2. சக்கரையும், உப்பும் பாக்குறதுக்கு ஒரே மாதிரிதான் இருக்கும். அதனால நீங்க யாரை நம்புறீங்க அப்படீங்கிறதுல ரொம்ப கவனமா இருங்க
.
.
3. குறைகுடம்தான் கூத்தாடும்! மண்டையில மசாலா இல்லாதவன்தான் ரொம்ப சத்தம் போடுவான்.
4. மகிழ்ச்சி அப்படீங்கிறது ஒரு மனநிலை!
5. தைரியமா இருங்க: ஒருவேளை உங்களுக்கு தைரியம் இல்லைன்னா, ஒன்னும் பிரச்சினையில்ல. தைரியம் இருக்குற மாதிரி நடிக்கவாவது செய்ங்க, எப்படியாவது பொழச்சிக்கலாம்.
6. நம்மகிட்ட இருக்குறது ஒரு வாழ்க்கைதான். அதனால உங்க மனசுக்கு எது சந்தோஷம் கொடுக்குதோ அதை பண்ணுங்க
7. பள்ளி, கல்லூரியில மாணவர்கள் எல்லாரும் ஒரே வகுப்புலதான் படிக்கிறாங்க. ஆனா அவங்க எதிர்காலம் என்னவோ வெவ்வேறாதான் இருக்கு. ஏன்னா, பிற்காலத்துல, அதில் சிலர் விஞ்ஞானி, மருத்துவர், பணக்காரன், ஆனா சிலர் ஏழை, குடிகாரன், வேலையில்லாதவன்.
8. பிரச்சினைகள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதி. அவற்றை ஒரு புன்னகையோடு எதிர்கொள்வதுதான் ஒரு சிறந்த தகுதி!
9. உலகிலேயே தப்பிக்கவே முடியாத சிறை எது தெரியுமா? நம்ம மனசுதான்!
10. வாழ்க்கையில நடக்குற எல்லா விஷயங்களிலும் இருக்குற நல்லதை பாக்குற மாதிரி உங்க மனசுக்கு பயிற்சி குடுங்க. ஏன்னா, Positivity அப்படீங்கிறது ஒரு choice! உங்க வாழ்க்கையின் மகிழ்ச்சி உங்க எண்ணங்களின் தரத்தில்தான் இருக்கு.
11. நீங்க ஓடி ஓடி உழைச்சு கஷ்டப்படும்போது உதவிக்கு யாரும் வர மாட்டாங்க. ஆனா, நீங்க ஜெயிச்சிட்டா போதும், மொத்த ஊரும் உங்க பின்னாடிதான் நிக்கும்.
12. அன்பு, அக்கரை, பாசம், உதவி, பிரதிஉபகாரம், இப்படி அடிப்படையான விஷயங்களுக்காக மத்தவங்ககிட்ட நீங்க கையேந்தினா, உங்களை நீங்களே அவமதிக்கிறதா அர்த்தம். அதனால இனிமே அப்படிப் பண்ணாதீங்க.
13. விடாமுயற்சிதான் விசுவரூப வெற்றியைத் தரும்!
14. நம் வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளை விட சிறந்த வாத்தியார் யாருமே இருக்க முடியாது!
15. வாழ்க்கை வினோதமானது. ஏன்னா, நீங்க இந்த உலகத்துக்கு வரும்போது ஒன்னுமில்லாமதான் வந்தீங்க. ஆனா, உங்க வாழ்க்கை முழுக்க ஏதோ ஒன்னைத் தேடி ஓடிக்கிட்டே இருப்பீங்க. ஆனாலும் கடைசியில இந்த உலகத்தை விட்டுப் போகும்போது ஒன்னுமில்லாமதான் போவீங்க. அதனால, உங்க கைகளை விட உங்க ஆத்மா அதிகமா சம்பாதிக்கிற மாதிரி வாழ்க்கையில எதையாவது செஞ்சிடுங்க!

No comments:
Post a Comment