Friday 17 February 2017

நாக தோஷம் நீங்க

                

                நாக தோஷம் நீங்க





ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12 வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.





1. லக்னம் அல்லது சந்திரனுக்கு 2ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். கணவன்,மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம்.

2. 
லக்னம் அல்லது சந்திரனுக்கு 4ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம். இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு ரோகம், குடும்பவாழ்க்கையில் அதிருப்தி, முதலிய 
கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.

3. 
லக்னம் அல்லது சந்திரனுக்கு 5ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும்.ஆனால் 5ம் அதிபதி சுபர் சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் இந்த நாகதோஷம் நிவர்த்தி அடைந்து 
குழந்தைச் செல்வம் ஏற்படும்.

4. 
லக்னம் அல்லது சந்திரனுக்கு 7ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப் படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு,
மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும், சில தம்பதிகளிடையே பிரிவினை கூட நேரலாம்
ஆனால் ஜாதகத்தில் 7ம் அதிபதி சுக்கிரன் பலமாக காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்,

5. 
லக்னம், அல்லது சந்திரனுக்கு 8 மிடத்தில் ராகு அல்லது கேது இருக்கும் நாகதோஷத்தினால்,
விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டைசச்சரவு, பிரிவினை, ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8வது வீட்டை சுபர் பார்த்தாலோ, 8ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.

6. 
லக்னம் அல்லது சந்திரனுக்கு 12ம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பதும் நாகதோஷம்.
இதனால் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு, பண விரயமும் ஏற்படும். 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ அல்லது 12ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும்.

7. 
அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்மாந்திர தசையாக 
வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ, அல்லது 2வது வீட்டிலோ
 இருப்பதால் பாதிப்பு ஏற்படாதுவாழைபழம்.

8. அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்சத்திரமாக வரும் ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது 
தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.


பாம்புப் புற்றை இடித்தால், பாம்பினை அடித்து கொன்றால் நாகதோஷம் ஏற்பட்டு விந்து சக்தி நீர்த்துப்போய் குழந்தை தாமதம் அல்லது குழந்தை இல்லாத நிலையும் ஏற்படும்.
நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறதாம். ஆகவே தோஷமுள்ளவர்கள் கீழுள்ள ஆலயங்களில் ஏதாவதொன்றில் நாகப்பிரதிட்டை செய்தால் தோஷம் நீங்குமென சோதிடர்கள் சொல்கின்றனர்.
ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் நல்லதுதானே!




ஜோதிஷஆதித்யா,
திரு.A.V. சம்பத் [எ] சண்முகராஜ் தம்பிரான் ஜி

செல்:+91 99941-50658  

1 comment:

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...