கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் = பப்பாளி
ஜோதிடத்தில் கண்ணுக்கு அதிபதியாக சூரியன் வருகிறார். சூரியன் வெளிச்சக்கிரகம்.
சூரிய பகவானின் நிறமாக ஆரஞ்சு நிறம் சொல்லப்படுகிறது.
சூரிய பகவானின் ஆளுகைக்கு உட்பட்ட உடல் பாகமாக வயிறு பகுதி (அதில் உள்ள குடல் மற்றும் கல்லீரல் ) சொல்லப்படுகிறது.
கண் பார்வை நன்றாக இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பது மிக முக்கியம்.
விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரட்டின் போன்றவை கண் பார்வைக்கு மிகவும் முக்கியம்.
ஆரஞ்சு நிறம் மற்றும் விட்டமின் ஏ, பீட்டா கரட்டின் உள்ள பழம் பப்பாளி பழம்.
அதிகம் பழுக்காத பப்பாளி பழத்தை எல்லோரும் எடுத்துக் கொள்ளலாம். (கர்ப்பிணி பெண்கள் தவிர).
பப்பாளி பழம் எடுப்பதனால் உடலில் சூரிய பகவானின் காரகத்துவமான வெப்பம் அதிகரிக்கும் அதனால் ஜீரண மண்டலங்கள் பலப்படும்.
கண்களுக்கும் கல்லீரலுக்கும் மிகவும் தொடர்பு உண்டு. இந்த இரண்டு உறுப்புகளும் சூரிய பகவானின் ஆதிக்கத்திலும் வருகிறது.
சூரிய பகவானின் தன்மை மற்றும் உறுப்புகளுடன் தொடர்புடையது பப்பாளி பழம்.
பப்பாளி பழத்தை சூரியனின் ஆற்றல் மிகுந்த பகல் நேரத்தில் மட்டுமே எடுக்க வேண்டும்.
பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் சூரியனுடைய காரகத்துவமும், கண்ணும், கல்லீரலும் பலப்படும்.
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வதை காட்டிலும் கண் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது சூரிய நமஸ்காரமும், பப்பாளி பழமும் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்தும் ஆத்ம பலத்தை அதிகரிக்கும்.

No comments:
Post a Comment