Friday, 31 October 2025

ஜோதிட


 1937 முதல் 2057 வரையிலான 120 வருட கால உலகியல் ஜோதிட பதிவு

1937 முதல் 67 வரை மேஷ ராசி செவ்வாய் ராஜாவாகவும்
1967 முதல் 1997 வரை ரிஷப ராசி அதிபர் சுக்ராச்சாரியார் ராஜாவாகவும்
1997 முதல் 2027 வரையிலான தற்போதைய காலகட்டத்தில் மிதுன ராசியின் அதிபர் புதன் பகவானும் ராஜாவாகவும்
2027 முதல் 2057 வரையிலான 30 வருட காலமும் கடக ராசியின் அதிபர் சந்திர பகவான் ராஜாவாகவும்
பலன்கள் நடக்க உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்
இது நெளிய நீண்ட பதிவு உலகியல் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இதனைப் படித்து தெரிந்து கொள்ளலாம்
சனி பகவான் கால புருஷ தத்துவத்தின் படி முதல் ராசியான மேஷம் முதல் மீனம் வரையிலான தனது 30 வருட சுற்றுக்கு ஒரு ராசியினையும், அதன் அதிபரையும் தலைவராக ஏற்று கொண்டு சுற்றுகிறார்
இந்த முப்பது வருட காலகட்டத்தில் அந்த ராசியின் பலனை மட்டுமே அதிகமாக நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளார்
ஏனென்றால் அவர் தலைமையேற்று நடத்துகின்றார் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்த அம்சமாகும்
இது கால சக்கர கிரகங்களின் நியதி :
1937 முதல் 1967 வரை சனி பகவான் மேஷ ராசியின் அதிபர்
செவ்வாயை தலைவராக ஏற்று தனது முப்பது வருட சுற்றினை தொடங்கினார்
இந்த காலகட்டத்தில்
தலைவராக ஏற்று கொண்டவரின் கட்டளைக்கு கீழ்படிந்து அவரின்காரகத்துவத்தை நிறைவேற்ற மட்டுமே கடமைபட்டுள்ளவர் சனி பகவான், என்பதை புரிந்து கொள்க
செவ்வாய் பகவான் - ஒரு போர் வீரன்
வீரம் என்ற காரகத்துவம்மூலமாக தனது பெருமையை உலகிற்கு தெரியபடுத்துவார்
சனி பகவானுக்கு, செவ்வாய் கடும் பகை கிரகம் என்பதாலும்,
மேஷ ராசியின் வீட்டில் சனி நீசம் பெறுவதால், 1937-to 1967 வரையிலான 30 வருட காலங்கள்
சனி என்ற மக்கள் காரகன் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள்
முதலாளிக்குகீழ் தொழிலாளி ஒத்துழைக்க மறுத்தால் என்ன நடக்குமோ அதுதான் நடந்தது
சனி என்ற தொழிலாளி மேஷத்தில் நீசம் பெற்றுஒத்துழைக்க மறுத்ததன் விளைவாக, செவ்வாய் என்ற முதலாளி என்னால் முடியாத என்று தனக்குரிய வீரத்துடன் கால சக்கரத்தை தொடர...
1939 ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இரண்டாம் உலக போர் தொடங்கி 1945 ஆண்டு வரை நடந்தது
உலகம் முழுவதிலும் 1937 முதல் 1967 வரை தனது காரகத்து வமான
ராணுவ வீரர்கள் என்ற செவ்வாயின் வீரத்தை உலகுக்கு நிருபித்து காட்டினார் இந்த செவ்வாய் பகவான் ...
செவ்வாய் தனது பூமி காரகன் என்பதால் நிலத்தின் மேல் தனது ஆதிபத்தியத்தை மனிதர்களுக்கு அதிகமாக ஏற்படுத்தி தனது காரகத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டார்
1967 மேஷம் வந்த சனி 1997 மீனம் வரை
சுற்றிய 30 வருட சுற்றுக்கு சுற்றுக்கு தலைமை ஏற்றவர்
அசுர குரு தலைவர் சுக்ராசாரியார் என்ற சுக்ர பகவான்
ஆதிபத்தியம் பெற்ற ராசிகள்
ரிஷபம்/மற்றும் துலாம், ஆகும்
1967 முதல்97 வரை இந்த முப்பது வருட காலம் முதல் 15 வருடம் ரிஷப ராசியின் ஆதிபத்தியம் அதிகமாக இருக்கும் அடுத்த 15 வருட காலம் துலாம் ராசியின் ஆதிபத்தியம் அதிகமாக இருக்கும்
சனிக்கு பிடித்த நண்பர் என்பதால் இந்த 30 வருட காலத்தில் தனது காரகத்துவத்தை நிலை நாட்டினார்
சுக்ர பகவான் காலபுருஷ ராசியின் இரண்டாவது வீடும், தனம், குடும்பத்தினை குறிக்க கூடிய ரிஷப ராசியின் அதிபர் என்பதால்
1967-முதல் 97 - வரை மக்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை
இன்று கூட நாம் அனைவரும் அந்த கூட்டு குடும்ப வாழ்க்கையை நினைத்து ஏங்குவோம்
அப்படி பட்ட அழகிய கூட்டு குடும்ப வாழ்க்கையை தந்தார் சுக்ராசாரியார்,
அந்தக் குடும்பத்திலும் பெரும்பான்மையான மனிதர்கள் அன்று இரண்டு திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் வாழ்ந்திருப்பார்கள்
மேலும் தனது அடுத்த முக்கிய
காரகத்து வமான
ஆடல், பாடல், இசை - இத்துறையில் பெரும் மாற்றம் கொண்டு வந்தார்,
நாடகமாக இருந்ததை
சினிமா என்ற நவீனமாக மாற்றினார்
67 - முதல் 97 வரை பெரும்பான்மையான மக்களின் பொழுது போக்கு என்பது சினிமா என்பது மட்டும் ஆகும்
அடுத்ததாக தனது ஆதிபத்தியம் பெற்ற நடிகர்களை அரசியலில் ஈடுபடுத்தி அரசியல் அதிகாரத்தையும் தனதாக மாற்றி காட்டினார்
தனது ஆதிபத்தியம் பெற்ற சினிமா நடிகர்களை, கடவுளாக கொண்டாட
சனி என்ற மக்கள் காரகனை பயன்படுத்தி கொண்டார்
ரிஷப ராசியின் சின்னம்
காளை மாடு என்பதால் அன்று
அதிகபட்ச மக்களின் போக்குவரத்து
மாட்டு வண்டி தான் மேலும் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுவதால் சிறு தானிய உணவு வகைகளை மக்கள் அதிகமாக உண்டனர்
மேலும் பால் பொருட்கள் தயிர் மோர் நெய் பிரதான உணவாக இருந்தது
பெரும்பான்மையான மக்களின் ஆசையும் , லட்சியமும்மாட்டு வண்டி தான் என்பது குறிப்பிடதக்கது
உங்களுக்கு ஓர் சந்தேகம் எழலாம் அந்த காலகட்டத்தில் மற்ற ராசிகளின் பலன்கள் நடைபெறவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம் நடந்தது ஆனால் சுக்ராச்சாரியாரின் ஆதிபத்தியமே மற்றும் காரகத்துவமே அந்த 30 வருட காலத்தில் அதிகமாக வலுப்பெற்று முன்னிலை வகித்தது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை
ஒரு விஷயத்தை கவனித்து பாருங்கள் துலாம் ராசியில் அரசு வேலையை குறிக்கக்கூடிய சூரிய பகவான் நீசம் பெறுவார் ஆகியால் அந்த காலகட்டத்தில் அரசு வேலைக்கு செல்வதையே பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்று அரசு வேலையே எள்ளி நகையாக செய்தார் இந்த சுக்ராச்சாரியார்
எனது அடுத்த பதிவாக தொலைத்தொடர்பு மூலமாக உலகத்தையே தனது காரகத்துவம் பெற்ற கைவிரல் என்ற உள்ளங்கையில் வைத்திருக்கும் புதன் பகவானின்
1997-முதல் 2027 வரை
மேஷம் முதல் மீனம் வரை
சனி பகவான் சுற்றிய 30 வருட சுற்றுக்கு தலைமை ஏற்றவர் மிதுன ராசியின் அதிபர் புதன் பகவான்
இன்று தொலை தொடர்பு மூலமாக உலகத்தையே தனது உள்ளங்கையில் வைத்திருக்கும் புதன் பகவான் தான் தற்போதைய 30 வருட சுற்றி தலைமையேற்று தனது காரகத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்
ஆம் இரு வீட்டுக்கு சொந்தமான புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் பலன்களை தற்போதைய நடந்து கொண்டிருக்கும் 30 வருட காலத்தில் கொடுத்து கொண்டுள்ளார் அதிலும்
குறிப்பாக மிதுன ராசியின் பலன்களை முதல் 15 வருடங்களிலும் கன்னி ராசியின் பலன்களை பிற்பாதி 15 வருடங்களிலும் நிறைவேற்றிக் கொண்டு உள்ளார் எப்படி புதன் என்றாலே வியாபாரம் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏற்ப
1991 முதல் இந்தியா உலக வியாபாரிகளுக்கான கதவுகளை இந்திய அரசாங்கம் திறந்து விட்டது அதாவது கார்ப்பரேட் துறை வந்தது தொலைத்தொடர்பில் பெரும் புதுமையும் பெரும்பான்மையான மக்களுக்கு டிவி செல்போன் என அனைத்தும் சென்றடைந்தது
புதனின் இன்னொரு காரகத்துவம் கல்வி அதுவும் அரசாங்கம் நடத்தி வந்த கல்வியை தனியார் துறையின் மூலமாக நடத்தி வைத்து அதிலும் தனது வியாபார யுக்தியை நிலை நிறுத்தினார்
இதில் முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் கல்வி காரகம் குருவிடம் இருந்த கல்வியை தனது வியாபார புத்தியில் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றிக் காட்டினார்
அனைத்து தொழில்களிலும் முதலீடு போடாத கமிஷன் அதாவது தரகு மூலமாக பணம் பார்த்தார் நிலம் விற்றால் அவருக்கு கமிஷன் தற்போதைய காலகட்டத்தில் தான் நடந்தது நடந்து கொண்டுள்ளது
பெண்பார்க்கும் தரகர்களுக்கும் நாம் கமிஷன் கொடுக்க வேண்டும் மேட்ரிமோனி திருமண தகவல் மையம் தற்போதைய காலகட்டத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் நினைவில் கொள்க
இந்த கலியுக வியாபாரி புதன் பகவான் 2012 முதல் 2027 வரை தனது மற்றொரு வீடான கன்னி ராசியின் பலன்களை மேலோட்டமாக புதன் பகவான் நிறைவேற்றுகின்றார் எப்படி என்றால்
கால புருஷ தத்துவத்தின் படி ஆறாம் வீடான கன்னி ராசி எதிரி நோய் கடன் என்ற மூன்று ஆதிபத்தியம் கொண்டது இக்காலகட்டத்தில் நமது மக்களிடையே கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்து விட்டதை காணலாம்
அதுவும் வங்கி துறையின் மூலமாக பணம் வாங்குபவர்கள் தற்போதைய காலகட்டத்தில் அதிகம் மேலும் நோய் புதிது புதிதாக வருகின்றது
நேற்று டெங்கு இன்று கொரோனா என மக்களை வாட்டி வதைக்கின்றது
புதன் பகவானின் இந்த சுற்று 2027 ஆம் வருடத்துடன் முடிவடைகின்றது அடுத்ததாக 2027 முதல் 2057 வரையிலான 30 வருட சனி பகவானின் சுற்றுக்கு தலைமை ஏற்பவர் கால புருஷனின் நான்காம் பாவகமான சந்திர பகவான் கடகம் நீர் ராசி நீரின் காரகத்துவத்தில் சரராசி அதாவது மிக வேகமான ராசி சுப ராசி காற்றாற்று வெள்ளம் ஆறுகளை குறிக்கக் கூடியது
கடக ராசி கடக ராசியில் உள்ள புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் சூரியகுல ஸ்ரீ ராமச்சந்திரன் அதனால தான் இந்த காலகட்டத்தில் அவருக்கு அயோத்தியில் கோயில் கட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஸ்ரீ ராமச்சந்திர பகவானே வழிபடும் காலம் அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் அனைத்து நதிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தினை செயல்படுத்த திட்டம் வகுக்கப்படும்
கப்பல் வழி போக்குவரத்தில் பெரும் மாற்றம் முன்னேற்றம் பிரம்மாண்டம் ஏற்படும் நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகள் இணைக்கப்பட்டு அதில் போக்குவரத்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு கப்பலில் சரக்குகள் கையாளப்படும்
நீர் நிலைகளை சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு மாற்றும் காலம் அடுத்த முப்பது வருட காலம் உதாரணமாக மேட்டூர் காவிரி நதிக்கரையில் இருந்து கொள்ளிடம் வரையிலான நீர் வழித்தடத்தில் படகு போக்குவரத்து நடைபெறும்
கேரளாவில் உள்ள ஆலப்புழா போன்று படகு உல்லாச விடுதிகள் நாடு எங்கிலும் மிகுந்த வரவேற்ப்பை பெறும் சனி பகவானுக்கு பிடிக்காத சந்திரன் இந்த காலகட்டத்தில் சனியின் ஆதிபத்தியமான நிலக்கரியினை முடிவுக்கு கொண்டு வருவார் அதாவது மாசு ஏற்படாத சூரிய சக்தி மின்சாரம் அனைத்து இடங்களிலும் ஏற்படுத்தப்படும் சூரிய சக்தியின் மூலம் பெறப்படும் மின்சாரத்தில் பெரும் முன்னேற்றம்
கடக ராசி என்பது தாய்மையை குறிக்க கூடியது எம்பெருமான் சிவனின் துணைவி தாயார் பார்வதியை குடிக்க கூடியது பெண் தெய்வ வழிபாடு மேலோங்கும் மிகுந்த சிறப்பை பெறும் பத்ரகாளியம்மன் திருவுருவங்கள் பிரம்மாண்டமாக ஏற்படுத்தப்படும் முருகப் பெருமானை குறிக்கும் செவ்வாய் பகவான் இந்த ராசியில் நீசம் பெறுவதால் முருகப் பெருமானின் விஸ்வரூப சிலைகளில் அவதாரம் பெருகும்
மருத்துவத்துறையில் கண் சம்பந்தப்பட்ட துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் இந்த காலகட்டத்தில் குருடர்களை இருக்க மாட்டார்கள் பிறப்பால் குருடர்களாக பிறந்தாலும் அவர்களுக்கு பார்வை கிடைக்கும் எப்படி என்கின்றீர்களா?
சந்திரன் இடது கண்ணிற்கு அதிபதி சூரியன் வலது கண்ணிற்கு அதிபதி அடுத்து முப்பது வருடங்களில் கண் தானம் செய்வதில் அனைத்து மக்களும் ஆர்வம் காட்டுவார்கள் விழிப்புணர்வு ஏற்படும் மேலும் செயற்கை கண் தயாரிக்கப்படும்
சந்திரன் தனது காரகத்துவத்தை நிறைவேற்றிய தீருவார் மருத்துவத்துறையில் அடுத்ததாக சந்திரன் தாய்மைக்கு அதிபதியாக வருவதால் முதன்மை சுவர் குருபகவான் இந்த ராசியில் உச்சம் பெறுவதால் அனைத்து பெண்களும்
தாய்மை ஸ்தானத்தை அடைந்தே தீருவார்கள் எப்படி என்றால் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை அங்கீகரிக்கப்பட்டு சட்டம் இயற்றப்படும் இங்கே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன் செவ்வாய் இந்த ராசியில் நீசம் பெறுவதால் செவ்வாய் என்பது பெண்களுக்கு கணவர்களைகுறிக்க கூடியது ஆண்களை குறிக்க கூடியதாக இருப்பதினால்
நடிகை நயன்தாரா சிவன் தம்பதிகள் எவ்வாறு குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள் அதுபோல் ஒரு காலம் வருகின்றது
ஆண்கள் இல்லாமல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் காலம் வர இருக்கின்றது சற்று அதிர்ச்சியாக தான் இந்த செய்தி உங்களுக்கு அமையும் ஆனால் விதி வழியது
ஏனென்றால் செவ்வாய் நீசம் என்பதால் இந்த சம்பவங்கள் நடக்கும்
கனரக வண்டி வாகனங்களான லாரி பஸ் மற்றும் பொக்லின் போன்ற வண்டிகளை பெண்கள் மிகவும் சாமர்த்தியமாக இயக்குவார்கள்
கால புருஷனின் நான்காம் பாவகம் என்பது இயந்திர பாவமாக இருக்கும் மனிதர்கள் இயந்திரங்களை நம்பக்கூடிய காலமாக இது வருகிறது
வண்டி வாகனத்திற்கு காரணமாக கடகம் வருவதால் மின்சார வண்டிகள் அனைத்து இடங்களிலும் பெரும் வரவேற்பு பெரும்
வீட்டிற்கு காரகமாக மற்றும் வளர்ப்பு மிருகங்களுக்கும் காரணமாக நான்காம் பாவகம் வருவதால் நீர் வசதி உள்ள தோட்ட வீடுகளில் மக்கள் அதிகமாக வசிப்பதை விரும்புவர்
ஆடு மாடு நாய் என வளர்ப்பும் மிருகங்களை வளர்ப்பதில் மக்களுக்கு அதிக ஆர்வம் வரும்
அடுத்ததாக
2057 முதல் 87 வரை முப்பது வருட சுற்றிற்கு தலைமை ஏற்பவர் சூரிய பகவான்
இப்படி ஒவ்வொரு ராசிக்கும்
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுஷ் மகரம் கும்பம் மீனம்
என ஒவ்வொரு ராசியும் 30 வருட சுற்றுக்களை முடிக்கும்
1937 முதல் 2297 வரையிலான 12 ராசிகளின் தலா முப்பது வருட சுற்றின் 360 வருட காலத்திற்கும் ஒருவர் தலைமை ஏற்றுக் கொண்டு உள்ளார்
அவர் யார்
என்றால் தனுசு ராசி அதிபர் குரு பகவான் அவர்தான் இந்த 360 வருட கால சுற்றுக்கு மகாராஜாவாக செயல்படுகின்றார்
தனுசு ராசியின் சின்னம் வில் அம்பு ஆகையால்தான் தற்போதைய காலகட்டத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட ராமர் கோயில் ஆனது தற்போதைய காலகட்டத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது
மேலும் தனுசு ராசி வில் அம்பு ராசி என்பதால் ஆயுதம் சின்னமாகக் கொண்ட ராசி என்பதால்.......
போர்ஆயுதங்கள் மூலமாக சண்டைகள் அதிகமாக நடைபெறும் காலகட்டமாக உள்ளது ......
அதுவும் தனுசு ராசி நெருப்பு ராசி என்பதாலும் உபய நெருப்பு என்பதாலும் தற்போதைய காலகட்டத்தில் போர்களில் நெருப்புடன் கூடிய ஆயுதங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.......
அதாவது அதிக அளவு நெருப்புகளை கக்கக்கூடிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது......🎯🎯🎯🎯🎯🎯🎯

No comments:

Post a Comment

ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு*

 ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு* *ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்...