Friday, 23 January 2026

விநாயகரும் , விருட்சங்களும்


 விநாயகரும் , விருட்சங்களும்


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் என்று சொல்லும் பிள்ளை விநாயகர் எந்த இடத்திலும் காட்சியளிப்பவர். எளிமையான இடத்திலும் ஏழ்மையான மனிதன் வணங்க எழுந்தருள்வார்.
🌠 மரத்தடியில் குடிக்கொண்டிருக்கும் இவருக்கு அனைவரும் சமமே. இவரை வணங்கினால் எந்த ஒரு தீமையும் அருகே வராது. வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதன்முதலில் இவரை தான் வணங்க வேண்டும்.
🌠 எந்த ஒரு செயலை செய்ய தொடங்கும் முன்னும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கினால் அந்த செயல் ஜெயமாகும். எந்த மரத்தின் அடியில் இருக்கும் பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
🌟 வன்னி மரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட திருமணத்தடை நீங்கும்.
🌟 புன்னை மரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட தம்பதியர் ஒற்றுமை ஆவர்.
🌟 மகிழமரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட இடமாற்ற பிரச்சனைகள் தீரும்.
🌟 மாமரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட கோபம், பொறாமை நீங்கி வியாபாரம் செழிக்கும்.
🌟 வேப்ப மரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட மனம் போல் மாங்கல்யம் கிடைக்கும்.
🌟 ஆலமரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட தீராத வியாதி தீரும்.
🌟 அரசமரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட விளையுள் கூடும்.
🌟 வில்வமரத்தின் அடியில் குடிக்கொண்டிருக்கும் விநாயகரை வழிபட பிரிந்த தம்பதியர் இணைவர்.
எங்கும் எதிலும் ஜெயமுண்டாக பிள்ளை விநாயகரை வழிபடவும். வாழ்வில் ஜெயமுண்டாக கஜமுகனை வழிபடுவோம்.

No comments:

Post a Comment

ஒரு பாம்பு ஒரு குட்டிக் குரங்கு

 ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்த...