Thursday, 29 January 2026

முருகன் வள்ளி தெய்வானையை மணம் முடித்ததன் காரணம்....


 முருகன் வள்ளி தெய்வானையை மணம் முடித்ததன் காரணம்....

வேதக்கடவுள்களில் முருகன் அக்னியின் வடிவமாகப் பார்க்கப்படுகிறார். அக்னி பகவான் விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலமாக இருப்பவர். முருகனும் அப்படித்தான். இந்த மண்ணுலகில் விண்ணுலகை சேர்த்த தேவர்களுக்காக சேனாதிபதியாய் இருந்து சூரனை வதம் செய்தார்.
சுபகாரியம் நடக்கும் வீடுகளில் நீங்கள் ஒரு யாகம் வளர்ப்பதை பார்க்கலாம். எந்த ஒரு விஷேஷத்திற்கும் யாகம் மிக மிக அவசியம். அந்த யாகம் தான் அந்த சடங்குக்கே ஆதாரம். அங்கு அக்னி சாட்சி மட்டுமல்ல, நாம் யாகத்தில் இடும் பொருட்களை மேலே விண்ணுலகிற்கு எடுத்து செல்லும் வாகனனமே அதுதான்.
அவன்தான் மண்ணிலிருக்கும் நமக்கும் விண்ணிலிருக்கும் தெய்வத்திற்கும் பாலம் அமைக்கிறான். கோபம் கொண்டு பகைவர்களை சுட்டெரித்தாலும் அந்த அக்னி பார்க்க மிக அழகாக இருக்கும். நம் அழகன் முருகனைப் போல.
விண்ணுலகின் அதிபதி தேவேந்திரனின் மகள் தேவஸேனா அல்லது தெய்வானை. எப்படி அக்னியை முருகனாக சொல்கிறோமோ, அதுபோல விண்ணுலகை தேவசேனையாக கூறுகிறோம்.
மண்ணுலகில் ஒரு குழுவின் தலைவனுக்கு மகளாக பிறந்தவள் வள்ளி. வள்ளியானவள் மண்ணுலகின் வடிவம். இப்போது இந்த இருவரையும் இணைக்கும் தெய்வம்தான் அக்னியின் வடிவமான முருகன். தெய்வயானை விண்ணுக்கு வடிவம். வள்ளியோ பூமியின் வடிவம். இந்த இருவரையும் மணமுடித்து இணைக்கும் சுப்ரமணியஸ்வாமி அக்னியின் வடிவம்!
வேதங்களில் நாம் வணங்கும் தெய்வங்கள் வேறு பெயர்களில் அழைக்கபடுகிறது. சூரியன் ஆதித்யனாக, சிவன் ருத்ரனாக, நாராயணன் இந்திரனாக, அழைக்கப்படுவது போல கணபதி அல்லது விநாயகர் தான் பிரம்மா. அதனால் தான் விநாயகர் மட்டும் பூணூலுடன் இருப்பார்.
எந்த திருமணமுமும் அந்தணரை வைத்து தான் செய்ய வேண்டும். நம் நாயகன் முருகனோ வள்ளியை காதல்மணம் அல்லவா முடிக்கிறார். தனது அண்ணனை மறந்து விட்டார். காதல் கைகூடவில்லை என்றபோது, அண்ணனை நினைத்தார். அண்ணன் விநாயகர் யானை ரூபத்தில் அங்கு வந்து சேர்த்தார். அந்த இடம் அதாவது வள்ளியின் ஊர் கதிர்காமம். அது இலங்கையில் உள்ளது.
அங்கே அண்ணன் கணபதி யானை ரூபத்தில் வந்து தம்பி முருகனையும் வள்ளியையும் இணைத்தார். ஒரு அந்தணன் யாகம் வளர்த்து அக்னியையும் இரு உலகையும் இணைப்பது போல.
ஓம் முருகா போற்றி 🙏🏻

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...