Friday, 31 October 2025

தாம்பூலத்தின் மகத்துவத்தை

 மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள் அனைவருக்கும் .சொல்லுங்கள்

மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை,
சர்க்கரை வியாதி இல்லை,
இதய நோய்கள் இல்லை .....
வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்.
தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.
வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில்
கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை
முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை.
ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.
கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது.
வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.
வாயில் கேன்சர் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு..
எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,
பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.
வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது,
விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,
மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது.
அடுத்த தலைமுறைக்கு இனியாவது
தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போம்...!!

ஜோதிட


 1937 முதல் 2057 வரையிலான 120 வருட கால உலகியல் ஜோதிட பதிவு

1937 முதல் 67 வரை மேஷ ராசி செவ்வாய் ராஜாவாகவும்
1967 முதல் 1997 வரை ரிஷப ராசி அதிபர் சுக்ராச்சாரியார் ராஜாவாகவும்
1997 முதல் 2027 வரையிலான தற்போதைய காலகட்டத்தில் மிதுன ராசியின் அதிபர் புதன் பகவானும் ராஜாவாகவும்
2027 முதல் 2057 வரையிலான 30 வருட காலமும் கடக ராசியின் அதிபர் சந்திர பகவான் ராஜாவாகவும்
பலன்கள் நடக்க உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்
இது நெளிய நீண்ட பதிவு உலகியல் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இதனைப் படித்து தெரிந்து கொள்ளலாம்
சனி பகவான் கால புருஷ தத்துவத்தின் படி முதல் ராசியான மேஷம் முதல் மீனம் வரையிலான தனது 30 வருட சுற்றுக்கு ஒரு ராசியினையும், அதன் அதிபரையும் தலைவராக ஏற்று கொண்டு சுற்றுகிறார்
இந்த முப்பது வருட காலகட்டத்தில் அந்த ராசியின் பலனை மட்டுமே அதிகமாக நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளார்
ஏனென்றால் அவர் தலைமையேற்று நடத்துகின்றார் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்த அம்சமாகும்
இது கால சக்கர கிரகங்களின் நியதி :
1937 முதல் 1967 வரை சனி பகவான் மேஷ ராசியின் அதிபர்
செவ்வாயை தலைவராக ஏற்று தனது முப்பது வருட சுற்றினை தொடங்கினார்
இந்த காலகட்டத்தில்
தலைவராக ஏற்று கொண்டவரின் கட்டளைக்கு கீழ்படிந்து அவரின்காரகத்துவத்தை நிறைவேற்ற மட்டுமே கடமைபட்டுள்ளவர் சனி பகவான், என்பதை புரிந்து கொள்க
செவ்வாய் பகவான் - ஒரு போர் வீரன்
வீரம் என்ற காரகத்துவம்மூலமாக தனது பெருமையை உலகிற்கு தெரியபடுத்துவார்
சனி பகவானுக்கு, செவ்வாய் கடும் பகை கிரகம் என்பதாலும்,
மேஷ ராசியின் வீட்டில் சனி நீசம் பெறுவதால், 1937-to 1967 வரையிலான 30 வருட காலங்கள்
சனி என்ற மக்கள் காரகன் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள்
முதலாளிக்குகீழ் தொழிலாளி ஒத்துழைக்க மறுத்தால் என்ன நடக்குமோ அதுதான் நடந்தது
சனி என்ற தொழிலாளி மேஷத்தில் நீசம் பெற்றுஒத்துழைக்க மறுத்ததன் விளைவாக, செவ்வாய் என்ற முதலாளி என்னால் முடியாத என்று தனக்குரிய வீரத்துடன் கால சக்கரத்தை தொடர...
1939 ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி இரண்டாம் உலக போர் தொடங்கி 1945 ஆண்டு வரை நடந்தது
உலகம் முழுவதிலும் 1937 முதல் 1967 வரை தனது காரகத்து வமான
ராணுவ வீரர்கள் என்ற செவ்வாயின் வீரத்தை உலகுக்கு நிருபித்து காட்டினார் இந்த செவ்வாய் பகவான் ...
செவ்வாய் தனது பூமி காரகன் என்பதால் நிலத்தின் மேல் தனது ஆதிபத்தியத்தை மனிதர்களுக்கு அதிகமாக ஏற்படுத்தி தனது காரகத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டார்
1967 மேஷம் வந்த சனி 1997 மீனம் வரை
சுற்றிய 30 வருட சுற்றுக்கு சுற்றுக்கு தலைமை ஏற்றவர்
அசுர குரு தலைவர் சுக்ராசாரியார் என்ற சுக்ர பகவான்
ஆதிபத்தியம் பெற்ற ராசிகள்
ரிஷபம்/மற்றும் துலாம், ஆகும்
1967 முதல்97 வரை இந்த முப்பது வருட காலம் முதல் 15 வருடம் ரிஷப ராசியின் ஆதிபத்தியம் அதிகமாக இருக்கும் அடுத்த 15 வருட காலம் துலாம் ராசியின் ஆதிபத்தியம் அதிகமாக இருக்கும்
சனிக்கு பிடித்த நண்பர் என்பதால் இந்த 30 வருட காலத்தில் தனது காரகத்துவத்தை நிலை நாட்டினார்
சுக்ர பகவான் காலபுருஷ ராசியின் இரண்டாவது வீடும், தனம், குடும்பத்தினை குறிக்க கூடிய ரிஷப ராசியின் அதிபர் என்பதால்
1967-முதல் 97 - வரை மக்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை
இன்று கூட நாம் அனைவரும் அந்த கூட்டு குடும்ப வாழ்க்கையை நினைத்து ஏங்குவோம்
அப்படி பட்ட அழகிய கூட்டு குடும்ப வாழ்க்கையை தந்தார் சுக்ராசாரியார்,
அந்தக் குடும்பத்திலும் பெரும்பான்மையான மனிதர்கள் அன்று இரண்டு திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் வாழ்ந்திருப்பார்கள்
மேலும் தனது அடுத்த முக்கிய
காரகத்து வமான
ஆடல், பாடல், இசை - இத்துறையில் பெரும் மாற்றம் கொண்டு வந்தார்,
நாடகமாக இருந்ததை
சினிமா என்ற நவீனமாக மாற்றினார்
67 - முதல் 97 வரை பெரும்பான்மையான மக்களின் பொழுது போக்கு என்பது சினிமா என்பது மட்டும் ஆகும்
அடுத்ததாக தனது ஆதிபத்தியம் பெற்ற நடிகர்களை அரசியலில் ஈடுபடுத்தி அரசியல் அதிகாரத்தையும் தனதாக மாற்றி காட்டினார்
தனது ஆதிபத்தியம் பெற்ற சினிமா நடிகர்களை, கடவுளாக கொண்டாட
சனி என்ற மக்கள் காரகனை பயன்படுத்தி கொண்டார்
ரிஷப ராசியின் சின்னம்
காளை மாடு என்பதால் அன்று
அதிகபட்ச மக்களின் போக்குவரத்து
மாட்டு வண்டி தான் மேலும் ரிஷபத்தில் சந்திரன் உச்சம் பெறுவதால் சிறு தானிய உணவு வகைகளை மக்கள் அதிகமாக உண்டனர்
மேலும் பால் பொருட்கள் தயிர் மோர் நெய் பிரதான உணவாக இருந்தது
பெரும்பான்மையான மக்களின் ஆசையும் , லட்சியமும்மாட்டு வண்டி தான் என்பது குறிப்பிடதக்கது
உங்களுக்கு ஓர் சந்தேகம் எழலாம் அந்த காலகட்டத்தில் மற்ற ராசிகளின் பலன்கள் நடைபெறவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம் நடந்தது ஆனால் சுக்ராச்சாரியாரின் ஆதிபத்தியமே மற்றும் காரகத்துவமே அந்த 30 வருட காலத்தில் அதிகமாக வலுப்பெற்று முன்னிலை வகித்தது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை
ஒரு விஷயத்தை கவனித்து பாருங்கள் துலாம் ராசியில் அரசு வேலையை குறிக்கக்கூடிய சூரிய பகவான் நீசம் பெறுவார் ஆகியால் அந்த காலகட்டத்தில் அரசு வேலைக்கு செல்வதையே பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை என்று அரசு வேலையே எள்ளி நகையாக செய்தார் இந்த சுக்ராச்சாரியார்
எனது அடுத்த பதிவாக தொலைத்தொடர்பு மூலமாக உலகத்தையே தனது காரகத்துவம் பெற்ற கைவிரல் என்ற உள்ளங்கையில் வைத்திருக்கும் புதன் பகவானின்
1997-முதல் 2027 வரை
மேஷம் முதல் மீனம் வரை
சனி பகவான் சுற்றிய 30 வருட சுற்றுக்கு தலைமை ஏற்றவர் மிதுன ராசியின் அதிபர் புதன் பகவான்
இன்று தொலை தொடர்பு மூலமாக உலகத்தையே தனது உள்ளங்கையில் வைத்திருக்கும் புதன் பகவான் தான் தற்போதைய 30 வருட சுற்றி தலைமையேற்று தனது காரகத்துவத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்
ஆம் இரு வீட்டுக்கு சொந்தமான புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் பலன்களை தற்போதைய நடந்து கொண்டிருக்கும் 30 வருட காலத்தில் கொடுத்து கொண்டுள்ளார் அதிலும்
குறிப்பாக மிதுன ராசியின் பலன்களை முதல் 15 வருடங்களிலும் கன்னி ராசியின் பலன்களை பிற்பாதி 15 வருடங்களிலும் நிறைவேற்றிக் கொண்டு உள்ளார் எப்படி புதன் என்றாலே வியாபாரம் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழிக்கு ஏற்ப
1991 முதல் இந்தியா உலக வியாபாரிகளுக்கான கதவுகளை இந்திய அரசாங்கம் திறந்து விட்டது அதாவது கார்ப்பரேட் துறை வந்தது தொலைத்தொடர்பில் பெரும் புதுமையும் பெரும்பான்மையான மக்களுக்கு டிவி செல்போன் என அனைத்தும் சென்றடைந்தது
புதனின் இன்னொரு காரகத்துவம் கல்வி அதுவும் அரசாங்கம் நடத்தி வந்த கல்வியை தனியார் துறையின் மூலமாக நடத்தி வைத்து அதிலும் தனது வியாபார யுக்தியை நிலை நிறுத்தினார்
இதில் முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் கல்வி காரகம் குருவிடம் இருந்த கல்வியை தனது வியாபார புத்தியில் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றிக் காட்டினார்
அனைத்து தொழில்களிலும் முதலீடு போடாத கமிஷன் அதாவது தரகு மூலமாக பணம் பார்த்தார் நிலம் விற்றால் அவருக்கு கமிஷன் தற்போதைய காலகட்டத்தில் தான் நடந்தது நடந்து கொண்டுள்ளது
பெண்பார்க்கும் தரகர்களுக்கும் நாம் கமிஷன் கொடுக்க வேண்டும் மேட்ரிமோனி திருமண தகவல் மையம் தற்போதைய காலகட்டத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் நினைவில் கொள்க
இந்த கலியுக வியாபாரி புதன் பகவான் 2012 முதல் 2027 வரை தனது மற்றொரு வீடான கன்னி ராசியின் பலன்களை மேலோட்டமாக புதன் பகவான் நிறைவேற்றுகின்றார் எப்படி என்றால்
கால புருஷ தத்துவத்தின் படி ஆறாம் வீடான கன்னி ராசி எதிரி நோய் கடன் என்ற மூன்று ஆதிபத்தியம் கொண்டது இக்காலகட்டத்தில் நமது மக்களிடையே கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்து விட்டதை காணலாம்
அதுவும் வங்கி துறையின் மூலமாக பணம் வாங்குபவர்கள் தற்போதைய காலகட்டத்தில் அதிகம் மேலும் நோய் புதிது புதிதாக வருகின்றது
நேற்று டெங்கு இன்று கொரோனா என மக்களை வாட்டி வதைக்கின்றது
புதன் பகவானின் இந்த சுற்று 2027 ஆம் வருடத்துடன் முடிவடைகின்றது அடுத்ததாக 2027 முதல் 2057 வரையிலான 30 வருட சனி பகவானின் சுற்றுக்கு தலைமை ஏற்பவர் கால புருஷனின் நான்காம் பாவகமான சந்திர பகவான் கடகம் நீர் ராசி நீரின் காரகத்துவத்தில் சரராசி அதாவது மிக வேகமான ராசி சுப ராசி காற்றாற்று வெள்ளம் ஆறுகளை குறிக்கக் கூடியது
கடக ராசி கடக ராசியில் உள்ள புனர்பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர் சூரியகுல ஸ்ரீ ராமச்சந்திரன் அதனால தான் இந்த காலகட்டத்தில் அவருக்கு அயோத்தியில் கோயில் கட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஸ்ரீ ராமச்சந்திர பகவானே வழிபடும் காலம் அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் அனைத்து நதிகளையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தினை செயல்படுத்த திட்டம் வகுக்கப்படும்
கப்பல் வழி போக்குவரத்தில் பெரும் மாற்றம் முன்னேற்றம் பிரம்மாண்டம் ஏற்படும் நாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகள் இணைக்கப்பட்டு அதில் போக்குவரத்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு கப்பலில் சரக்குகள் கையாளப்படும்
நீர் நிலைகளை சரக்கு மற்றும் மக்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு மாற்றும் காலம் அடுத்த முப்பது வருட காலம் உதாரணமாக மேட்டூர் காவிரி நதிக்கரையில் இருந்து கொள்ளிடம் வரையிலான நீர் வழித்தடத்தில் படகு போக்குவரத்து நடைபெறும்
கேரளாவில் உள்ள ஆலப்புழா போன்று படகு உல்லாச விடுதிகள் நாடு எங்கிலும் மிகுந்த வரவேற்ப்பை பெறும் சனி பகவானுக்கு பிடிக்காத சந்திரன் இந்த காலகட்டத்தில் சனியின் ஆதிபத்தியமான நிலக்கரியினை முடிவுக்கு கொண்டு வருவார் அதாவது மாசு ஏற்படாத சூரிய சக்தி மின்சாரம் அனைத்து இடங்களிலும் ஏற்படுத்தப்படும் சூரிய சக்தியின் மூலம் பெறப்படும் மின்சாரத்தில் பெரும் முன்னேற்றம்
கடக ராசி என்பது தாய்மையை குறிக்க கூடியது எம்பெருமான் சிவனின் துணைவி தாயார் பார்வதியை குடிக்க கூடியது பெண் தெய்வ வழிபாடு மேலோங்கும் மிகுந்த சிறப்பை பெறும் பத்ரகாளியம்மன் திருவுருவங்கள் பிரம்மாண்டமாக ஏற்படுத்தப்படும் முருகப் பெருமானை குறிக்கும் செவ்வாய் பகவான் இந்த ராசியில் நீசம் பெறுவதால் முருகப் பெருமானின் விஸ்வரூப சிலைகளில் அவதாரம் பெருகும்
மருத்துவத்துறையில் கண் சம்பந்தப்பட்ட துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் இந்த காலகட்டத்தில் குருடர்களை இருக்க மாட்டார்கள் பிறப்பால் குருடர்களாக பிறந்தாலும் அவர்களுக்கு பார்வை கிடைக்கும் எப்படி என்கின்றீர்களா?
சந்திரன் இடது கண்ணிற்கு அதிபதி சூரியன் வலது கண்ணிற்கு அதிபதி அடுத்து முப்பது வருடங்களில் கண் தானம் செய்வதில் அனைத்து மக்களும் ஆர்வம் காட்டுவார்கள் விழிப்புணர்வு ஏற்படும் மேலும் செயற்கை கண் தயாரிக்கப்படும்
சந்திரன் தனது காரகத்துவத்தை நிறைவேற்றிய தீருவார் மருத்துவத்துறையில் அடுத்ததாக சந்திரன் தாய்மைக்கு அதிபதியாக வருவதால் முதன்மை சுவர் குருபகவான் இந்த ராசியில் உச்சம் பெறுவதால் அனைத்து பெண்களும்
தாய்மை ஸ்தானத்தை அடைந்தே தீருவார்கள் எப்படி என்றால் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை அங்கீகரிக்கப்பட்டு சட்டம் இயற்றப்படும் இங்கே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன் செவ்வாய் இந்த ராசியில் நீசம் பெறுவதால் செவ்வாய் என்பது பெண்களுக்கு கணவர்களைகுறிக்க கூடியது ஆண்களை குறிக்க கூடியதாக இருப்பதினால்
நடிகை நயன்தாரா சிவன் தம்பதிகள் எவ்வாறு குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள் அதுபோல் ஒரு காலம் வருகின்றது
ஆண்கள் இல்லாமல் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் காலம் வர இருக்கின்றது சற்று அதிர்ச்சியாக தான் இந்த செய்தி உங்களுக்கு அமையும் ஆனால் விதி வழியது
ஏனென்றால் செவ்வாய் நீசம் என்பதால் இந்த சம்பவங்கள் நடக்கும்
கனரக வண்டி வாகனங்களான லாரி பஸ் மற்றும் பொக்லின் போன்ற வண்டிகளை பெண்கள் மிகவும் சாமர்த்தியமாக இயக்குவார்கள்
கால புருஷனின் நான்காம் பாவகம் என்பது இயந்திர பாவமாக இருக்கும் மனிதர்கள் இயந்திரங்களை நம்பக்கூடிய காலமாக இது வருகிறது
வண்டி வாகனத்திற்கு காரணமாக கடகம் வருவதால் மின்சார வண்டிகள் அனைத்து இடங்களிலும் பெரும் வரவேற்பு பெரும்
வீட்டிற்கு காரகமாக மற்றும் வளர்ப்பு மிருகங்களுக்கும் காரணமாக நான்காம் பாவகம் வருவதால் நீர் வசதி உள்ள தோட்ட வீடுகளில் மக்கள் அதிகமாக வசிப்பதை விரும்புவர்
ஆடு மாடு நாய் என வளர்ப்பும் மிருகங்களை வளர்ப்பதில் மக்களுக்கு அதிக ஆர்வம் வரும்
அடுத்ததாக
2057 முதல் 87 வரை முப்பது வருட சுற்றிற்கு தலைமை ஏற்பவர் சூரிய பகவான்
இப்படி ஒவ்வொரு ராசிக்கும்
மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுஷ் மகரம் கும்பம் மீனம்
என ஒவ்வொரு ராசியும் 30 வருட சுற்றுக்களை முடிக்கும்
1937 முதல் 2297 வரையிலான 12 ராசிகளின் தலா முப்பது வருட சுற்றின் 360 வருட காலத்திற்கும் ஒருவர் தலைமை ஏற்றுக் கொண்டு உள்ளார்
அவர் யார்
என்றால் தனுசு ராசி அதிபர் குரு பகவான் அவர்தான் இந்த 360 வருட கால சுற்றுக்கு மகாராஜாவாக செயல்படுகின்றார்
தனுசு ராசியின் சின்னம் வில் அம்பு ஆகையால்தான் தற்போதைய காலகட்டத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட ராமர் கோயில் ஆனது தற்போதைய காலகட்டத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது
மேலும் தனுசு ராசி வில் அம்பு ராசி என்பதால் ஆயுதம் சின்னமாகக் கொண்ட ராசி என்பதால்.......
போர்ஆயுதங்கள் மூலமாக சண்டைகள் அதிகமாக நடைபெறும் காலகட்டமாக உள்ளது ......
அதுவும் தனுசு ராசி நெருப்பு ராசி என்பதாலும் உபய நெருப்பு என்பதாலும் தற்போதைய காலகட்டத்தில் போர்களில் நெருப்புடன் கூடிய ஆயுதங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.......
அதாவது அதிக அளவு நெருப்புகளை கக்கக்கூடிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது......🎯🎯🎯🎯🎯🎯🎯

Wednesday, 29 October 2025

*பாரதி உயிரோடு இருந்த போது


 *பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப்பிடியில் உழல விட்டு கண்டும் காணாது போலிருந்தது அவரைச்சுற்றி வாழ்ந்திருந்த அவரின் சமூகம்*

*குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி*
*செல்லம்மாளின்*
*கையைப்பிடித்துக்* *கொண்டு பீடு நடை போட்டு வரும்* *பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்*
*பாரதி சாதம் சாப்பிடும் முறையே விசித்திரமாக இருக்கும்*
*சாப்பிட உட்காரும் போதும் ஒரு மஹாராஜா உட்காருவது போல தரையில் உட்காருவார்*
*கட்டை விரல் நடுவிரல் மற்றும் மோதிர விரல் மற்றுமே பயன்படுத்துவார்*
*அவருக்குப் பிடித்த உணவே சுட்ட அப்பளாம் தான்*
*வறுமையின் கோரப்பிடியினால் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே ஏதாவது காய்கறி இருக்கும்*
*மற்ற நாட்களில் சுட்ட அப்பளாம் தான்*
*பாரதி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலிவுற்றுக் காலமானதாக இக்கணம் வரை பள்ளிப்பாடங்களிலும் தவறாக சொல்லப்படுகிறது*
*அத்துயர நாளில் பாரதி யானைக்கு தேங்காய் பழம் கொடுக்கச் சென்றபோது பலரும் தடுத்து எச்சரித்தார்கள்*
*ஆனால் பாரதி நெருங்கியபோது யானை அமைதியாகவே இருந்தது*
*ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே வீசியது*
*கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதரான அந்த புண்ணிய ஆத்மா தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து பாரதியை க்குனிந்து தன் தோளில் போட்டுக் கொண்டார்*
*யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும்*
*ஆனால் தான் பண்ணிய மாபெரும் தவறு அதற்கு உரைத்ததோ என்னவோ அதற்குப்பிறகு அதனிடத்தில் எந்த சலனமும் இல்லை*
*கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது*
*ஆனால் கட்டாந்தரையில் முகம் மூக்கு தோள்பட்டை முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக்காயத்தோடு பாரதி மயங்கினார்*
*காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச் சேர்த்தார்*
*பகைவனுக்கும் அருளச்சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையை பழித்தாரா இல்லவே இல்லை*
*கொஞ்சம் நினைவு வந்ததும் சொன்னாராம்*
*யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது*
*என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான்*
*இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா ?*
*அங்கங்களின் காயம் ஆறத்தொடங்கியது*
*பாரதியும் சுதேச மித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு சென்று வந்தார்*
*காயம் ஆறியதே தவிர அந்த அதிர்ச்சியோ அவசர வியாதிகளை அழைத்து வந்தது*
*அந்த ஒருநாளில் சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது*
*மீண்டும் அதே ராயப்பேட்டை ஆஸ்பத்திரி*
*செப்டம்பர் 11 ராத்திரிஅதிகாலை இரண்டு மணி*
*வெளியேறத்துடிக்கும் உயிரோ* *பாரதியின் உடலை உதைத்துக்கொண்டிருக்கிறது*
*சில நிமிடங்களில் அந்த 39*
*வருஷக்*
*கவிதைக்கு மரணம்* *முற்றுப்புள்ளி வைத்தது*
*ஒரு யுக எரிமலை எப்படி அணைந்தது ?*
*ஒரு ஞானக்கடல் எப்படித்தான் வற்றியதோ ?*
*குவளைக்கண்ணன் லட்சுமண ஐயர் ஹரிஹர சர்மா சுரேந்திரநாத் ஆர்யா நெஞ்சு கனத்துப்போன நெல்லையப்பர் ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம்பேட்டை மயானம் நோக்கி நடந்தன*
*இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கையோ வெறும் பதினொன்று சுமந்தவர்களையும் சேர்த்து*
*மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ ?*
*அவர் உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் வரவில்லையே*
*இது புலிகளை மதிக்காத புழுக்களின் தேசமன்றோ*
*தூக்கிச்சென்றவர்களோ தோளின் சுமையை இறக்கி வைத்தார்கள்*
*ஆனால் துயரத்தின் சுமையை?*
*எரிப்பதற்கு முன் ஒரு இரங்கல் கூட்டம்*
*பாரதியின் கீர்த்தியை சுரேந்திரநாத் ஆர்யா சொல்லி முடிக்க ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்*
*ஓராயிரம் கவிதைகளை உச்சரித்த உதடுகளை*
*ஞான வெளிச்சம் வீசிய அந்த தீட்சண்ய விழிகளை*
*ரத்தம் வற்றினாலும் கற்பனை வற்றாத அந்த இதயத்தைத் தேடித்தேடித் தின்றன தீயின் நாவுகள்*
*மகா கவிஞனே எட்டையபுரத்து கொட்டு முரசே*
*உன்னைப்பற்றி*
*உள்ளூரே புரிந்து*
*கொள்ளாத போது* *இவ்வுலகதிற்குப் புரிவது ஏது ?*
*உன் எழுத்துக்களை வாழ்க்கைப்படுத்தினால் அன்றி உன் பெயரை உச்சரிக்கக் கூட எமக்கு யோக்கியதை தான் ஏது🙏🙏

சில


 அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
அதிகாலை நேரம் முதல் இரவு உறங்கும் போது வரை நல்லதே நினைக்க வேண்டும்.
பகவானின் திவ்ய நாமங்கள் கூறுவது பாவங்களை போக்க வல்லது.
அதேபோல் நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.அனைவருமே அறிய வேண்டும்.
தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.
கோலம் போடும் போது காலணி அணிந்து கோலம் போடக்கூடாது.
ஸ்நானம் செய்து கதவை திறந்து கோலம் போட வேண்டும்.
ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.
சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.
அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.
குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.
கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.
நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.
எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.
திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.
சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.
இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.
சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.
சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
(அறிவுரை) மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.
குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.
இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.
பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.
ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது தரித்திரம்.
(அறிவுரை) தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.
பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.
பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
(அறிவுரை) அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.
ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.
பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.
(அறிவுரை) பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது மஹா பாவம்.
பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, அருகம்புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது
மஹா புண்ணியம்.
தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது;
தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.
பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

Tuesday, 28 October 2025

நெய்


 நெய் சாப்பிடாதீர்கள் என யாராவது சொன்னால் அவர்களை ஏளனமாக பாருங்கள். நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர். மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ஜீரண சக்தியைத் தூண்ட நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது. அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர். இது மூளைக்கு சிறந்த டானிக்.
நெய்யில்
Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி....
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
* ஞாபக சக்தியை தூண்டும்.
* சரும பளபளப்பைக் கொடுக்கும்.
* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே. இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.

Saturday, 25 October 2025

நம்மையும் கோமாளி ஆக்கிவிடும்.


 ஒரு ஊரில் ஒரு ஆள் தையல் கடை வைத்திருந்தான்.

அவனிடம் ஒருவன் ஒரு சட்டை துணி எடுத்துக் கொடுத்து தைக்க சொல்லியிருந்தான்.
வருகின்ற சனிக்கிழமை வந்து வாங்கிட்டு போ என்று அவன் சொல்லியிருந்தான்.
அதே மாதிரி இவன் வந்தான்.
அவன் தைத்து வைத்திருந்த சட்டையை கொடுத்தான்.
இவன் வாங்கி அங்கேயே போட்டு பார்த்தான்.
கை நீளம் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தது.
வலது கை இடது பக்கத்தை விட நீளம் குறைவாக இருந்தது.
என்ன இது இப்படி செய்து விட்டாய்? என்று இவன் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டான்.
அதற்கு அவன் சொன்னான் ஐயையோ! இதற்காகவா சங்கடப்படுகிறாய்!
வலது கையை மட்டும் கொஞ்சம் உள்ளே இழுத்து வைத்துக்கொள் சரியாகப் போகிறது.
மற்றபடி இந்த சட்டையில் உள்ள கலை அம்சத்தை கவனித்து பார்.
எவ்வளவு அற்புதமாக செய்திருக்கிறேன்.
ஒரு சின்ன குறையைப் பொருட்படுத்தாமல் நான் சொன்னது மாதிரி கையை கொஞ்சம் உள்ளே இழுத்து வைத்துக் கொள்.
நடந்து போ அருமையாக இருக்கும் என்றான்.
அவனும் யோசித்துப் பார்த்தான் சரியான யோசனையாக தோன்றியது.
கொஞ்சம் முயற்சி செய்து வலது கையை உள்ளே இழுத்து சட்டை சரியாக இருப்பது போல் பண்ணிக்கொண்டான்.
இப்போது மறுபடியும் ஒரு பிரச்சனை வலது கையை உள்ளே இழுத்து வைத்துக்கொண்டால் முதுகுப்பக்கம் கொஞ்சம் துணி தளர்த்தியாக தொங்குவது மாதிரி இருந்தது.
என்ன இது முதுகுப்பக்கம் துணி குவிந்து விட்டது என்றான்.
அவன் இதற்காகவா கவலைப்படுகிறாய்?
உடம்பை அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் வளைத்துக் கொள் சரியாக போய்விடும்.
இதற்காக அந்த அழகான தையலைப் பிரித்து அதில் உள்ள கலை அம்சத்தை கெடுக்க என் மனசு இடம் கொடுக்கவில்லை.
எவ்வளவு தளர்ச்சியாக இருக்குதோ அவ்வளவுக்கு கொஞ்சம் உடம்பை வளைத்து கொள் என்றான் தையல்காரர்.
அதுவும் நல்ல யோசனையாக தோன்றியது சரி என்று சொல்லி விட்டு புறப்பட்டான்.
தெருவில் இறங்கினான்.
கொஞ்சம் கையை உள்ளே இழுத்து உடம்பை கொஞ்சம் வளைத்துக் கொண்டான்.
சட்டைக்கு தகுந்த மாதிரி பண்ணி கொண்டான்.
மெதுவாக நடந்து போனான் இப்போது எதிரில் ஒருவன் வந்தான்.
இவனைப் பார்த்தான் " ஆஹா அற்புதம் என்ன அழகான சட்டை சும்மா சொல்லக்கூடாது.
ரொம்ப நல்லா இருக்கிறது.
நிச்சயமாக இந்த ஊர் மேல் தெருவில் உள்ள தையல்காரர்தான் இதை தைத்திருக்க வேண்டுமென்றான்".
இதைக் கேட்டதும் அவனுக்கு ஆச்சர்யம்!
அதெப்படி அவ்வளவு சரியாக சொல்கிறாய்? என்று கேட்டான்.
அதற்கு அந்த வழிப்போக்கன் " அவன் ரொம்ப கெட்டிக்காரன் உன்னைப்போல் உடம்பும் கையும் வளைந்து போன ஒரு ஆளுக்கு அவனைத் தவிர வேறு யாரால் இவ்வளவு பொருத்தமான சட்டை தைக்க முடியும்? "என்றான்.
தையல்காரன் பேச்சை கேட்டு அனுசரிக்க போய் இவனோட நிலைமை இப்படி ஆகிவிட்டது.
இதே மாதிரிதான் சில விடயங்கள் நம்மையும் கோமாளி ஆக்கிவிடும்.
எதுவாக இருந்தாலும் அந்த விடயத்தில் ஒரு அறிவுப் பூர்வமான அணுகுமுறை நிச்சயம் அவசியம்.

ஞானத்தை யாரிடம் கற்பது ?


 ஞானத்தை யாரிடம் கற்பது ?

”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்
முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.
காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.
அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.
அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.
இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.
ஆனால்,
மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?
மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?
மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.
இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.
தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.
தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.
'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.
இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.
அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,
“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,
“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும்,
“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.
மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...
"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;
“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.
“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.
“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.
“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.
"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.
"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்து பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.
"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.
“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.
“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.
"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.
“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.
“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.
"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும் துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.
இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.
தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..
தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை” பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.
நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.

மரணத்தை உண்டாக்கும் கொடூர நோயையும் தடுக்கும் தேங்காய்ப்பூ... கட்டாயம் சாப்பிடுங்க...


 மரணத்தை உண்டாக்கும் கொடூர நோயையும் தடுக்கும் தேங்காய்ப்பூ... கட்டாயம் சாப்பிடுங்க...

இந்த தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி எப்படி செய்யப்படுகிறது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய் பூ.
நாம் பொதுவாக தேங்காய் பூவில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் உண்டு. அது பற்றி மிக விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நன்மைகள்
தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதில் உள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. அப்படி என்னென்ன நோய்களுக்கு இது பயன்படுகிறது என்பது பற்றி பார்க்கலாம்.
நோய் எதிர்க்கும் ஆற்றல்
இந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களினால் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காகக் கூட்டிவிடும். அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்க்ளைத் தவிர்க்க முடியும்.
மன அழுத்தம்
அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்பாழுது தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத எனர்ஜி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.
ஜீரணத்தை அதிகமாக்க
அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த தேங்காய் பூ இருக்கும். இந்த தேங்காய் பூவில் உள்ள மினரல்களும் வைட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை விரட்டியடிக்கிறது.
நீரிழிவு
இந்த தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகின்ற அபார சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி இந்த தேங்காய் பூவை சாப்பிடுவதனால் உங்களுடைய ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் இந்த தேங்காய் பூ பயன்படுகிறது.
இதய நோய்கள்
இதயக் குழாய்களில் படிகின்ற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்சினையை சரிசெய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய் பூ செயல்படும்.
தைராய்டு
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் என்னதான் அதை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், தைராய்டு சுரப்பியின் மூலம் வேறு சில பக்க விளைவுகளையும், குறிப்பாக உடல் பருமன் போன்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா எவ்வளவு ஆண்டுகளாக தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த தேங்காய் பூ சாப்பிட்டால் மிக வேகமாக குணமடைய ஆரம்பிக்கும்.
புற்றுநோய்
புற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை இந்த தேங்காய் பூ கொண்டிருக்கிறது. இது நமக்கு புற்றுநோய் உண்டாகாமல் காக்கிறது.
உடல் எடை
உங்களுடைய உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந்த தேங்காய் பூ உதவுகிறது. இதில் உள்ள கலோரியின் அளவும் மிக மிகக் குறைவே. இதனால் எடையும் கூடாது. நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதினால் உடலில் கொழுபு்புகள் தேங்காமல் உடல் எடையையும் வேகமாகக் குறைக்க உதவுகிறது.
சிறுநீரகம்
தேங்காய் பூ கிட்னி சம்பந்தப்பட்ட அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது. தொற்றுநோய்களைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் உருவாகிற நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் இந்த தேங்காய் பூவுக்கு உண்டு.
இளமைப் பொலிவு
நம்முடைய சருமத்தை மிக இளமையாகவும் பொலிவுடனும் சருமச் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பதில் மிக முக்கியப் பங்கு இந்த தேங்காய் பூவுக்கு உண்டு. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் உங்களுடைய இளமையைத் தக்க வைத்திருக்க உதவுகிறது.

Saturday, 18 October 2025

60 நொடிகள் குறிப்பிட்ட விரல்களைத் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்..


 60 நொடிகள் குறிப்பிட்ட விரல்களைத் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்...

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் ஒன்றோடொன்று தொடர்புடையது. அதனால் தான் அக்குபிரஷர் சிகிச்சையில் உடலின் ஏதோ ஒரு பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் பிரச்சனைகள் குணமாகின்றன. அந்த வகையில் நம் கைவிரல்கள் ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு பகுதியுடனும் தொடர்பில் உள்ளது.
இக்கட்டுரையில் குறிப்பிட்ட கைவிரல்களை 60 நொடிகள் தேய்ப்பதால் அல்லது அழுத்தம் கொடுப்பதால், உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து வைத்துக் கொண்டு நன்மைப் பெறுங்கள்.
பெருவிரல்:
பெருவிரலானது இதயம் மற்றும் நுரையீரலுடன் தொடர்பில் உள்ளது. ஆகவே ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கும் போது, பெருவிரலை 60 நொடிகள் தேய்த்து அல்லது அழுத்தம் கொடுத்து, பின் இழுத்துவிடுங்கள்.
ஆள்காட்டி விரல்:
ஆள்காட்டி விரலை 60 நொடிகள் தேய்ப்பதால், அது மண்ணீரல் மற்றும் வயிற்றின் செயல்பாட்டை சீராக்கி, செரிமான பிரச்சனைகளைப் போக்கும். மேலும் ஆள்காட்டி விரல் குடலுடனும் தொடர்புடையது என்பதால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கும் போது ஆள்காட்டி விரலைத் தேய்த்துவிடுங்கள் அல்லது அழுத்தம் கொடுங்கள்.
நடுவிரல்:
பயணத்தின் போது குமட்டல் உணர்வை சந்தித்தால், நடுவிரலில் அழுத்தம் கொடுங்கள். மேலும் நடுவிரலை 60 நொடிகள் அழுத்தம் கொடுத்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மோதிரம் மற்றும் சுண்டு விரல்:
இந்த இரண்டு விரல்களையும் ஒன்றாக சேர்த்து 60 நொடிகள் மறு கையால் அழுத்தம் கொடுக்கும் போது, அது மோசமான இரத்த ஓட்டத்தால் சந்திக்கும் ஒற்றைத் தலைவலி மற்றும் கழுத்து வலியில் இருந்து விடுவிக்கும்.
உள்ளங்கை:
உள்ளங்கையில் நிறைய நரம்புகள் இணைவதால், இந்த இடத்தில் 60 நொடிகள் அழுத்தம் கொடுக்கும் போது, அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
முடிவளர்ச்சி குன்றியவர்கள், வழுக்கை தலை உடையவர்கள், இளமையில் வழுக்கை விழுந்தவர் களுக்கு இந்த புதிய ஹேர் தெரபி உதவும். இரண்டு கைகளின் விரல்களை நேருக்கு நேர் வைத்து சிக்கி முக்கி கற்களை உரசுவது போல் உரச வேண்டும். அவ்வாறு உரசும் போது இரத்த நாளங்கள் தூண்டப் படுகின்றன.
மேலும் மயிர்க் கால்களுக்கு இரத்தம் செலுத்தப் படுகின்றன. இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க் கால்கள் வழுபெறும். இறந்த மயிர்க் கால்கள் கூட மீண்டும் வளரும். ஆனால் இந்த மாற்றம் உடனே நடக்காது.
தினமும் நம்பிக்கையுடன் காலையிலும் மாலை யிலும் இரண்டு வேலை களில் இந்த பயிற்சியை 5 நிமிடம் செய்தாலே போதும். 6 மாதத்தில் நற்பலன்கள் கிடைக்கும். இந்த பயிற்சி செய்யும் போது விரல்களில் நகம் இருக்கக் கூடாது.
மேலும் கட்டைவிரல் பயன்படுத்தக் கூடாது. இரு கை விரல்களையும் உரசும் போது அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக உரசவும். கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள்,
இரத்த அழுத்தம் உடையவர்கள் இந்தப் பயிற்சியை தயவு செய்து செய்யாதீர்கள். இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகி விடும். ஆனால் முடி வளர இந்தப் பயிற்சி சிறந்த பயிற்சி தான்.

Friday, 17 October 2025

செல்போன் எனப்படும் கதிர்வீச்சை குறைத்து


 செல்போன் எனப்படும் கைத்தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகள்.

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி ?
செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.
ஏனெனில், செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.
இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.
2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

Thursday, 16 October 2025

திருச்செந்தூர் முருகனும்... வீரபாண்டிய கட்டபொம்மனும்..

 


திருச்செந்தூர் முருகனும்...

வீரபாண்டிய கட்டபொம்மனும்....
முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன் அளவு கடந்து வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே கிடையாது.
தன் பக்தனின் மெச்சுதலை அங்கீகரிக்கும் விதமாக கட்டபொம்மன் மூலமாக முருகன் சில அற்புதங்களை நிகழச் செய்திருக்கிறார்
கட்டபொம்மன், தினமும் திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு பூஜை, நிவேதனம் நடந்து முடிந்த பிறகே, தன் மதிய உணவை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கட்டபொம்மனின் கோட்டை இருப்பதோ பாஞ்சாலங் குறிச்சியில். இங்கிருந்து அவ்வளவு தொலைவில் இருக்கிறது திருச்செந்தூர் முருகனாலயம்.
கோயிலில் முருகனுக்கு நிவேதனம் நடந்துவிட்டதை அவர் தெரிந்து கொள்ளும விதமாக.........
திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்தார். மண்டபத்தின் உள்ளே வெங்கல மணிகளை பொருத்தினார்.
ஒவ்வொரு மண்டபத்திலும் சேவகர்களை நிறுத்தியிருந்தார்.
திருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்தவுடனே திருச்செந்தூர் கோயில் ஆலய கோபுர மணி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம்.
இதைத்தொடர்ந்து அடுத்திருக்கும் மண்டபத்திற்கு இந்த மணியோசை கேட்கும்.
இதற்காக ஆறுமுகநேரி, ஆத்தூர், ஒட்டபிடாரம், பாஞ்சாலங்குறிச்சி உள்பட பல இடங்களில் மணி மண்டபம் அமைந்திருந்தார் கட்டபொம்மன்.
அந்த மண்டபத்திலிருக்கும் சேவகன், உடனே மண்டபத்தின் மணிகட்டை அவிழ்த்து மணியோசையை எழுப்புவான்.
இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டபமாக மணி ஒலித்து, இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி மண்டபத்தில் மணி ஒலிக்கும்.
இவற்றில் சில மண்டபங்களை இதன் வழியில் தற்போதும் காணலாம்...
மேலும், திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு வந்து கட்டபொம்மனிடம் கொடுத்துச் செல்வார்கள்.
விபூதி கையில் கிடைத்தபிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் துவங்குவார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்தின் ஏழாவது நிலையில் ஒரு மணி தொங்க விடப்பட்டிருக்கும்.
இதனை கட்டபொம்மனே அமைத்துக் கொடுத்திருந்தார். இது பல வருடங்களாக ஒலிக்கச் செய்யாமலே இருந்து வந்தது.
இந்த கோபுரத்திலிருந்த மணியோசனையின் மூலமே, அடுத்திருக்கும் மணியை ஒலிக்கச் செய்து, முருகனுக்கு நிவேதனம் ஆகிவிட்டது என குறிப்புணர்த்துவர்.
இயங்காமலிருந்த இந்த மணியை, முன்பு கோயில் கும்பாபிஷேகம் நடந்தபோது மீண்டும் ஒலிக்கச் செய்யப்பட்டது. தற்போது உச்சிகால பூஜையில் இந்த மணி ஒலிக்கிறது.
மேலும் இவர் முருகன் மேல் கொண்டிருந்த பக்தியால், தன்னுடைய நெற் களஞ்சியங்களிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை அனுப்பிக் கொண்டிருக்கும் வழக்கத்தையும் கொண்டிருந்தார் கட்டபொம்மன்.
குடிமக்களும் தம் வயல்களிலிருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து கோயிலுக்குச் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்து பணித்திருந்தார்.
ஒரு சமயம், தன் மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதைத் தயாரிக்கும்படி சொல்லியிருந்தார் கட்டபொம்மன்.
அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன் அந்த அட்டிகையை நீ எனக்குத் தந்திருக்கலாமே? என்றாராம்.
அட்டிகை தயாரான உடனேயே அதை எடுத்துப் போய் திருச்செந்தூர் கோயிலில் முருகனுக்கு அணிவித்து விட்டார்.
இன்னொரு சமயம், திருச்செந்தூரில் மாசி திருவிழா நடந்து கோண்டிருந்தது.
தேரோட்டத்துக்குத் தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்து கொடுக்க வேண்டும். ஏனோ அன்று , வர முடியவில்லை.
சரி, நாமே தேரை இழுத்து விடலாம், என பக்தர்கள் தேரை இழுத்தனர். தேர் சிறிது தூரம்தான் உருண்டது. அதற்குமேல் நகராமல் நின்று விட்டது.
தேரின் சக்கரம் ஓரிடத்தில் பதிந்து நின்று கொண்டது. எவ்வளவோ பக்தர்கள் முயற்சித்தும் தேர் நகரவில்லை.
இதற்கிடையில் கட்டபொம்மனுக்கு செய்தி கொண்டு சேர்த்து, அவரும் இங்கு வந்து சேர்ந்தார்.
கட்டபொம்மன் தேர்வடத்தை பற்றி பிடித்தார். உடனே தேர் நகர்ந்தது. இதுபோல பல அற்புதங்களை கட்டபொம்மனின் மூலம் முருகன், அவரின் பக்தியை மெச்சி அருளியிருக்கிறார்.
தாமிரபரணி ஆற்றங்கரையில், முத்தாலங்குறிச்சி என்று ஓர் அழகிய கிராமம் உண்டு.
இங்கு கவிராயர் கந்தசாமிப் புலவர் எனும் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
இவரும் மிக தீவிரமான முருகபக்தர். இவருக்கு இரு கண்களிலும் பார்வை கிடையாது.
இவர் பாடும் பாடலைக் கேட்க முருகப்பெருமானே நேரில் வந்து விடுவாராம்! அவ்வளவு ஆசை இவரின் பாடலின் மீது.
ஒருநாள் கவிராயர் கவி பாடிக் கொண்டிருந்தார். வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வந்தது.
கவிராயருடைய வெற்றிலையை மெல்லும்போது, அதன் எச்சில் முருகனின் பரிவட்டம் மீது பட்டுவிட்டது.
அது திருச்செந்தூர் மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர் பரிவட்டத்தில் தெரி்த்து தெரிந்தது.
இதைக் கண்ட பட்டர் பதை பதைத்து போனார். இப்படி ஏற்பட்டது எப்படி என்று தெரியாமல் மனம் நொந்தார்.
அன்றிரவு பட்டரின் கனவில் முருகன் தோன்றி, 'பட்டரே, என்மீது ஆழ்ந்த பக்தி கொண்டவன் முத்தாலங்குறிச்சி கவிராயர் ஆவார்.
அவரும் பார்வையற்றவர். அவருக்குப் பார்வையளிக்க நான் முடிவு செய்து விட்டேன்.
ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி தோறும் என்னை தரிசிக்க அவர் நடந்தே வருகிறார்.
அவரைக் கூப்பிட்டு வந்து எனக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து அவர் ஒரு கண்ணில் ஒத்து எடுப்பீராக!
அப்போது அந்தக் கண்ணில் அவருக்குப் பார்வை கிடைக்கும். மறு கண்ணை எப்போது முருகப்பெருமான் திறப்பார் என்று உங்களிடம் கேட்பார்.
அதற்கு அவரைப் பாஞ்சாலங்குறிச்சிக்குப் போகுமாறு சொல். அங்கே என் பக்தன் கட்டபொம்மன் அவருக்கு மறுகண்ணைத் திறப்பான் என்று கூறி மறைந்தருளிப் போனார்.
அடுத்த வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் வந்த கவிராயர் கடலில் நீராடி விட்டு வந்தார். அவரைக் கண்டுபிடித்து முருகன் சந்நதிக்குக் கூட்டி வந்தார் பட்டர்.
முருகன் ஆணைப்படியே ஒரு பூவை எடுத்து கவிராயர் கண்ணில் வைத்து ஒற்றியெடுத்தார்.
பளிச்சென்று கண்ணில் பார்வை கிடைத்தது கவிராயருக்கு. இன்னொரு கண்ணின் பார்வை கிடைக்க நீங்கள் பாஞ்சாலங் குறிச்சி செல்லுங்கள் இது முருகனின் ஆணை, என பட்டர் கூறியனுப்பினார்.
இதன்படி பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்றார் கவிராயர். கவிராயரிடமிருந்து விவரம் தெரிந்துகொண்ட கட்டபொம்மன் வியப்பில் ஆழ்ந்தார்.
மறுகண்ணைத் திறக்க என்னிடம் முருகன் அனுப்பினாரா? என்று கேட்டு வியந்து நெகிழ்ந்து போனார்.
உடனே ஜக்கம்மாள் கோயிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். பின் கவிராயரை ஒரு கையில் பிடித்து கொண்டு மறுகையில் உருவிய வாளுடன் கோயிலுக்கு நுழைந்தார்.
உருவி வாளுடன் கட்டபொம்மனின் நிலை கண்டு அதிர்ந்து போனார் கவிராயர்.
என்ன இது? உருவிய வாளுடன் கோயிலுக்குள் வருகிறீரகள்? என்று சினந்து கேட்டும் விட்டார். புலவருக்குத் தான் கோபத்திற்கு குறைவிருக்காதே!, அதேபோல கேட்டும் விட்டார்.
கோயிலின் புனிதத்தை அவர் சிதைக்கிறாரே என்ற ஆதங்கம் புலவருக்கு. ஆனால், கட்டபொம்மன் ஏதும் பேசாமல் ஜக்கம்மா தேவிக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து கவிராயரின் மறு கண்ணில் வைத்து ஒற்றினார்.
என்ன ஆச்சரியம்! மறுகண்ணில் அந்தக் கண்ணும் பார்வை பெற்றது!
கவிராயர் ஆனந்தப்பட்டாலும், கட்டபொம்மனின் ஒழுங்கீனத்தால் மீண்டும் கோபப்பட்டார். ‘நீ ஆணவம் பிடித்தவன். அதனால்தான் தேவியின் சன்னிதானத்திலும் அதிகார மமதையில் உருவிய வாளுடன் நிற்கிறாய் என்றார்.
அம்மனை அவமதிக்கும் உன்னால் எனக்குக் கிடைத்த இந்தப் பார்வை எனக்கு வேண்டவே வேண்டாம், என்று கூறியவர் கட்டபொம்மனின் வாளை பிடுங்கி தன் கண்ணில் குத்திக் கொள்ள முயன்றார்.
புலவருடைய கரம் பற்றித் தடுத்தார் கட்டபொம்மன். கவிராயரே நான் ஆணவத்துடன் வாளைப் பிடித்து வரவில்லை, முருகப்பெருமானின் உத்தரவுப்படி என்னால் உமக்குப் பார்வை வராது போனால், இந்த வாளால் என்னையே குத்திக் கொண்டு உயிர் துறக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவிய வாளுடன் இருந்தேன், என்று நிதானமாகச் சொன்னார்.
கவிராயர் அப்படியே ஸ்தம்பித்துப் போனார். ‘‘என்னது? உன் உயிரையே மாய்த்துக் கொள்ள நினைத்தாயா! நீ அல்லவா முருகனின் சிறந்த பக்தன்! என்னை மன்னித்து விடு கட்டபொம்மா! என்னை மன்னித்து விடு என்று கண்களில் நீர் ததும்ப கரங்கூப்பி சொன்னார்.
அப்போது முருகப்பெருமானின் அசரீரி கேட்டது. கவிராயரே உமக்குப் பார்வை தரவேண்டும் என்றால் முத்தாலங்குறிச்சியிலேயே பார்வை கொடுத்த பட்டரும், கட்டபொம்மனும் என் கடமைகளைச் செய்ய பிறந்தவர்கள் என உமக்கு உணர்த்தவே இந்தத் திருவிளையாடலை யாம் நிகழ்த்தினோம்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு கவிராயரும், கட்டபொம்மனும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
கவிராயரைப் பார்க்க கட்டபொம்மன் முத்தாலங்குறிச்சிக்கு வந்த போது அவர் தாமிரபரணி ஆற்றின் கரையில் குதிரையைக் நிப்பாட்டிய இடம், தற்போதும் *வீரபாண்டியன் கசம்* என்று அழைக்கப்பட்டு வருகிறது.
அங்கிருக்கும் கோயிலில் அதுவரை முகில்வண்ணநாதராகத் திகழ்ந்த ஈசன், அதன்பின் வீரபாண்டீஸ்வர் என அழைக்கப்பட்டும் வந்தார்.
தற்போது வீரபாண்டிய கசம் சிறு குட்டையாக மாறியிருக்கிறது!
கட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
இறைவன் நம் மூலமாக ஒரு திருவுகளை நிகழ்த்த அருளுவதெல்லாம் சாதாரணம் கிடையாது.
அவனை வணங்கி விட்டோம் என்றிருப்போர்க்கெல்லாம், சாதாரண வாழ்நிலையே கழியும்.
அதைவிட ஒரு படி மேலே வந்து, அவன் மீது பரிபூரண நம்பிக்கை வைத்துப் பாருங்கள். அவன், நம் மீது நம்பிக்கை கொணரும் பாத்திரங்களை நிகழக் காரணமாவான்.
அவன் மீது உயிரைவிட மேலான நம்பிக்கையை எவ்வளவு வைத்திருந்தால், கட்டபொம்மன் மீது முருகனுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும்.
நம் மீது அவனுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு காராணகாரியங்களை செய்யத் துணிவோமாக!

ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு*

 ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு* *ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்...