நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் :-
20. அர்ச்சுனனுக்கு கண்ணன் சாரதியாக இருந்தான்
அர்ச்சுனன் என்பது உடலின் உணர்வுகள்.
"கண்ணன்" எனும் "கண்கள்..," தான் பார்த்த உணர்வு கொண்டு சாரதியாக இருந்து உடலின் உணர்வுகளை இயக்குகின்றது.
இதை மக்கள் அனைவருக்கும் உணர்த்திடும் நிலையாக ஞானிகள் அன்று "கண்ணன்.., அர்ச்சுனனுக்குச் சாரதியாக இருந்தான்..," என்று காவியமாக உரைத்தனர்.
21. காசிக்குச் சென்றால்.., பாவம் போகுமா?
பாவத்தைத் தொலைக்க இராமேஸ்வரம், காசி கங்கை போகிறேன் என்று சொல்கிறார்கள். அப்படிப் போனால் நமது பாவங்கள் அனைத்தும் போய்விடுமா?
நமக்குள் அருள் உணர்வுகளைப் பெருக்கும் பொழுதுதான் பாவங்கள் தொலையும். மகிழ்ச்சியின் உணர்வுகள் பெருகும்.
22. சேவற்கொடியோன் - விளக்கம்
அதிகாலையில் கூவி, அன்று விடியப் போவதை முன் கூட்டியே அறிவிக்கும் சேவலைப் போன்று
நமது ஆறாவது அறிவானது "நாளை என்ன நடக்கும்..,?" என்பதை முன் கூட்டியே உணர்த்தும் தன்மை வாய்ந்தது.
ஆகையால், ஆறாவது அறிவின் வடிவான "முருகனை சேவற்கொடியோன்..," என்று காரணப்பெயர் வைத்து அழைத்தனர் ஞானிகள்.
23. "தீமைகளை வேகவைத்தால்..," அவை வளரமுடியாது
தாவர இன வித்துக்களை "வேக வைத்து..," நிலத்தில் போட்டால் அவ்வித்துக்கள் முளைப்பதில்லை.
இது போன்றே தீமை தரும் உணர்வுகளை நாம் அறியாது நுகர நேர்ந்தால் உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணினால், நகர்ந்த அந்த அருள் உணர்வுகள் நாம் நுகர்ந்த நஞ்சான உணர்வுகளை ஒடுக்குகின்றது.
தீய உணர்வுகளை துருவ நட்சத்திரத்தின் அலைகள் வேக வைத்துவிடுகின்றது.
நஞ்சான உணர்வுகள் நமக்குள் விளைவதில்லை.
24. தாய் தந்தையரின் அருளாசி இல்லாது நமக்கு உயர்வு இல்லை
"தாயின் அன்பினாலும்.., தந்தையின் அரவணைப்பினாலும்.., நாம் வளர்ந்தோம்".
அந்தத் தாய் தந்தையரின் அருளாசி இல்லாமல் நமக்கு உயர்வு கிடையாது. உயர்ந்த சக்தி பெறமுடியாது.
"தாய்.., தன் குழந்தை உயர்ந்த நிலை பெறவேண்டும்" என்று "சதா" தன் எண்ணத்தை வலுப்படுத்தியவர்.
ஆகவே, தாய் தந்தையரை நாம் முதல் தெய்வங்களாக வணங்கி நம்முள் நல் உணர்வின் எண்ணங்களை வலுப்படுத்துவோம்.
நம் தாய் தந்தையர் தெய்வ சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம்.

No comments:
Post a Comment