Thursday 2 March 2017

மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை


மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை




பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும்பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று முறை கூற வேண்டும்.

காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும்மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.

விளக்கு வைத்த பிறகு தலைவாருதல்பேன் பார்த்தல்முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பைகூளங்களை வெளியே வீசக்கூடாது. பால்தயிர்பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல்கடன்கொடுத்தல் கூடாது.

நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பதுஅரிசி வறுப்பதுபுடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

செவ்வாய்வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலைபாக்குமஞ்சள்குங்குமம்பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்
லட்சுமி தேவி என்பவர் பணம் மற்றும் செல்வத்திற்கான கடவுள். லட்சுமி தேவி குடி கொண்டிருக்கும் வீட்டில் பொன்னும் பொருளும் நிறைந்திருக்கும். நம் வீட்டில் லட்சுமிதேவி நிலைத்து இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
💰 வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். அந்த சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.
💰 வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும்இ துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
💰 15 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் மகாலட்சுமிக்கு மல்லிகைஇ செந்தாமரைஇ மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல்இ வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்தால் புகழ்இ செல்வம்இ வியாபார விருத்திஇ புத்திரப்பேறுஇ குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
💰 வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.
💰 பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.
💰 வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம்இ மஞ்சள் வைக்க வேண்டும். இதனால்இ தீய சக்திகள் வீட்டிற்குள் வராது என்பது ஐதீகம்.
💰 வீட்டை செவ்வாய்கிழமைஇ வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
💰 பூஜை அறையிலோஇ வீட்டின் முற்றத்திலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைப்பது நல்லது.
💰 சாமிக்கு இலையில் வைத்துத்தான் உணவு மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.
மேல் காணும் வழிகள் மூலம் லட்சுமி தேவியை நம் வீட்டில் நிலைக்கச் செய்வோம்.



விரைவாக உண்ணுகின்ற உணவில் எல்லாம் கலப்படம் செய்து விட்டு வைத்தியதுக்காக காத்திருக்கிறோம் நாள் கணக்கில்  
.......................................நீயே சிந்தி.......................................

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...