Wednesday 28 August 2019

சைவம்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

சைவம்
இது குறித்து நாம் கடந்த பல பதிவுகள் வழியாக தொடர்ந்து பேசி வருகிறோம்.
பொதுவாக நாம் இந்த பொது காலத்தின் ஊடே பயணிக்கும் போது நமது இயக்கத்தின் வேகம் நமக்கு காலமாகவும். வயதாகவும் தோன்றுகிறது. தமது இயக்க திசைவேகம் அண்டத்தில் திசையை மாற்றி அமைத்து கொண்டாலும் இது மாறாது. அப்போதும் கூட காலம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இது நிகழ் காலம் என்பதை நாம் எவ்வளவு தூரம் பயணித்த பின் உணர்கிறோமோ அது காலமாக காட்சியளிக்கிறது. நாம் எதை செய்தாலும் அல்லது எதை உணரந்தாலும் அது நிகழ்ந்த பின் அந்த நிகழ்வின் கடந்த காலத்தையே நாம் நிகழ்காலமாக காண்கிறோம் இதற்கு காரணம் இயக்கம். இந்த இயக்கம் தனது வேகத்தை அதிகமாக்கும் போது காலம் நீளத்துவங்கும்.
இந்த காலம் என்பது அனைத்து பொருட்களும் அதாவது உயிர் பொருள்களும் தொடரந்து இயங்கிக் கொண்டுள்ளது இது ஒன்றே ஒன்று சார்ந்து காலத்தை தோற்றுவிக்கிறது. இதில் அதன் உள்ளியக்கம் தனது இயக்கத்தை தொடர மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மற்ற இயங்கு உயிர் பொருட்களை சார்ந்துள்ளது.
ஏனெனில் அண்டமே இயக்கத்தில் உள்ளது அதன் உள்ளியக்கம்தான் இங்கு உள்ள எல்லாமும். ஆனால் ஒவ்வொரு பொருளுக்குமே நாம் எதற்காக இயக்கத்தில் உள்ளோம் என தெரிய வாய்ப்பு இல்லை. அது இயல்பாக தற்செயலாக நிகழ்வதை தனது வாழ்க்கை என வாழ்ந்து கொண்டே உள்ளது. நாமும் இதுபோல ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறோம். ஒருவர் வீட்டில் வளர்க்கும் கோழிக்கு அது குருமாவுக்காகத்தான் வளர்க்க படுகிறோம் எனத் தெரியாது. ஆனால் அது வாழ்ந்து கொண்டே உள்ளது.
இவ்வாறு வாழும் போது தனக்கான உணவை சேகரிக்கவும் உண்டு செரிக்கவும் இதனூடே தனது இனத்தை விருத்தி செய்யவும் அவைகளுக்கென தனித்துவமான பல உபாயங்களை கொண்டுள்ளது.
அதில் மிருகங்கள் பறவைகள் ஊர்வன நீந்துவன என அனைத்தும் யாரையும் சாராமல் தனது இனத்தை விருத்தி செய்கிறது.
ஆனால் தாவரவகைகள் எப்படி விருத்தி செய்து கொள்கிறது.
அதற்கான உணவை நீர் மற்றும் மண் மூலமாக தனது உடல் முழுவதும் கொண்டு சென்று தனது உயிரை தக்கவைத்துக் கொள்கிறது. ஆனால் தனது இனத்தை விருத்தி செய்ய மற்றவைகளை சார்ந்து உள்ளது.
கண்ணா. ராசா அந்த சேகர் கடையில போயி அஞ்சு ரூவாய்க்கு வெத்தல வாங்கிட்டு வாப்பா. இந்த பத்து ரூபா மீதி அஞ்சு ரூபா நீ வாங்கி தின்னுக்கனு கூறியது நினைவுக்கு வருகிறதா.
ஆம் உதாரணமாக உங்கள் தாத்தாவின் சட்டைப்பையில் இருந்து அவர் செலவுக்காக வைத்துள்ள பணத்தை ஆட்டையை போடுவது ஒரு முறை. அதே உங்கள் தாத்தா தனக்கு வெற்றிலை பாக்கு வாங்கி வரக் கூறும் போது நாம் போய்வருவதற்கு சன்மானமாக வாங்கி திங்க சில்லரையும் தருவது போல மற்ற ஒன்று .
இதில் இரண்டாவது முறையில் தாவரங்கள் தனது இனத்தை விருத்தி செய்கிறது.
உயிர்களின் உணவு என்பது கூட உயிர் ஆற்றல் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
அவ்வாறான உயிர் சக்தி கொண்ட உணவை காட்டி மற்ற உயிர்களை உண்ண வரும்படி தூண்டி அதை உண்ண செய்து அதன் மூலமாக தனது இனத்தை விருத்தி செய்து கொள்கிறது.
இதற்காகவே பூக்கள் பல நிறங்களில் பல நறுமனங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது அதற்குள் தேனை உற்பத்தி செய்து வண்டு. பறவைகளை கவர்கிறது. பிறகு காய்த்து விதைக்கான பருவம் வரும் வரை அதை பாதுகாக்க முயல்கிறது அதனாலேயே காய்கள் எப்போதும் புளிப்பாக கசப்பாக உண்ணுவதற்கு கடினமாக மற்றும் உண்டால் வாயில் புண்களை ஏற்படுத்தும் பால் போன்ற திரவங்களை கொண்டுள்ளது.
அதன் விதை தயாரான பிறகு அதை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல அது வேறு ஒரு இயங்கும் உயிரை ஈர்த்தாக வேண்டும். இப்போது அதன் விதையை சுற்றி சுவை மிக்க ஒரு உயிர் சக்தி பொருளை ஊடகமாக வைத்து உயிர்களை ஈர்க்கிறது. அதற்காக அந்த பழத்தை வாசனைமிக்கதாக. வண்ணம் மிக்கதாக. சுவைமிக்கதாக. சத்து மிக்கதாக. வைத்துக் கொண்டு தனது விதையை பரப்ப வேறொன்றின் உதவியை லாவகமாக பெறுகிறது.
ஆனால் உங்கள் வீட்டில் வளர்த்த ஆடு மாடு கோழி நாய் இவைகளின் இனப் பெருக்கம் உங்களின் உதவியால் நடைபெறுவது இல்லை. எனவே அவை உங்களை ஈர்க்கவும் வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இடையூறு ஏற்படுத்தாமல் இருந்தாலே அதுக்கு போதும். அதை கொன்று தின்பது அதற்கு எந்த வித நன்மையை தராது மாறாக அண்ட இயக்கத்தில் குறிபிடதக்க மாற்றம் உங்களால் நிகழ்த்தபடுகிறது.
ஏனென்றால் இங்குள்ள அனைத்தும் அண்ட இயக்கத்தில் ஏதோ ஒரு முக்கிய பங்கை வைத்து செயலாற்றுகிறது.
ஆனால் தாவரங்கள் அடுத்த உயிர்களை வைத்து தனது இனத்தை விருத்தி செய்ய மற்ற உயிர்களை சார்ந்து வாழ்கிறது. அதற்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகதான் நம்மை தூண்டுவதற்காக உயிர்களுக்கு உணவை தருவது போல ஈர்த்து அதன் காரியத்தை சாதித்துக் கொள்கிறது.
எந்த ஒரு இயக்கத்தையும் நாம் தடை செய்து நமக்கான உணவுக்காக பயன்படுத்துவது #புலால்
ஒரு இயக்கத்தில் இருந்து கிடைக்கும் சன்மானத்தைக் கொண்டு நமது உணவு தேவையை பூர்த்தி செய்து உதவுவது அல்லது உபத்திரம் செய்யாமலாவது இருப்பது #சைவம்
இதில் தாவரங்கள் அழிக்கபட்டு உண்பதும் கூட புலால்தான்.
இந்த பதிவின் மூலமாக நீங்கள் சைவத்தை உண்ண வேண்டும். அல்லது இதைத்தான் உண்ண வேண்டும் என்று நான் எதையும் வற்புறுத்தி கூறவில்லை. அது உங்கள் உரிமை. இல்லை உரிமை என்ற வார்த்தையை உபயோகிப்பது சரியானது இல்லை அது உங்கள் இஷ்டம். ஆனால் இங்கு உயிர் வாழ அனைத்துக்கும் உரிமை உள்ளது.
கா பா
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
இதுவரை அசைவமாக இருந்தாள்   விரைவில் அனைவரும் சைவத்திற்கு மாறுவோம்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...