Thursday 13 April 2017

புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

             புத்திர பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?



மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு. மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி இருந்தால், சந்தான பாக்கியம் இருக்காதாம். இதற்கு பரிகாரம், சொர்ணத்தால் கிருஷ்ண விக்ரகம் செய்து, தானம் செய்தால், சந்தானம் உண்டாகும். அதே போல், கன்றையும் பசுவையும், தாயையும் பிள்ளையையும் பிரித்தால், சந்ததி உண்டாகாது. இதற்கு, பூமிதானம், கோதானம் செய்தால், பாவம் விலகி, சந்தான பாக்கியம் கிடைக்கும். மேலும், குழந்தைகளை மிரட்டுவது, அடிப்பது, அவர்களுக்கு கொடுக்காமலோ, ரகசியமாகவோ அல்லது எதிரிலேயோ பட்சணங்கள் சாப்பிடுவதும் புத்திர தடைக்கு காரணம். இதற்கு பரிகாரமாய், குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்கள், மரப்பாச்சி, சோழி இவைகளை வாங்கி, தானம் செய்ய வேண்டும். பிறருடைய குழந்தைகளை அடித்து புண்படுத்துவது, மற்ற உயிரினங்களின் முட்டைகளை உடைப்பது போன்ற செயல்கள், சந்ததி நாசம் ஏற்படுத்தும். தண்ணீரில் மூழ்கி இறந்து விடும் தறுவாயில் உள்ள விலங்குகளை காப்பாற்ற முயற்சிக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பாவம். இதற்கு, தினமும் கோ பூஜை செய்வதும், பசுவுக்கு புல் கொடுப்பதும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. சர்ப்பங்களை அடித்துக் கொல்வதாலும், ராகு கேது கிரகதோஷங்களாலும், பித்ருக்கள் சாபத்தாலும், சந்தானம் இல்லாமல் போகலாம். நாகப் பிரதிஷ்டை, சர்ப்ப சாந்தி செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும்.  

No comments:

Post a Comment

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...