Thursday 8 August 2019

நந்தி என்ன?

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

நந்தி என்ன? நம் உடலி எவ்வாரு செயல்படுகிறது?
நந்தி என்றால் நன்+ தீ = நந்தி. நன்- என்றால் நன்மைor நல்ல, தீ - என்றால் நெருப்பில் இருந்து எழுகின்ற "தீ" ஜுவாலை .
கேள்வி ;- நல்ல தீ, கெட்ட தீ என்று இரண்டு உள்ளதா?
பதில் ;-ஆம் நம் உடலில் இரண்டு விதமான சூடு (தீ) உள்ளது. ஒன்று நமக்கு காய்ச்சல் மற்றும் உடல் நிலை சரியில்லாத போழுது வருகின்ற சூடு, மற்றும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து திடுக்கிட்டு ஏழுந்த உடன் உடல் முழுவதும் அனல் வீசி வியர்த்து சுடுகின்ற சூடு இது நல்ல சூடு (தீ).
மற்றோண்டு - கோபப்படும் போழுதோ, துக்கம், அதிகமாக பேசுதல், பார்த்தல், கேட்டல், உணவு முறைகளால் பித்தம். இந்த சமையத்தில் வருகின்ற சூடு கேட்ட சூடு (தீ).
ஆகாசம், காற்று இவ் இரண்டிற்கும் உருவம் கிடையாது தீ (நெருப்பு ) முதல் நீர், மண் வரை உருவம் ஆயிற்று. ஆகாசம், காற்று = உயிர், நெருப்பு = மனம், நீர் + மண் = உடல் .பஞ்சபூதங்களுக்கு இடையே அமைந்ததும், உயிர் - மனம் - உடல் = இடையனாக (கிருஷ்ணன்) வந்து அமர்ந்த நந்தி மனமாகும். நந்திமாதிரி ஏன் குறுக்கே வந்த என்று நாம் பேச்சி வாக்கில் சொல்வது வழக்கம்.
மனம் தான் மும்மலங்களால் (ஆணவம், கண்மம், மாயை) ஆலப்பட்டு செவி, கண், மூக்கு, வாய், உடல்லாக தன் காரியத்தை செய்கிறது. எப்போழுது ஐந்தோழிலையும் விட்டு மனம் விடுதலை பெருகின்றதோ அப்போழுது மனம் = தீ புகையாமல், சலனம் இன்றி எரியத்தொடங்கும் (அது ஆழ்ந்த தூக்கத்தில் நடைபெருகின்றது). அந்த நிலையை நாம் தூங்காமல் தூங்கி சுகம் பெரும் போழுது மனம் நான் என்ற அகங்காரத்தில் இருந்து விடுதலை பெற்று நன்தீயால் எறிந்து கொண்டு இருப்போம் இதுவே "சுத்ததேகம் " பெரும் வழி.
மனம் நிர்மலனாகி நமது வருகை ஜீவனில் (அக்கினி, சூரியன்) இருந்து என்று உணர்வு உண்டாகி மீண்டும் ஜீவனை ( சூரியனை) பார்த்து, மனம் (சந்திரன்) உள்முகமாக திரும்பி நின்றால் மனம் பெளவுர்ணமியாகி அனைத்து அவஸ்தைகளையும் தடங்கள் இன்றி காணமுடியும் என்ற நிலைக்கே" குருநந்தி " என்றும் "குருமனம்" என்றும் பெயர்.
அந்த தீ (உஸ்னம்) என்றும் நமக்குள் இருந்தால் தான் உயிர்பிரியாமல் சுத்ததேகத்தில் என்றும் நித்தியமாய் இருக்கும், இருக்க முடியும். அதை பெருவதற்கு பிரம்ம வித்தை என்னும் வாசியோகம் வேண்டும் அப்போழுது சூடேரிக் கொண்டு இருக்கும் இவ்"தேகம்".அவன் அவனுக்கு அவன் அவன் மனமே (நந்தி) "காரண குரு". தன் குருவை எவன் காட்டிக் கொடுக்கின்றானோ அவனே "காரிய குரு", நன்றி.
அன்னதானம் செய்வீர்!,
- தன்னை அறிந்து இன்புற்று வாழ்க
- திருச்சிற்றம்பலம்- நன்றி வணக்கம்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...