Friday, 23 January 2026

பூஜை அறையில் வைக்க வேண்டிய சுவாமி படங்கள்!...

 பூஜை அறையில் வைக்க வேண்டிய

சுவாமி படங்கள்!...

...
பூஜை அறையில் என்னென்ன சுவாமி படங்களை வைக்க வேண்டும் என பலருக்கும் சந்தேகம் உண்டு. சாஸ்திரபடி பூஜை அறையில் என்னென்ன சுவாமி படங்கள் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
பூஜை அறையில் இருக்க வேண்டிய சுவாமி படங்கள் :
✽ விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, லலிதாம்பாள் மற்றும் அஷ்டலட்சுமி. இது தவர பானலிங்கம், சிவலிங்கம். (ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது) நமது முன்னோர்கள் படங்கள் தனியாக இருக்கவேண்டும். பூஜை அறையில் சுவாமிக்கு நிகராக வைக்க கூடாது.
✽ ஒரு ஜான் கட்டை விரல் அளவுக்கு மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.
✽ மேரு, ஸ்ரீ சக்ரம் மற்றும் யந்திரங்கள் இவைகளை முறைப்படி உபதேசம் வாங்கிக்கொண்டு ஜபம், தியானம் செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும். இல்லையேல் சில யந்திரங்கள் விபரீதமான கெடு பலன்களை தரும்.
✽ வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும். சங்கை காலியாக வைக்க கூடாது. சங்கின் நுனி கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.
பூஜை அறையில் இருக்கக் கூடாத சுவாமி படங்கள் :
✽ கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி படம் இருக்க கூடாது.
✽ தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம் இருக்க கூடாது.
✽ தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது.
✽ சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது.
✽ நவகிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது.
✽ சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது.
✽ ருத்ர தாண்டவமாடும் படம், கொடூர பார்வை உள்ள கோபவேசமான படம், தவ நிலையிலுள்ள படங்களை வைக்க கூடாது.
✽ தலைவிரி கோலங்களில் உள்ள அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.
✽ உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ காளியம்மன், மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சநேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது. உக்கிர தெய்வங்கள் நமது குல தெய்வமாக இருக்கும் பக்ஷத்தில் அந்த தெய்வப் படம் மட்டும் வைக்கலாம். மேலும் உடைந்த படங்கள் மற்றும் சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது.

No comments:

Post a Comment

ஒரு பாம்பு ஒரு குட்டிக் குரங்கு

 ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது. மெதுவாகப் போய் அந்த...