வெள்ளிக்கிழமை வழிபாடு..!!
வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் பலர் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம் என்பது நம்பிக்கை.
பெரும்பாலானோர், வாரத்தில் இருக்கும் 6 நாட்களில், வீட்டில் விளக்கு ஏற்றாவிட்டாலும், இந்த வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது உண்டு.
வழிபடும் முறை:
வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் நீராடிவிட்டு, வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டு தெய்வீக மணம் கமழச் செய்ய வேண்டும். பிறகு அம்பாள் படத்திற்கோ அல்லது விக்கிரகத்திற்கோ மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்வதுடன், தீபாராதனைக் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து கருணையுள்ளம் கொண்ட அம்பிகையை ஆராதித்து வந்தால், வீட்டில் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். தரித்திர நிலை மாறும்.
மேலும், வெள்ளிக்கிழமையில், புற்று வடிவத்தில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் உன்னதமானது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில், ராகுகாலத்தில், அம்பாளை நினைத்து விளக்கேற்றி பூஜைகளைச் செய்யுங்கள். தடைபட்டுவந்த மங்கள காரியங்கள் விரைவில் நடந்தேறும். மங்காத புகழையும் செல்வத்தையும் தந்து மகிழ்விப்பாள் அம்பிகை.
வெள்ளிக்கிழமைத்தோறும் குபேர விளக்கில் தாமரை திரி இட்டு விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது. தொடர்ந்து ஒருவர் வெள்ளிக்கிழமை விரதத்தை கடைபிடித்து வந்தால் லட்சுமி, முருகன், சுக்கிரன் ஆகிய மூவரின் அருளையும் ஒருங்கே பெறலாம்.
வழிபாட்டின் நன்மைகள்:
இந்த வழிபாட்டின் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு நிம்மதியான சூழ்நிலை உண்டாகும்.
சுபகாரிய தடை அல்லது குழந்தைகள் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரியாகிவிடும்.
பொருளாதார கஷ்டங்கள் நீங்கி வளமான வாழ்க்கை அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம் மற்றும் அமைதி நிறைந்திருக்கும்.
எதிர்பாராத நல்ல வாய்ப்புகள், அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

No comments:
Post a Comment