Saturday 22 April 2017

ஏன் சில இந்து மத ஆண்கள் பூணூல் அணிகிறார்கள் என்று தெரியுமா?

ஏன் சில இந்து மத ஆண்கள் பூணூல் அணிகிறார்கள் என்று தெரியுமா?


ஒரு தனி நபரின் வாழ்க்கையில், 16 புனித சடங்குகளை இந்து மதம் வலியுறுத்துகிறது. இதனை சம்ஸ்கரஸ் என அழைக்கின்றனர். பூணூல் என்பது ஒரு சிறுவன் தன் ஐந்து, ஏழு மற்றும் பன்னிரெண்டாம் வயதுகளில் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சடங்காகும்.
பூணூல் என்றால் புனித நூலை ஒரு சிறுவன் அணிய தொடங்கியவுடன், அவன் இரண்டாவது முறையாக பிறந்து விட்டான் என அறிவிக்கப்படும். சரி, இப்போது ஏன் இந்து மத ஆண்கள் பூணூல் அணிகிறார்கள் என்பது குறித்து காண்போம்.
காயத்ரி மந்திரம்
பூணூல் அணிவது, குறிப்பாக பிராமணர்கள் மத்தியில் புகழ்பெற்ற ஒன்றாகும். காயத்ரி மந்திரத்துடன் தொடங்கும் பூணூல் சடங்கை அந்த சிறுவனுக்கு அளிக்கக்கூடிய கூடுதல் பார்வையாக, அதாவது உட்புற பார்வையாகவும் பார்க்கப்படுகிறது. பூணூல் சடங்கை (காயத்ரி மந்திரம் ஓதுதல்) ஒரு சிறுவன் மேற்கொள்ளும் போது, அவன் பூணூல் அணியும் போது, சீரான பிரார்த்தனைகளிலும், பரிந்துரைக்கப்பட்ட வழியில் காயத்ரி மந்திரத்தை ஓதுவதிலும் அவன் ஈடுபட எதிர்ப்பார்க்கப்படுகிறான்.
யஜ்நோபவீடம்
இந்த புனிதமான நூலான பூணூல் யஜ்நோபவீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனை அணியும் ஒரு தனிப்பட்ட நபர் உயர்ந்ததாக கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தீவிர விருப்பத்தை கொண்டிருக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறார். பூணூல் என்பது வ்ரிதாஸ் எனப்படும் மூன்று நூலால் செய்யப்படுவது. ஒவ்வொரு நூலும் மூன்று சுருக்கப்பட்ட கயிறுகளைக் கொண்டிருக்கும். அவை முடிச்சு போடப்பட்டிருக்கும். அந்த சிறுவன் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான உயர்ந்த சின்னமாக பூணூல் கருதப்படுகிறது.
வாழ்க்கை பயணம்
நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் என்ற வாக்குறுதியை இந்த பூணூல் உணர்த்தும். மூன்று நூல்களும் இடா, பிங்களா மற்றும் சுஷும்னா என்ற மூன்று வகையான சுவாசத்தைக் குறிக்கும் அல்லது சத்வா, ராஜாஸ் மற்றும் டமாஸ் என்ற மூன்று இயற்கை குணங்களைக் குறிக்கும். மனித வாழ்க்கை என்பது பூர்ணத்துவத்திற்காக இந்த இரண்டு அம்சங்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதே. அதனால் வாழ்க்கை பயணத்தின் உண்மையான நோக்கத்தை அடையலாம்.
இடது தோள்பட்டையில் பூணூல் அணிய வேண்டும்
பூணூலை இடது தோள்பட்டையில் அணிய வேண்டும். பொறுமையுடன் வாழ்க்கையின் சுமைகளைச் சுமப்பது என்பது தான் இதற்கான அர்த்தமாகும். இதயம் வழியாக செல்லும் இந்த நூல் வாழ்க்கையின் மீதான நம்பிக்கை மற்றும் உறுதியைக் குறிக்கும். அது நம் முதுகை தொடுவது, அர்பணிப்பின் சின்னமாகும். அதனால் பூணூல் என்பது ஒரு மனிதன் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டிய அர்பணிப்பு, தைரியம், உறுதி, நம்பிக்கை, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை குறிக்கும்.
மூன்று நூல்கள்
தனிப்பட்ட நபர் தான் கடமைப்பட்டிருக்கும் மூன்று விஷயங்களான ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னோர்கள் மற்றும் சாதுக்கள் மற்றும் கடவுள்களை தொடர்ச்சியாக நினைவுப்படுத்துவது இந்த மூன்று நூல்களே. வாழ்க்கையை முறைப்படுத்தப்பட்ட மற்றும் அர்த்தமுள்ள வழியில் வாழ்ந்திட தேவையான அறிவை அளிக்கிறார்கள் ஆசிரியர்கள்; இந்த உலகத்தில் ஒரு தனி நபர் இருப்பதற்கு காரணமே அவனின் பெற்றோரும் முன்னோர்களும்; கடவுள்களும் சாதுக்களும் அவனை சொத்து, அறிவு மற்றும் சந்தோஷத்துடன் அருளளித்துள்ளார்கள். அதனால் அவர்கள் அனைவரிடமும் அவன் நன்றியுடன் இருக்க வேண்டும்.
ஞானத்தை அளிக்கும்
சமஸ்கிருதத்தில் உள்ள ஒரு வாக்கியத்தின் படி, பூணூல் அணிந்திருக்கும் ஒரு தனி நபர் ஞானத்தைப் பெற்று, சூரியனைப் போல் அறிவுடன் மிளிர்வார்கள். கலைகள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் அவர்கள் தாங்கள் செல்லும் இடமெல்லாம் தலைவனாவார்கள். அனைத்து களத்திலும் சிறப்பறிவுத் தன்மையை பெறும் அவர்கள் கடைசியாக மோட்சத்தை (மனிதனின் உச்ச இலக்கு) அடைவார்கள்.
பூணூலின் அர்த்தம்
அதனால் பூணூல் அணிவதால் ஒரு மனிதனுக்கு அவனின் பல்வேறு கடமைகள், நடத்தைகள், பொறுப்புகள் மற்றும் வாழ்க்கையின் அர்த்தங்களை அது நினைவுப்படுத்தும். இதன் அடிப்படையில், வாழ்க்கையில் சிறந்து, உயர்ந்து நிற்பதற்கான அர்த்தத்தை உணர்த்துகிறது இது. பூணூல் அணிவதன் உண்மையான அர்த்தமும், மனநிலையும் வலுப்படுத்தப்பட்டால், ஆன்மீக வாழ்க்கைக்கு அது பாதையை வகுத்துக் கொடுக்கும்.

No comments:

Post a Comment

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...