வசியம்
மந்திரம் ஓம்ஹீம் லட்சுமி தேவியென்று
மாறாமல் குருகுருமுன் நினைவாய் நீயே அந்தமாய்ச் சொல்லியே யாணி வேரை
அறாமல் பிடுங்கியதைத் தாமரையின் நூலால் எந்திரமாய்த் திரியாக்கி வேருங் கூட்டி இயல்பாகக் கபிலைநெய்யில் மையைக் கூட்டித் தந்திரமாய்த் திலதமிட அரச ரெல்லாந்தாட்சியன்றி வசீகரமா யிருக்குந் தானே .
செங்கழுநீர் மூலத்தைப் பறிக்கும் முன்னர் ஓம் ஹீம் லட்சுமி தேவி (சீதேவிக் கொடி ஆனதால் ) என்று அதன் முன் நின்று மந்திரம் செபித்து , அதன் ஆணிவேரை அறுத்துவிடாமல் பிடுங்கித் தாமரையின் நூலால் திரிசெய்து , இந்த வேரும் சேர்த்துக் கபிலை ( குராற் பசு ) நெய்யில் மையாகக் குழப்பித் திலகம் இட்டுக் கொண்டால் மன்னர்கள் உன் வசப்படுவர் என்கிறார்.
வசீகரமா மதமத்தை மூலம் வாங்க
மந்திரத்தைக் கேள்சொல்வோ ( ம் ) மைந்தா நீதான் வசீகரஞ்சேர் கிறீணி வருணி யாரே
மதர்நாமீ சீவி வசியம் பவ்வே வசீகரங்காண் சக்காயுப் பருவம் நோக்க
வந்து நிற்கும் பருவமதில் சமூலம் வாங்கி வசீகரமா நிழலுலர்த்தித் தயிலம் வாங்கி
மைந்தனே குப்பியிலே அடைத்தி டாயே .
" கிறீணி வருணி யாரே மதர்நாமீ சீவி வசியம் பவ்வே ” எனச் சொல்லி மந்திரம் செபித்து சக்காயுப் பருவத்தை ? அடுத்து வரும் பருவத்தில் மதமத்தையைச் ( பொன்னூமத்தை ) சமூலமாய்ப் பறித்து நிழலில் உலர்த்தித் தயிலம் எடுத்துக் குப்பியிலே அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என உரைக்கிறார் .
அடைத்ததற்கு வகைகேளு பணந்தான் வாங்கி
அதிற்பாதி கர்ப்பூரம் போட்டுத் தேய்த்து புடைபுடைத்து புருமத்தியி லேதிலதந் தீட்டு
பொதுவறவே நினைத்த பெண்கள் வந்துசேரும் விடைத்தபுகழ் வெள்ளெருக்குச் சமூலம் வாங்க
வியனருக்க னுதையத்தில் கமல நூலால் உடைத்திடுவாய் தேங்காயுங் காப்புக் கட்டி
உயர்விஞ்ஞை ஆங்கேங் கணபதியே ஆமே . ”
அடைத்த அத்தயிலத்தில் , பணவிடை அளவு எடுத்து , அதில் பாதி அளவு கர்ப்பூரம் போட்டுத் தேய்த்து , புருவ மத்தியில் திலதம் தீட்டப் பெண் வசியம் காணும் என்கிறார்.
ஆமப்பா கருஞ்செம்பை மூலந் தன்னில்
அப்பனே கன்னிநூல் தன்னால் கட்டி ஓமப்பா சோடசங்கள் செய்த பின்னை
உருவேற்று மந்திரந்தான் ஓம் ஓ மென்று சாமப்பா சாமாள ரூபி யப்பா
சாம்பவி கிறீங்கிலீங் கிறீஞ் சாதகி நாமப்பா மூன்றுநாள் சகத்திரத்தில் மூன்று
நன்றாகச் சேவித்தேதான் பிடுங்கி வந்து போமப்பா நிழலுலர்த்தித் தயிலம் வாங்கி
போட்டிடவே சகலசனம் வசியம் பாரே .
கருஞ்செம்பை மூலத்துக்குக் கன்னி நூலால் ( தாமரை நூல் . கற்றாழைக்கும் கன்னி என்ற பெயருண்டு . ஒரு மூலிகைச் செடி காப்புக் கட்டி , சோடசங்களும் செய்து " ஓம் ஓம் சாமள ரூபி ( சியாமள ரூபி ) சாம்பலி கிறீங்கிலீங் கிறீஞ்சாதகி " என மந்திரம் உருவேற்றி மூன்றாம் நாள் பிடுங்கி வந்து நிழலில் உலர்த்தித் தயிலம் எடுத்துப் பொட்டிட்டுக் கொள்ளச் சகல மக்களும் வசப்படுவர் என்கிறார்.
கருஞ்செம்பை மூலம் கருஞ்செம்பருத்தி , சித்தகத்தி , கருஞ்சித்தகத்தி என்றும் அழைக்கப்படும் . நாடு , காடு எங்கும் தன்னிச்சையாக வளரும்.
சோடசம் - சோடசோபசாரமாகும் . அதாவது மஞ்சனம், பூ கந்தம் , தூபம் , தீபம் , நீர் , அமுது , தூசு ( ஆடை ) , அடைக்காய் , ஆடி ( கண்ணாடி ), குடை , கவரி, ஆலவட்டம் , விசிறி , ஆடல் , வாச்சியம் எனும் பதினாறு உபசாரங்கள் செய்தலாகும் .
. பாரப்பா வெண்குன்றி மூலம் வாங்க
பாங்கான அமாவாசை பூசை செய்து நேரப்பா மந்திரந்தான் வம்மம் வசவிச
நிறைமிருக வசீகரி ஓமென்று போற்றிப் பேரப்பா பிடுங்கியதை வாயி லிட்டுப்
பேசவே மிருகவசீ கரங்கள் காணும் ஆரப்பா பொற்றலைச் சமூலம் வாங்க
ஆச்சரிய மந்திரத்தைக் கேளு கேளே .
வெண்குன்றி மூலம் வாங்க அமாவாசை அன்று பூசை செய்து, “ வம்மம் வசவிச நிறைமிருக வசீகரி ஓம் ” என மந்திரம் செபித்துப் பிடுங்கி வாயிலிட மிருகங்கள் வசப்படும் என்கிறார் .
அடுத்து , பொற்றலைச் சமூலம் ( கையாந்தகரை எனும் மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகும் ) பறிக்க மந்திரம் கூறுகிறேன் என்கிறார் .
பேசவே மிருகவசீ கரங்கள் காணும் - நாட்டில் மன்னர் , மக்கள் , பெண்டிரை வசியப்படுத்தியது போல , காட்டில் மூலிகைகள் தேடி அலையும்போது கொடிய விலங்குகளினின்றும் தம்மைக் காத்துக் கொள்ளச் சித்தர்கள் மிருகங்களை வசியப்படுத்தவும் அறிந்திருந்தனர் எனத் தெரிகிறது.
விஞ்சே என்னவொரு வெள்ளிக்காப்புக் கட்டி
வீறாக மறுவெள்ளி வாங்கும் போது அஞ்சாதே ஓங்கிலீயுஞ் சவ்வு மஹீ
அட்சரத்தை யோதியே குளிச மாடி மஞ்சாரு முடியில்வைக்க மதன்வசீ கரங்காண்
வகையட்ட மூலிகையும் வசிய மாகும் நெஞ்சான மோகனமா மூலி தன்னை
நிகழ்த்திறேன் புத்திரரே நிகழ்த்தி றேன்கேள் .
ஒரு வெள்ளிக் கிழமை அன்று காப்புக்கட்டி , மறு வெள்ளிக் கிழமை அன்று பொற்றலைக் கையாந்தகரையைப் பறிக்கும் போது ஓங் கிலியுஞ் சவ்வுமஹீ எனும் அட்சரத்தை ஓதிக் குளிசமாடித் தலையில் வைக்க , மன்மதன் வசியமாவான் . இவ்வாறு அட்ட மூலிகையும் வசியம் செய்ய உதவும் .
ஓம் சிவ சிவ ஓம்
.
ஓம் ரீங் வசி வசி 



