Friday, 16 January 2026

**அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்.*

        **அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர்.*                                     


இக்கோவில், தமிழ்நாட்டில், மகாசமுத்திரக் கரையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற, சிவன் கோயிலாகும்.

இது, மயிலாடுதுறை நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு மூலவர் அமிர்தகடேஸ்வரர் , அபிராமி தாயாராகும். இக்கோவில், சம்பந்தர் அப்பர், சுந்தரர், ஆகிய மூவராலும் தேவார பாடல் பாட பெற்றது.
தேவாமிர்தமே , லிங்கமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இக்கோவில் மார்கண்டேயர் மற்றும் அபிராமி பட்டர் ஆகியோரின் புராணக்கதைகளுடன் தொடர்புடையது.
கோவிலின் சிறப்பு:
இங்கு காலனை வென்ற வரலாறு இருப்பதால், ஷஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வழிபாடுகளுக்குப் மிகவும் பிரபலம்.
எமபயம் நீக்கும் தலங்கள் திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.
தல வரலாறு: இக்கோவில் 51 சக்தி பீடங்களில், கால சக்தி பீடமாக திகழ்கிறது.
பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல், அதை குடத்தில் (கடம்) எடுத்துக் கொண்டு செல்லும் போது வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு, நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்த போது குடத்தை எடுக்க முடியவில்லை.
குடம் பூமியில், வேர் ஊன்றி விட்ட இடம் இத்தலமான திருக்கடவூர் என்று பெயர் பெற்றது. அந்தக் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால், இந்த லிங்கேஸ்வரர் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
மார்கண்டேய முனிவரின் விதிக்கப்பட்ட காலக்கெடு வந்தபோது, எம தூதர்கள் அவரை அழைத்து செல்ல வந்தனர். அப்போது , மார்க்கண்டேயர், இங்குள்ள, சிவலிங்கத்தை இறுக பிடித்துக்கொண்டார். சிவபெருமான், இங்கு பிரசன்னமாகி, எமனிடமிருந்து, மார்க்கண்டேயரை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.
சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூர் ஒன்றாகும். இங்குள்ள அம்பாளின் அழகில் தன்னை மறந்து அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று சொல்லி அரச கோபத்திற்கு ஆளாகி அபிராமி அந்தாதி பாடி முழுமதியை வானத்தில் காட்டி அரசனை மெய்சிலிர்க்க வைத்த அபிராம பட்டர் அவதரித்த தலம் இதுவாகும்.
இறைவன் கருவறைக்கு முன்னால், உள்ள மண்டபத்தில் காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உருவம் பார்த்து தரிசிக்க வேண்டியதாகும். காலன் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கிறான். காலசம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி, இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காணப்படுகிறார். மார்க்கண்டேயர் அருகில் கூப்பிய கரத்துடன் நிற்கிறார்.பிறகு எமனுக்கு மன்னிப்புக் கொடுத்த சிவபெருமான் எமனை தன் சந்நிதிக்கு எதிரே இருக்கச் செய்து விடுகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு சிறு கோவில் உள்ளது. எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகின்றன.
60வது வயது தொடங்கும் போது உக்ரரத சாந்தியும், 61வது வயது தொடக்கத்தில் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியும், 71வது வயது தொடக்கத்தில் பீமரத சாந்தியும், 80வது வயதில் சதாபிஷேகமும் செய்து கொள்கின்ற தம்பதிகளை இத்தலத்தில் நாம் நிறையப் பார்க்க முடியும்.
திருக்கடவூர் தலத்தில் இப்படிப்பட்ட சாந்திகள் செய்து கொள்வது காலங்காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒன்றாகும்.
தமிழ் நாடு
மயிலாடுதுறை - தரங்கம்பாடி பேருந்துச் சாலையில் (இரயில் மார்க்கமும் இதுவே. திருக்கடையூர் நிலையத்திலிருந்து 1 கி. மீ. தொலைவில்) இத்தலம் உள்ளது.

No comments:

Post a Comment

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...