விரி விரி கணபதி காயத்ரி மந்திரம்...
முதல் யுகத்திற்கு திரேதா யுகம் என்று பெயர்.
அந்த யுகத்தில் வைசாலி சித்தர் ,விசால ரிஷி என்ற பெயரில் பிரபலமாக வாழ்ந்து வந்தார்.
அவர் பேராவூரணி அருகில் உள்ள சேதுபாவா சத்திரம் என்ற ஊரில் இருக்கும் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் தோன்றியவர்.
இவர் வைசாலி என்ற நாட்டின் மன்னனுக்கு அந்தக் காலத்தில் ராஜரிசியாக இருந்தவர்.
பத்து முகம் கொண்ட கணபதி வழிபாடு திரேதா யுகத்தில் இவர் மூலமாக பொதுமக்களுக்கு சொல்லித் தரப்பட்டது.
10 முகம் கொண்ட கணபதிக்கு விரி விரி கணபதி என்று பெயர். கணபதி அவதாரங்களில் இது மிகவும் அபூர்வமான அவதாரம் ஆகும்.
நாம் இப்பொழுது நான்காவது யுகமான கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .
பெரும்பாலான மக்கள்
பணம்
அல்லது
காம இச்சை
அல்லது
அதிகாரம்
என்ற ஏதாவது ஒன்று அல்லது இரண்டின் பின்னால் பேய் வேகத்தில் ஓடிக் கொண்டு இருக்கும் சூழ்நிலை இருக்கிறது.
எந்த ஒரு தெய்வத்தின் உபாசனையை செய்ய ஆரம்பித்தாலும் அல்லது தீட்சை வாங்கிவிட்டு , தினமும் அந்த தீட்சை மந்திரத்தை ஒரு மணி நேரம் மட்டுமாவது ஜெபித்து வந்தாலும் அந்த தெய்வத்தின் அனுக்கிரகம் நமக்கு சில வருடங்களில் கிடைத்து விடும். அதை நமது ஐம்புலன்களால் உணர முடியும் அல்லது கனவில் சில தெய்வீக காட்சிகள் மூலமாக உணர்ந்து கொள்ள முடியும்.
அவ்வாறு கிடைத்த அனுக்கிரகம் நமக்கு இந்த பிறவி முழுவதும் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கணபதி அவதாரங்களில் ஏதாவது ஒரு அவதாரத்தின் அருளை பெற முயற்சி செய்ய வேண்டும்.
இங்கே விரி விரி கணபதியின் காயத்ரி மந்திரத்தை நம்முடைய சின்ன வாத்தியார் என்ற சத்குரு ஶ்ரீ ல ஶ்ரீ வெங்கட்ராம சுவாமிகளின் அருளால் உங்களுக்கு தெரிவிக்கின்றோம்
ஓம் தத் கணநாதாய வித்மஹே
சாலபுவன கணேசாய தீமஹி
தன்னோ விரி விரி கணபதி ப்ரசோதயாத்

No comments:
Post a Comment