Sunday, 16 April 2017

ஆசைக்கு அளவேது?

                                                ஆசைக்கு அளவேது? 





கடவுள் ஒரு நாள் ஓர் ஏழையைக் காண பூலோகம் வந்தார். அந்த ஏழையைச் சந்தித்து,உனக்கு என்ன வேண்டும்?என்று கேட்டார்.

ஏழையோ மிகுந்த ஆசையுடன், ��எனக்கு பணம், தங்கம், வைரம் எல்லாம் வேண்டும் என்றார்.

கடவுள் ஒரு விரலை நீட்டி அங்கிருந்த குடத்தை தங்கமாக்கினார். ஆனால், ஏழை பேசாமல் இருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்டி அந்த வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் தங்கமாக்கினார். 
 
அப்போதும் அவன் பேசாமல் இருந்தான். மீண்டும் கடவுள் விரலை நீட்டி அந்த வீட்டிலிருந்த பாத்திரங்களை எல்லாம் தங்க மாக்கினார். 
 
அப்போதும் அவன் சிரிக்கவே இல்லை. கடவுள் ஏழையிடம்

இன்னும் உனக்கு என்னதான் வேண்டும்?என்றார்.

ஏழையோ, அந்த விரல் வேண்டும்! என்றான்.

ஆசைக்கு அளவுண்டு. ஆனால், பேராசைக்கு அளவேது?

No comments:

Post a Comment

ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு*

 ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு* *ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்...