை

🌞 கதிரவனுக்கு நிழலில்லை
🌸 💧 நீருக்கு நிறமில்லை


நெருப்புக்கு ஈரமில்லை,

🎯ஒன்றைக் கொடுத்து
🎲ஒன்றை எடுத்தான்,

🏆ஒவ்வொன்றிற்கும் காரணம்
வைத்தான்,

எல்லாம் இருந்தும்
எல்லாம் தெரிந்தும்
👤கல்லாய் நின்றான்
இறைவன்.                                 

எவர் வாழ்விலும் நிறைவில்லை,

எவர் வாழ்விலும் குறைவில்லை,

புரிந்துகொள் மனிதனே
அமைதி கொள் !!!!


சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு 

ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய் 

தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை                           காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை     
,
                                           மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் ,                                       சாத்தானிடம் செல்லத் துள்ளிஓடுகிறான் 

                                        நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும் 

பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்

மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும் 

கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்
மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

 பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்
அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்

                                                                                                                                                                                           சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்


 வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.


இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
 நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது


                     தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம்பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான் 


சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன

.  செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். 

    சின்ன காரியங்களை நன்றாக இப்போது செய்யுங்கள். நாளடைவில் பெரிய காரியங்கள் உங்களைத் தேடிவரும். எல்லா ஆரம்பங்களும் சிறியவையே ஆரம்பிப்பதுதான் கடினம்.

 சூரியனை விட மேகங்கள் சக்தி வாய்ந்தவையும் அல்ல; நீடித்தவையுமல்ல. மேகங்கள் எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், அவற்றால் சூரியனை அடியோடு மறைத்து விட முடியாது. இதைப் போன்றுதான் ஒரு நல்ல மனிதனைத் தலைதூக்க விடாமல் செய்ய்யும் கயவர் கூட்டத்தின் முயற்சியும்

    நாளைய தினத்திற்காக இன்றே கவலைப்பட வேண்டாம். அந்தந்த நாளுக்கு அதனதன் கவலை போதாதா 


 முடியாதது என்று எதுவும் இல்லை.! ஆனால் எல்லாமே சுலபமாக முடிவதில்லை 

       சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்! 


 படிக்கும்போது விளையாட்டைப் பற்றி நினைக்காதே! விளையாடும்போது படிப்பைப் பற்றி நினைக்காதே!  


 மூச்சை சீராக்கினால் மனம் அமைதியாகிறது  மூச்சை சீராக்குவதற்கு ஹடயோகம் உதவி செய்கிறது. அமைதியான மனதை உள்பக்கம் திருப்பினால் எதனால் மனம், புத்தி, உடம்பு இயங்குகிறது என்று உற்றுக் கவனித்தால் வேறு ஒரு விஷயம் புலப்படும். 

 பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


   தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே. நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.


ஒரு பறவை உயிருடனிருக்கும் போது எறும்பை சாப்பிடுகின்றது, பறவை இறந்தபோது எறும்பு தின்கின்றது. நேரமும் சூழ்நிலையும் எந்த நேரமும் மாறலாம்
. 
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

  
               சிரிப்பது போலே முகம் இருக்கும்; சிரிப்புக்கு பின்னால் நெருப்பிருக்கும் மலருக்குள் நாகம் மறைந்திருக்கும்; மனதுக்குள் மிருகம் ஒளிந்திருக்கும். 



அடுத்தவனுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்வதைவிட, அதில் ஒன்றைகடைபிடி       



 நாளைய மழை அறியும் எறும்பாய் இரு
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும்
காளானாய் இராதே!   



                                                                                              *உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்துவரவேண்டும். - 




                                                           மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.   

    நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும். 


   தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது


.                                                                                                                                                                              நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை

 நமது அறிவு என்பது எறும்பு என்றால் வாழ்க்கையும் இந்த உலகமும் யானையைப் போன்றது. 


எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.

    உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்   

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை  

              ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது.  


  கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக் கொண்டிருக்கும் கலதத்தையே பெரிதும் நாசப்படுத்தி விடும்                                                                                                                                                          1 சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை.
2. செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை.

3. போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்).

4. மனைவி இல்லாதவன் அரை மனிதன்.

5. ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இரு மடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு. (பெண்கள் வருந்தற்க)

6. அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!

7. உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்
.
8. பெண்ணை ஒரு பொருள்போல் நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.

9. எழுதப்படும் சொல்லைவிட நாக்கால் பேசப்படும் சொல்லே வலிமை மிக்கது.

10. நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.

11. பரிசுத்த இதயத்தைப் பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி.

12. பொறுமைசாலிக்குக் கோபம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் விலகி இருந்து கொள்வது நல்லது

13. துன்பங்கள் நிலையானவை அல்ல; அவை ஆற்றில் ஓடும் தண்ணீர்போல் ஓடிவிடும்
.
14. வல்லமையற்ற நீதி ஆற்றலற்றது; நீதியற்ற வல்லமை கொடுங்கோன்மை.

15. எந்த ஒரு முட்டாளும் பணம் ஈட்டமுடியும்; ஆனால் அறிவாளியால் மட்டுமே அதைக் காப்பாற்ற இயலும்.

16. ஒருவனைத் தனிமையில் கண்டிக்கவேண்டும்; பலர் முன் பாராட்டவேண்டும்.

17. பிள்ளையின் அருமை பெற்றவளுக்குத்தான் தெரியும்.

18. இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே!

19. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.

20. துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம் துன்பத்தைவிடக் கொடியது; துயரமானது.

21. இறந்தவர்கள் இருப்பவர்களின் கண்களைத் திறக்கிறார்கள்                                                       22. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்
23. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ 
தெரிந்துகொள்.
24. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
25 தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை 
ஆரம்பிக்கிறது. 
26. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.
27. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட 
மோசமான சாபமும் இல்லை.

28. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு 
வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.
29. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை 
உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது. 
30. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
31.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. 
ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு 
பெற்று விட்டான் என்பதே.
32. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி 
விடாதீர்கள். 
33. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் 
கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் 
பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு 
இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.
34. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் 
பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் 
காவலன். 
35. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், 
கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது. 
36. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு 
எல்லாமே எளிதாகத் தோன்றும்.
37. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் 
கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
38.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த 
சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் 
ஆவான்.
39. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல 
பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்.
40. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ 
விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...