Thursday, 22 January 2026

காற்று இருக்கும் வரை தான் படகின் பயணம்


காற்று இருக்கும் வரை தான் படகின் பயணம். மூச்சு காற்று இருக்கும் வரை தான் நம் வாழ்க்கை பயணம்.
வீண் பேச்சுக்கள் வேண்டாம். கோபமும் வேண்டாம். எதிர் பார்ப்புகளின்றி அன்பு செலுத்தங்கள்.
இறைவன் விட்ட வழியிலேயே பயணம் செய்தால் எப்போதும் நிம்மதி தான்.
தன்னம்பிக்கை நன்னம்பிக்கையோடு தெய்வ நம்பிக்கையும் வேண்டும்.
தன்னம்பிக்கையையும் நன்னம்பிக்கையையும் இழந்தவர்கள் தங்களையும் அறியாமலேயே தெய்வ நம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள்.
தெய்வ நம்பிக்கையை இழந்த ஒருவன் எல்லாவற்றையும் இழந்தவனாக ஆகிவிடுகிறான்.
தெய்வம் என்பது இந்துக்கள் வழிபடுகிற பரமசிவன், பார்வதி, முருகன், கணபதி, அனுமார் போன்ற தெய்வங்களையோ, முஸ்லீம்கள் வழிபடுகின்ற அல்லாவையோ, கிறிஸ்துவர்கள் வழிபடுகிற இயேசுநாதர், கன்னிமேரி போன்ற தெய்வங்களையோ, மற்ற மதத்தினர்கள் வழிபடுகின்ற எண்ணற்ற தெய்வங்களையோ சொல்லவில்லை.
பெயர்களையும் வடிவங்களையும் உடைய இந்தத் தெய்வங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையில், எந்த ஒரு பெயரும் வடிவமும் அற்றதாய், எங்கும் நிறைந்ததாய், தோற்றம் - இறுதி இல்லாததாய், அனைத்து உலகங்களுக்கும் ஆதாரமாய், அனைத்து ஆற்றல்களையும் பெற்றுள்ளதாய் உயிர்க்குலங்கள் அனைத்திற்குள்ளேயும உயிருக்கு உயிராய் ஒளிர்வதாய் அன்பும் அறிவும் ஆனந்தமுமே தன் வடிவமாகக் கொண்டதாய் விங்குகின்ற பரம்பொருள் எதுவோ, அதையே தெய்வம் என்று சொல்லுவோம்.
நாம் சொல்லுகிற இந்தத் தெய்வத்தை எவரும் தங்கள் கண்ணால் கண்டதில்லை.காணவும் முடியாது. ஆனால், பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டே இந்த உலகத்திற்கு ஒளியையும் சக்தியையும் இடைவிடாமல் வழங்கிக் கொண்டிருக்கின்ற கதிரவனைப் போல,

நாம் குறிப்பிடுகிற இந்த இறைவனும் நம்முடைய மனம், வாக்கு, காயம் ஆகிய எல்லாவற்றிற்கும் அப்பால் இருந்து கொண்டு, தன்னுடைய கருணை நோக்கினால் நம்மை இடைவிடாமல் கண்காணித்தும் காப்பாற்றியும் வருகிறார் என்ற உணர்வு இருக்கிறதே, அந்த உணர்வே உண்மையான தெய்வம். அந்த உண்மைத் தெய்வத்தின் மீது எப்போதும் நமக்கு நம்பிக்கை வேண்டும்.

No comments:

Post a Comment

ஒரு பாம்பு ஒரு குட்டிக் குரங்கு

 ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்த...