காவல் தெய்வம். இவர் பெரும்பாலும் கிராம எல்லைகளிலும், சாலையோரங்களிலும், வயல்வெளிகளுக்கு அருகிலும் ,இவருக்கு ஆலயம், பீடம் அமைத்து வழிபடபடுகின்றார். கிராமத்தை தீமைகளிலிருந்து காக்கும் தெய்வம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் கருப்பண்ணசுவாமியை வழிபடுகின்றனர்.
கையில் வாள் அல்லது தண்டம் போன்ற ஆயுதங்கள் காட்சி தருவார்.. சில இடங்களில் கருப்பு நாய் , வெள்ளை குதிரை அவருடன் இணைந்து காணப்படும்.
மக்கள் நம்பிக்கைப்படி, கருப்பண்ணசுவாமி நீதியை உடனே வழங்கும் தெய்வமாக கருதப்படுகிறார். பொய், அநியாயம், திருட்டு போன்ற செயல்கள் நடந்தால், கருப்பண்ணசுவாமியின் கோபம் உடன் தண்டித்துவிடும், உண்மை பேசுபவர்களுக்கு அவர் துணை நிற்பார். அதனால் பல கிராமங்களில் சத்தியம் செய்வதற்கும், உண்மை உறுதி செய்யவும் இவரை சாட்சியாகக் கொண்டு வழிபடும் வழக்கம் உள்ளது.
பல குடும்பங்களுக்கு இவர் குலதெய்வமாகவும், விளங்குகிறார்.
இவருக்கு பெரும்பாலும் ஆடு அல்லது கோழி பலியிட்டு, சுருட்டு மற்றும் மது (சாராயம்) படைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
சில இடங்களில் இவர் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் 'சங்கிலி கருப்பசாமி' என்ற பெயரில் வழிபடப்படுகிறார். அழகர் கோவில் (மதுரை) இங்குள்ள 'பதினெட்டாம்படி கருப்பசாமி' மிகவும் புகழ்பெற்றவர். கள்ளழகர் கோயிலின் நுழைவாயிலில் உள்ள 18 படிகளே கருப்பசாமியாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம் மற்றும் சோழவந்தான் போன்ற பகுதிகளிலும் இவருக்குப் பெரிய கோயில்கள் உள்ளன.
இவரை இடத்திற்கு ஏற்றவாறு முத்துக்கருப்பன், சங்கிலி கருப்பன், பெரிய கருப்பன், சின்ன கருப்பன், மற்றும் மலையாள கருப்பன் போன்ற பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
உள்ளூர் திருவிழாக்களின் போது, அருள்வாக்கு சொல்லுதல் மற்றும் வேட்டைக்குச் செல்லுதல் போன்ற சடங்குகள் இவருக்கு மிகச்சிறப்பாக டத்தப்படுகின்றன.
ஹரி ஓம் மஹா காளி !

No comments:
Post a Comment