Wednesday 5 July 2017

ஜோதிடர்கள்

ஜோதிடர்கள்

ஜோதிடர்கள் யாரும் கடவுள் இல்லை

பேயோட்டும் மந்திரவாதிகள், ஆவிகளுடன் பேசுபவர்கள், அற்புதங்கள் என்ற பெயரில் கண்கட்டு வித்தைக்காட்டுபவர்கள், சாமியாடி அருள் வாக்கு சொல்பவர்கள்

, இறை முன்னறிவிப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள்,

 மந்திரக்கோல் வைத்து குறி சொல்பவர்கள், இறை அருளாளர் என்று சொல்லிக்கொள்பவர்கள், சிலர் தன்னை கடவுள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். இவர்கள் எல்லாம் ஜோதிடர்கள் இல்லை,

ஆனால் பொது மக்கள் இவர்களை ஜோதிடர்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால் இவர்கள் அனைவருமே ஜோதிடத்திற்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள். 

தங்களை ஆற்றல் மிகுந்த மனிதர்களாகவும், எதையும் சாதிக்கும் வல்லமையுடையவர்களாகவும் காட்டிக்கொள்பவர்கள். மக்களை பெருமளவில் முட்டாள் ஆக்குவது இவர்களே.

 ஜோதிடத்தை கற்றுக்கொள்ளும் அளவுக்கு இவர்களுக்கு அறிவோ ,பொறுமையோ கிடையாது.

 இதனால் இவர்கள் எப்பொழுதும் ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் குறைத்து மதிப்பிட்டு பேசி வருபவர்கள். எல்லாம் தெரிந்த ஞானிகளாக தங்களைக்காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள்.

 ஆனால் ஜோதிடத்தில் என்ன இருக்கிறது என்று இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. 

யாராவது கேள்வி கேட்டாலோ, காரண காரியங்களை விளக்கச்சொல்லி கேட்டாலோ இவர்களுக்கு சுள்ளென்று கோபம் வந்து சாபமிடுவார்கள். இவர்களுக்கு யாராவது மயங்குவது போல் தெரிந்தால் வரங்களை அள்ளி வீசுவார்கள்.

 ஆனால் அவை ஒன்றும் நடக்காது. இவர்களில் பலர் மன நோயாளிகள். 

மற்ற சாஸ்திரங்களைப்போல் ஜோதிடத்தில் பாடத்திட்டங்கள் உள்ளன. பழங்காலத்தில் குருகுல முறையில் பயிற்றுவிக்கப்பட்ட ஜோதிடம் இன்று பல பல்கலைக்கழகங்களில் பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது.


 ஜோதிடம் பயின்றவர்கள் நவ நாகரிகமாக சாதாரண உடைகளில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள். இயல்பான மனிதர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். 

இவர்கள் நெற்றிக்கு ஏதாவது பூசிக்கொண்டு, கழுத்து,காது, தலையில் எதையாவது அணிந்துகொண்டு இயல்புக்கு மாறானவர்களாக தங்களை காட்டிக்கொள்வதில்லை

. ஜோதிடம் என்பது ஒரு வகை கணிப்பு மட்டுமே. இதில் எந்த விதமான அமானுஷ்ய ஆற்றலும் பயன்படுத்தப்படுவதில்லை.

 எந்த ஒரு உண்மையான ஜோதிடனும் தன்னை கடவுள் என்றோ அல்லது கடவுளுக்கு முகவர் என்றோ சொல்லிக்கொள்ள மாட்டான்.


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...