"நிலாவுக்கு சொந்தமாக ஒளி கிடையாது. சூரியனின் ஒளியை தான் பிரதிபலிக்கிறது. ஆனால், நிலாவில் வெறும் மண்ணும், கல்லும் தானே உள்ளன? அவை எப்படி இவ்வளவு வெளிச்சத்தை உள்வாங்கி பிரதிபலிக்கும்...?"
மொட்டை மாடியில் வாக்கிங் போனபோது நண்பர் இந்த கேள்வியை கேட்டார்.
"அடடே சூப்பர்...நல்ல கேள்வி. சரி, நீங்க சொல்லுங்க. எந்தெந்த பொருட்கள் ஒளியை பிரதிபலிக்கும்..."?
"ஹ்ம்ம்ம்ம்...கண்ணாடி, சில்வர், தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள், பள பளவென மின்னும் பொருட்கள் தான் ஒளியை பிரதிபலிக்கும்..."
"அவ்வளவு தானா...? வேற பொருட்கள் எதுவும் ஒளியை பிரதிபலிக்காதா...?"
"இருக்கலாம். பேர் எல்லாம் எனக்கு சட்டுனு நினைவுக்கு வரல ப்ரோ..."
"அப்படியா....ஆனா, உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா..."?
"என்ன ப்ரோ..."?
"இந்த உலகத்தில் நீங்கள் எந்த பொருளை எல்லாம் உங்கள் கண்கள் மூலமாக பார்க்க முடிகிறதோ, அந்த பொருட்கள் எல்லாமே ஒளியை பிரதிபலிக்கும்..."
"வாட்...? என்ன சொல்றீங்க ப்ரோ....இந்த வீட்டு சுவர், அந்த தண்ணி டேங்க், நான் போட்டுருக்கிற சட்டை, செருப்பு என எல்லாமே ஒளியை பிரதிபலிக்குமா..."?
"நிச்சயமா ப்ரோ..."
"அதோ அந்த மாடு கூட ஒளியை reflect செய்யுதா..."?
"மாடு மட்டுமல்ல...மாடு போடுற சாணிக் கூட ஒளியை reflect பண்ணும்..."
"என்ன ப்ரோ ஆச்சர்யமா இருக்கு..."
"ஆனா அது தான் உண்மை. உங்களால் ஒரு பொருளை பார்க்க முடியுதுன்னா, அந்த பொருள் ஒளியை உள்வாங்கி உங்க கண்களுக்கு அனுப்பிட்டு இருக்குனு அர்த்தம்..
...ஒரு மரத்தை உங்களால் பார்க்க முடியுதுன்னா, அது சூரிய ஒளியை வாங்கி உங்கள் கண்களில் உள்ள விழித்திரைக்கு அனுப்பும். உடனே அந்த ஒளி கண் நரம்பு வழியாக மூளைக்கு சென்று அங்கு ஒரு process முழுமை அடையும்போது தான் உங்களுக்கு அந்த மரம் 'முழுதாக' தெரியும்.
"ஓ...அப்படியா...அப்ப, பொருட்களை பார்ப்பது எல்லாம் முழுக்க முழுக்க நம் கண்களின் திறன் இல்லையா..."?
"நிச்சயம் இல்லை. ஒளி ஒரு பொருள் மீது பட்டு எதிரொளியாக திரும்பி வந்து உங்கள் கண்களில் விழுந்தால் மட்டுமே உங்களால் எல்லா பொருட்களையும் பார்க்க முடியும்.."
"ஓகே அப்படியா..."
"ஆனா, ஒரு விஷயம். ஒளி என்பது நீங்கள் பார்க்கும் எந்த பொருளையும் முழுமையாக காட்டாது. அந்த பொருளின் மீது ஏதோ ஒரு புள்ளியை மட்டுமே பார்க்கும்"
"புரியல ப்ரோ..."
"சரி, இப்ப உன் முன்னாடி இந்த வாட்டர் பாட்டில் இருக்கு. உன்னால் இந்த வாட்டர் பாட்டிலை முழுமையாக பார்க்க முடியுதா..."?
" ஆமா ப்ரோ...பாட்டில் முழுசா தெரியுதே..."
"இல்ல. இப்ப பாட்டில் மூடியை பாருங்க...மூடி மீதிருந்து பார்வையை விலக்காமல் பாட்டிலின் அடிப்பாகத்தை பார்க்க முடியுதா..."?
" ஹ்ம்ம்ம்....இல்ல ப்ரோ. மூடியிலிருந்து கண்ணை கீழே இறக்கினால் தான் அடிப்பாகம் தெரியுது.."
"ஆங்...இதை தான் நான் சொன்னேன். நீங்க எந்த பொருளை பார்த்தாலும் அந்த பொருளின் மீது ஒரு புள்ளியை மட்டுமே நேரடியாக பார்க்க முடியும். மற்றவை எல்லாம் தானாக visualize ஆயிடும்.."
"ஓஹோ...'
"அதே போல் உங்கள் முன்னால் ஆயிரக்கணக்கான பொருட்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்றை மட்டுமே உங்கள் இரண்டு கண்களும் focus செய்யும். மற்றவை எல்லாம் பார்க்காமலேயே visualize ஆகி மூளைக்கு சென்றுவிடும்...."
"சரிங்க பிரதர்..."
"ஆக, ஒரு பொருள் மீது சூரிய ஒளி, ட்யூப்லைட் ஒளி, விளக்கு ஒளி, நெருப்பு ஒளி உள்ளிட்டவை பட்டால் மட்டுமே உங்களால் அந்த பொருளை பார்க்க முடியும். ஒளி படாமல் உங்கள் கண்ணுக்கு முன்னாலே பொருள் இருந்தாலும் அதை உங்களால் பார்க்க முடியாது. சோ, அந்த நிலா உங்களுக்கு எப்படி வெளிச்சம் தருதுன்னு புரியுதா..."?
" ரொம்ப நல்லாவே புரியுது ப்ரோ..."

No comments:
Post a Comment