Monday 20 February 2017

வாழைப்பழம் தேங்காய் தெய்வங்களுக்கு படைப்பது ஏன்..?


வாழைப்பழம் தேங்காய் தெய்வங்களுக்கு  படைப்பது ஏன்..?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் தேங்காய் படைக்கிறார்கள்.ஏன்...?

மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.

இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.
எனது இறைவா!

மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!
என வேண்டவே....

நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.
அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.

அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.
மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.

ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.
முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.
அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.
பழம் கொட்டை என்பது கிடையாது.

அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.
நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.






ஜோதிஷஆதித்யா, 
திரு.A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி
செல்:+91 99941-50658


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...