Friday 14 July 2017

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன...?

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன...?

 ஊதுபத்தி ஏற்றுவது ஈஸ்வரனை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம்.

அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன், அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும்.

அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது.

இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு. ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்கவேண்டும்.

பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையும் மணம்வீச வழி செய்வதே தெய்வீக செயலாகும்.

ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும், அதன் மணம் மட்டும் காற்றில் கலந்துவிடுகின்றது. அதன் மணத்தை முகர்ந்தவர், அதை தம் நினைவிலே வைத்திருப்பர்.

 அதுபோலத்தான், மற்றவர்களுக்காக நன்மை செய்துவிட்டு வாழ்ந்து மறைந்தவர்களின் பேரும்புகழும் என்றுமே மக்களிடையே நிலைத்திருக்கும்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைக் கூறுவதும், நல்ல விஷயங்களை அவர்களுக்கு செய்தலும், அவர்கள் எப்போதும் நல்வாழ்வு பெறவேண்டும் என மனதார நினைப்பதும் மிகப் பெரிய உன்னதமான செயலாகும்.

 இதுபோன்ற குணத்தை தான் ஊதுபத்தி குறிக்கின்றது. இதுபோன்ற குணத்தை உடையவர்கள் தான் ஈஸ்வரனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள். இதை தான் நம் பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.

”அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்” (குறள் 96)

--- மற்றவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைச் சொல்வதால் ஒருவருடைய தீவினைகள் தேய்ந்து,
நல்வினைகள் பெருகும்.

ஆலயங்களை வலம் வரும் முறை-----

நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று வணங்கிவருகிறோம் . ஆலயத்தில் நாம் பிரகாரங்களை சாஸ்திரமுறைப்படி வலம்வருவதால் நம் வேண்டுதல் உடனே நிறைவேறும் . ஆலயங்களை வலம்வரும் முறையை இங்கு காணலாம் .

###வினாயகரை - ஒருமுறையும் ,
சிவனையும் ,அம்மனையும் - மூன்று முறையும், சித்தர் , மகான்களின் சமாதியை - நான்கு முறையும்,பெருமாள் - அம்மனை - நான்கு முறையும்,அரசமரம், தலவிருட்சங்களை - ஏழு முறையும்,
நவகிரகங்களை - ஒன்பது முறையும் வலம் வர வேண்டும் .

எக்காரணம் கொண்டும் தன்னை தானே வலம் வர கூடாது . தெய்வங்களை வலம்வரும் பொழுது அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்தோத்திர பாடல்களை சொல்லி வலம் வருதல் நலம் பயக்கும் . கோவில் கொடிமரத்தின் முன்பு மட்டுமே விழுந்து நமஸ்காரம் செய்யவும்

கருட வாகனம்:
---------------------------

மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன் . இந்துக்கள் அனைவராலும் கருடாழ்வார் என வணங்கபடுகிறார்.

பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் கருடாழ்வார் எழுந்தருளிப்பார் .

வைகுண்டத்தில் இருந்து திருமலையான சப்தகிரியை ( திருப்பதி ) பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர் . சப்தகிரி என்றால் ஏழு மலை . அந்த ஏழுமலைகளில் ஒன்றுக்கு கருடனின் பெயரில் கருடாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது .

பெரும்பாலும் தெய்வத்தின் வாகனத்திற்கு, வாகனம் கிடையாது ஆனால் விஷ்ணுவின் வாகனமான கருடனுக்கு வாகனம் உண்டு .

கருடனுக்கும் ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில், சுபர்ணோ வாயு வாஹனா : என்று குறிப்பிடப்பட்டுள்ளது . அதாவது காற்றே அதன் வாகனம் .
கருடனைப் பார்ப்பதும் , அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறியாகும் .

 ஒவ்வொரு தினக்களிலும் கருடனின் தரிசனம் ஒவ்வொரு பலனை தரும்.

ஞாயிறு – நோய் நீங்கும்

திங்கள் – குடும்பம் செழிக்கும்

செவ்வாய் – உடல் பலம் கூடும்

புதன் – எதிரிகளின் தொல்லை நீங்கும்

வியாழன் – நீண்ட ஆயுள் பெறலாம்

வெள்ளி – லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்

சனி – மோட்சம் கிடைக்கும்.

கருடனின் சகுனம் முக்கியமாக கருதபடுவதால்தான், இந்தியாவில் தமிழகத்தின் உள்ள அனைத்து கோயில் கும்பாபிஷேகங்களிலும் கருடனின் தரிசனம் கிடைத்தபிறகே கலசத்தில் நீர் ஊற்றபடுகிறது

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...