Wednesday, 28 January 2026

கேட்டதை கொடுக்குமா இந்த பிரபஞ்சம்...


 கேட்டதை கொடுக்குமா இந்த பிரபஞ்சம்...

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான தந்தை ஈசன் வசிக்கும் இடமே பிரம்மாண்டம் எனப்படுகின்றது. அதாவது பிரம்ம அண்டம் இதை இணைத்து பிரம்மாண்டம் என்று சொல்லிவிட்டார்கள். இன்னொரு வகையில் இதை பிரம்ம தத்துவம் என்றும் கூறலாம். நாம் வாழும் இந்த பூமியில் பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்களுக்கு இடையே சிறிய புள்ளியாக தோன்றக் கூடிய இந்த பூமியில் தான் நாம் அனைவரும் வசித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பூமியானது மனிதர்களுக்கு மட்டுமின்றி ஜீவஜந்துகளுக்கும் வாழ்வாதாரமாக உள்ளது.மேலும் இந்த பிரபஞ்சத்தில் வேறு உலகம் உள்ளதா என்று விஞ்ஞானம் ஆராய்கின்றது. ஆனால் கடவுளின் கோட்பாடு என்ன? மனிதன் சத்தியமாக நேர்மையாக இருக்கும் பொழுது இந்த உலகம் ஒரு தூய்மையான சொர்க்கமாக இருந்தது எப்பொழுது மனிதனுடைய எண்ணங்கள் தீயவற்றிற்குட்பட்டும் உண்மைக்கு புறம்பான விஷயங்கள் மற்றும் பேராசை இச்சை இவைகளால் உலகம் கீழான நிலை அடையும் பொழுது இந்த உலகம் வாழ தகுதியற்றதாக மாறுகின்றது. வாழத் தகுதியற்ற உலகத்தில் தான் மனிதன் தேவைகள் மிகுந்தவனாக உள்ளான். எனவே அவனுடைய தேவைகள் யாவும் நிறைவேறுவதற்காக விதவிதமான சடங்குகளை செய்ய ஆரம்பிக்கின்றான்.விதவிதமானவழிபாடுகள் தேவதைகளுக்கு பலி கொடுத்தல் நேர்த்திக்கடன் இத்யாதி... இத்யாதி... இதிலும் சிலர் இப்படியும் கூறுகின்றார்கள் பிரபஞ்சத்தை நோக்கி அதிகாலை நேரத்தில் எதைக் கேட்டாலும் அதை பிரபஞ்சம் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்று கூறுகிறார்கள். நாம் இந்த இடத்தில் யோசிக்க வேண்டியது பிரபஞ்சத்தை படைத்தவர் கொடுக்கின்றாரா? அல்லது படைப்பான பிரபஞ்சம் கொடுக்கின்றதா? இந்த உலகை படைத்தவர் யார் என்பதை தெரியாத காரணத்தினால் மனம் இப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணுகின்றது. அதாவது எனக்கு இந்தந்த ஆசைகள் நிறைவேற வேண்டும். இது என்னிடம் கிடைக்க வேண்டும் இப்படி. இந்த ஆசைகள் நிறைவேறுகின்றதா என்று கேட்டால் உங்களுடைய எண்ணம் எவ்வளவு தூய்மையாக இருக்கின்றதோ. உங்களுடைய நடத்தையில் எவ்வளவு நேர்மை இருக்கின்றதோ. தொடர்பில் எவ்வளவு நாணயம் இருக்கின்றதோ அப்படிப்பட்ட ஒரு மனிதன் அதிகாலை நேரத்தில் தன்னுடைய எண்ணங்களை உற்பத்தி செய்யும் பொழுது அந்த எண்ணமானது பலனளிக்கக் கூடியதாக தன்னால் மாறுகின்றது. எனவே நல்ல எண்ணங்கள் அதிகாலை நேரத்தில் ஒரு விதையைப் போல செயல்பட ஆரம்பிக்கின்றன. அந்த நேரத்தில் விதைக்கும் விதையானது மிகப்பெரும் பலன்களை தரக்கூடிய ஆற்றல் மிக்கதாக மாறுகின்றது. எனவே நேர்மை நாணயம் உண்மை இதெல்லாம் எதற்காக சொல்கின்றோம் என்றால் உலகில் அப்படிப்பட்டவருடைய எண்ணங்கள் தான் பலனை மிகுதியாக தரக்கூடிய விதையாக இருக்கின்றது. இதைத்தான் நல்லதே நினை நல்லதே நடக்கும் என்றார்கள். ஆனால் அதை நினைக்கக்கூடிய நேரம் முழு நாளுக்கும் ஆதாரமான பிரம்ம முகூர்த்தம் என்பதை சொல்ல மறந்துவிட்டார்கள்.சரி,இந்த பிரம்ம முகூர்த்தத்துக்கும் பிரபஞ்சத்திற்கும் என்ன தொடர்பு? நாம் ஏற்கனவே சொன்னது போல இந்த பரந்த பிரபஞ்சத்திற்கு மேலே இருப்பது தான் பிரம்மாண்டம் எனக்கூடிய பிரம்ம தத்துவம். இந்த மேலான பிரம்ம தத்துவமானது இந்த பிரபஞ்சத்தின் ஒளி கூட தொட முடியாத ஒரு இடத்தில் செம்பொன் நிறமாக பிரகாசமாக இருக்கின்றது. இங்கிருந்து தான் ஆத்மாக்கள் பூமியை நோக்கி தனது பாகத்தை நடிப்பதற்காக வருகின்றது. ஆக, ஒருவர் காலையில் எழும்பொழுது தனது ஆத்ம உணர்வு இல்லாவிட்டாலும் பிரம்மாண்டத்திலிருந்து வந்திருக்கக்கூடிய ஆத்மாவானது எங்கிருந்து வந்தோம் என்பதை அறியாமல் தனது சுபமான விருப்பத்தை அதிகாலையில் வெளிப்படுத்துகின்றது. அப்படி அது வெளிப்படுத்தும் போது ஆத்மாக்கள் எந்த மேலான பிரமாண்டத்தில் இருந்து வந்ததோ அதே பிரம்மாண்டத்தில் சிறிய புள்ளியாக பிரகாசிக்கும் ஆத்மாவை போலவே நட்சத்திரம் போன்று பிரகாசிக்கக்கூடிய பரமாத்மாவும் அங்கே தான் வசிக்கின்றார். அதிகாலையில் எழுந்து சங்கல்பம் செய்பவருடைய எண்ணங்கள் தெரிந்தோ தெரியாமலோ அந்த பரமாத்மாவின் இருப்பிடத்தை அடைந்து தந்தை பரஞ்சோதியான அந்த மேலான ஈசனின் மனதை அடைகின்றது.மேலும் தந்தை ஈசனுடைய மனதை எப்பேர்ப்பட்டவர்களுடைய எண்ணம் அடைய முடியும். யார் சுத்தமும் ஒழுக்கமும் உண்மையும் நிறைந்த உன்னதமான வாழ்வை வாழ்கின்றார்களோ அல்லது இனிமேல் உறுதி எடுத்து வாழ முயற்சிக்கின்றார்களோ அவர்களது எண்ணங்கள் அவர்களது செயலுக்கு ஏற்றார் போல வரிசைகிரமமாக அவரை சென்றடைகின்றது.அந்த எண்ணங்களுக்கான பலன்களை அவர் மேலிருந்து வழங்குகின்றார் எனவே, சங்கல்பம் செய்பவருடைய எண்ணமானது பலிதமாகி விடுகின்றது.சங்கல்பம் செய்தவர் என்ன நினைத்து விடுகின்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் தான் நமக்கு கொடுத்துவிட்டது பிறகு அவர் என்ன செய்வார் மற்றவருக்கும் கூறுவார் பிரபஞ்சத்திடம் கேட்டால் உங்களுக்கு யாவற்றையும் கொடுக்கும். இதில் சிரிப்பிற்கான விஷயம் என்னவென்றால் கொடுக்கும் பரமாத்மாவோ மேலே இருக்கின்றார். அவர் வழங்கக்கூடிய வள்ளலாகவும் இருக்கின்றார். ஆனால், ஜடமான இந்த பிரபஞ்சம் கொடுத்தது என்று மனிதன் நம்பி கொண்டிருக்கின்றான்.என்ன சொல்வது? இதை படைத்தவருடைய விளையாட்டு என்று சொல்வதா? அல்லது இந்த மனித நாடகத்தின் விதியென்று சொல்வதா? தன்னை ஆத்மா என்று உணராத மனிதன் தான் வாழும் பிரம்மத்தைப் பற்றி அறியாத போது இந்த பிரபஞ்சத்தை பற்றி மட்டும் எப்படி அறிவான்? அதில் வாழும் பரம தந்தை ஜோதியான ஈசனை பற்றி எப்படி அறிவான்? அவருடைய மகன் நான் ஆத்மா என்பதை எப்படி உணர்வான்?இதையெல்லாம் உணர்ந்தால் அவனுக்கு புலப்பட ஆரம்பிக்கும் அனைத்தையும் மேலே இருந்து வழங்குபவர் தந்தை ஈசன். அப்பொழுது தான் அவன் படைத்தவருக்கு மனதார நன்றி கூறுவான் அவர் படைத்த இந்த படைப்பை மனதார வாழ்த்துவான். நாமனைவரும் பிரபஞ்சத்தின் நாயகன் ஆன அந்தபரம தந்தை ஈசனுடன் தன்னுடைய மனதால் தொடர்பு கொண்டு நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்வை என்றும் வாழ்வோமாக. நல்லது.வாழ்த்துக்கள். ஓம்சாந்தி. அந்த மேலான பிரம்மாண்டத்தில் வசிக்கும் ஜோதியான தந்தை ஈசனுடன் தொடர்பு கொள்ளும் இராஜயோகத்தை முற்றிலும் இலவசமாக கற்று மகிழ இன்றே அருகிலிருக்கும் பிரம்மாகுமாரிகள் ஆன்மீக நிலையத்தை தொடர்பு கொண்டு மென்மேலும் பயனடைந்து முன்னேற யாவர்க்கும் நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...