Wednesday 12 April 2017

எலுமிச்சையின் மருத்துவ குணம்

                                          எலுமிச்சையின் மருத்துவ குணம்




மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும்.

குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும். குளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும். தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை நீக்கி சுத்தப்படுத்தும்.
எலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று கருதப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக் கொண்டது எலுமிச்சை. அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம்.

தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது. தொற்று வியாதிகளை எதிர்த்துபோரிடும் திறன் கொண்டது.

சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு உடலில் இருக்கும் புண்கள் அழுகிப் பெரிதாகாமல் இருக்க உதவுகிறது. இதற்கு தோலின் மேற்பரப்பில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்தாலோ, அல்லது பருகினாலோ பலன் கிடைக்கும். காயம் ஏற்படும்போது ரத்தம் வடிவதையும் எலுமிச்சம் பழம் கட்டுப்படுத்தும்.
அணுவின் அளவைச் சொல்லாத காலத்தின் போது தமிழன் நீட்டல் அளவை

கம்பன் காட்டும் எண்ணளவை இன்றைய கணிதவியலறிஞர்கள் இதனை அளவிட்டுரைக்க முடியாது என்கின்றனர். தமிழ் மொழி எண்களையும் வடமொழி எண்களையும் “பிங்கலந்தை” எனும் நிகண்டு நூல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி
கோடி எண் மடங்கு கொண்டது சங்கம்
சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம்
விந்தம் எண் மடங்கு கொண்டது குமுதம்
குமுதம் எண் மடங்கு கொண்டது பதுமம்
பதுமம் எண் மடங்கு கொண்டது நாடு
நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம்
சமுத்திரம் எண் மடங்கு கொண்டது வெள்ளம்.

அறிவியலின் தாக்கம் தொடர்ந்து வரும் இலக்கிய பரிணாமத்தினூடே கலந்து வந்தன. மேலும் இது போன்ற எண்ணற்ற அறிவியற் செய்திகள் இலக்கியத்தில் நிறைய உள்ளன. இக்காலம் அறிவியல் எனும் பாற்கடலை அப்படியே அள்ளிக் குடித்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்கு தமிழ் இலக்கியம் நிச்சயம் துணை நிற்கும்.
 
 
நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ரத்தப்போக்கு:

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.
சிறுநீர் எரிச்சல்:

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.

பேதி:

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

தொண்டைப் புண், தொண்டை அழற்சி:

10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.

பிற பயன்கள்:

* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.

* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.

* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.

* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.

* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.


 
இளநரை போக்க மூலிகை எண்ணெய்--இய‌ற்கை வைத்தியம் :-
இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது.

ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.

இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.

இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும்.

பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது.

உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - 2 இணுக்கு
கொத்தமல்லலி - சிறிதளவு
நெல்லி வற்றல் - 10 கிராம்
வெட்டிவேர் - 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநறை நீங்கும்.


காலில் பித்த வெடிப்பா?

காலில் பித்த வெடிப்பா? கவலையை விடுங்கள்! சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ..... பித்தவெடிப்பு மறைய காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தொண்டை வலிக்கு பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும். இருமல் தொல்லைக்கு தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும். கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும். இருமல் சளிக்கு தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும். கட்டிகள் உடைய மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும். பேன் தொல்லை நீங்க வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும். மேனி பளபளப்பு பெற ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும். தும்மல் வராமல் இருக்க தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது. கரும்புள்ளி மறைய எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும். தொண்டை கரகரப்பு நீங்க அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும். கருத்தரிக்க உதவும் அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். இருமல் சளி குணமாக சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.




கறிவேப்பிலை

உணவுல கறிவேப்பிலையைச் சேர்க்கறதே... வெறும் வாசனைக்காகத்தான்னு ரொம்ப பேர் நினைக்கறாங்க. ஆனா, இந்த கறிவேப்பிலை அற்புதமான மூலிகை. அது, உடம்புக்கு வலுவூட்டும்ங்கிறது பலபேருக்கு தெரியாத விஷயம். தலையில தேய்க்கக்கூடிய எண்ணெய், தைலம் மாதிரியான திரவப் பொருட்கள்ல கத்தாழை, அவுரி சேர்ப்பாங்க. இதுகூட, கறிவேப்பிலையும் அரைச்சு சேர்த்து வெச்சுக்கலாம். இப்படி சேர்க்கப்பட்ட எண்ணெய்/தைலத்தை தேய்ச்சுக்கிட்டா... நல்ல பலன் கிடைக்கும். இந்த எண்ணெய், முடிக்கு நல்ல பலம் கொடுக்குறதோட... முடி நல்லா வளரவும், முடி உதிராம இருக்கவும் செய்யும்.

தினமும் 2 ஈர்க்கு கறிவேப்பிலையை காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா பித்தம் அதி கரிக்கிறதால வரக்கூடிய இளநரை மாறும். இதை தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டாத்தான் பலன் கிடைக்கும். சர்க்கரை நோயாளிங்க இதேபோல சாப்பிட்டு வந்தா நோய் கட்டுக்குள்ள வரும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை, 2 டம்ளர் தண்ணி விட்டு, அரை டம்ளரா ஆகுறவரை நல்லா கொதிக்க வெச்சு குடிச்சா... மலச்சிக்கல் இல்லாம இருக்கலாம். கறிவேப்பிலையை துவையல் செஞ்சு சாப்பிட்டு வந்தா... வாந்தி, பேதி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல்னு வயிறு சம்பந்தமான நோய்கள் சரியாகும். சுக்கு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை எல்லாம் சம அளவு எடுத்து, பொன் வறுவலா வறுத்து பொடியாக்குங்க. ஒரு உருண்டை சாதத்துல, அரை டீஸ்பூன் அளவுக்கு இந்தப் பொடியைப் போட்டு, நெய் விட்டு சாப்பிட்டா... ஜீரண உறுப்புகள் எல்லாம் வலுவாகும்.

வேப்பிலை மாதிரி, கறிவேப்பிலையையும் மஞ்சள் சேர்த்து அரைச்சி பூசிட்டு வந்தா... முகப்பரு, தேமல் மட்டுமில்ல, மற்ற தோல்நோய்களும் சரியாகும்.
கடுமையான காய்ச்சலால கஷ்டப்படுறவங்களுக்கு இந்த கறிவேப்பிலை கைகொடுக்கும். கறிவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்துக்கோங்க. கூடவே துளசி ஒரு கைப்பிடி, ஆடாதொடை இலை ஒண்ணு, வேம்பு ஒரு ஈர்க்கு, ஒரு டீஸ்பூன் சீரகம் இதையெல்லாம் ஒண்ணா போட்டு, 4 டம்ளர் தண்ணி விட்டு 2 டம்ளராகுற வரை கொதிக்க வையுங்க. இதை 2 மணி நேரத்துக்கு ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் குடிச்சுட்டு வந்தா... எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் சரியாயிரும். காய்ச்சல் இருந்தா 2, 3 நாள் வரை இதை குடிச்சா... நிச்சயம் பலன் கிடைக்கும்.



சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். அதனால் ரத்தத்திலுள்ள விஷத்தன்மை நீங்கும். கசப்பு மருந்து எனப்படும் சிறியாநங்கை, பெரியாநங்கை தாவரங்கள் மருத்துவகுணம் நிறைந்தவை. இவை செம்மண், கரிசல் மண்களில் நன்றாக வளரும். இது ஒரு குறுஞ்செடி. வேப்பிலை போன்று எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதை விதைத்து 45 நாட்கள் ஆனதும் நாற்று எடுத்து நடலாம். ஆறு மாதம் கழித்து இலைகள் அறுவடை செய்து நிழலில் 5 நாட்கள் உலரவிட்டு பின் பொடி செய்து மருந்தாக உபயோகிப்பார்கள். ஆறு மாத்திற்கு மேல் வளர விட்டால் எள் பூ போன்று வெண்மையான பூ விடும். பின் 1.5 - 2 செ.மீ. நீள காய்கள் விடும். பின் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும். இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும். செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள் ஆன்டி ரோகிராப்பின் மற்றும் பனிக்கொலின் வேர்களிலும், இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால், 'கால்மேகின்' என்ற கசப்புப் பொருளும் உண்டு. விஷக்கடிக்கு மருந்து சிறியாநங்கையின் இலை மற்றும் வேர்ப் பகுதிகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள் அவ்வாறு செல்லும்போது வேறு எந்த விஷப்பூச்சி கடித்தாலும் தாக்காது. தோல்நோய்களுக்கு சிறியா நங்கை மிகவும் நல்லது. ஆனால் பத்தியத்திற்கு கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோய்க்கு மருந்து இது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். குழந்தைகள் மருந்து தயாரிக்க ஏற்றது. காய்ச்சல், பூச்சிக்கொல்லி, மலம் இளக்கி, படபடப்பு, வயிற்றுப் போக்கு போன்ற வற்றிக்கும், மண்ணீரல் சம்பந்தமான நோயிக்கும் நல்ல மருந்து. நீரிழிவு நோயிக்கும் சிறியாநங்கையைப் பயன்படுத்து கிறார்கள். கல்லீரல் நோய்களை போக்கும் காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. ப்ளுகாய்ச்சலை குணப்படுத்தும். சைனஸ் மற்றும் சளித்தொந்தரவினால் ஏற்பட்ட நோய்களை போக்கும். மலேரியாவிற்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது சிறந்த ரத்தசுத்திகரிப்பானாக பயன்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது

No comments:

Post a Comment

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...