Friday, 16 January 2026

🐂 மாட்டுப் பொங்கல்..


 🐂 மாட்டுப் பொங்கல்..

கால்நடைகளை அழகுபடுத்தி.. வழிபடலாம் வாங்க..!
🌳 வேரின்றி மரம் கிடையாது..
🐂 மாடுகளின் துணையின்றி..
🌾 இயற்கை விவசாயம் கிடையாது..
✨ அனைவருக்கும் இனிய 🐄மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்! 💐
🐄 மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம்🕒
☀️ 🌅 காலை : 06.43 முதல் 10.30 வரை
🌞 பிற்பகல் : 01.43 முதல் 02.13 வரை
🌆 மாலை : 05.30 முதல் 06.30 வரை
🙏 உழவு தொழிலுக்கு உறுதுணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கலாகும். இந்நாள் தைப்பொங்கலுக்கு மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இது பட்டிப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.
🐂 மக்களின் வாழ்வில் ஒன்றிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லா தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக கொண்டாடுகின்றனர்.
🐂 ஏர் பிடித்து உழவனுக்கு உதவிய காளைகளுக்கும், பால் தந்து உணவளிக்கும் பசுக்களுக்கும் நன்றி சொல்லும் நாள் இது. மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, கழுத்தில் மணிகள் மற்றும் மலர் மாலைகள் சூட்டி மகிழ்வார்கள். அன்று மாடுகளுக்குப் பிரத்யேகமாக பொங்கல் வைத்து ஊட்டுவார்கள்.
🎨 கால்நடைகளை அழகுபடுத்துதல் :
🔥 மாட்டுப் பொங்கல் அன்று தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கற்பூர தீபாராதனை காட்டுவார்கள். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் 🍌🍎 கொடுப்பார்கள்.
🐄 கால்நடைகளுக்கு பொங்கல் கொடுக்கும்போது "பொங்கலோ பொங்கல்! மாட்டுப் பொங்கல்! பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!" என்று கூறுவார்கள். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.
🐂 தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் மிக விமர்சையாக நடைபெறும்.
⚔️ ஏறுதழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டை குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவதும், கொம்பை பிடித்து வீழ்த்துவதும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கிய அம்சமாகும்.
🏇 வீர விளையாட்டு: தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு இந்நாளில் நடத்தப்படும். இது காளைகளைப் பாதுகாக்கவும், இனவிருத்திக்காகவும் நடத்தப்படும் தொன்மையான மரபு.
🛐 மாட்டுப் பொங்கல் வழிபடும் முறை:
🌿 பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
🫖 மாட்டுப் பொங்கலன்று, நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, தொழுவத்தை தூய்மைப்படுத்தி கோலம் 🎨 போட்டு, நல்ல நேரத்தில் ஒரு பெரிய பானையில் பொங்கலிடும்போதே, அதிலிருந்து பொங்கல் தண்ணீர் என்று கொஞ்சம் தண்ணீரை ஒரு பெரிய சொம்பில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
🪚 வீட்டிலுள்ள கத்தி, கடப்பாறை, படி, அரிவாள்மனை போன்ற உழவுக்கும், சமையலுக்கும் உதவும் எல்லா பொருட்களையும் கழுவிக் காயவைத்து பொட்டிட்டு பொங்கல் மேடையில் வைத்துவிடுங்கள்.
🚜 இதுதவிர வீட்டிலுள்ள வாகனங்களை கழுவி துடைத்து பொட்டிட்டு, சந்தனம் தெளித்துவிட்டு, வாழைக்கன்றுகள், மாவிலையால் மாலைகள் போட்டு, பலூன்கள் 🎈 கட்டுங்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்து கருவிகளையும் பொட்டிட்டு அழகுப்படுத்துங்கள்.
🐄 வண்டியிழுக்க உதவும் காளைமாட்டிற்கும், காலை-மாலை பால் தரும் பசு மாடுகளுக்கும், எருமை மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கொம்புகளை சீவிவிட்டு, குளிப்பாட்டி, வண்ணங்களை கொம்புகளில் அடித்திடுங்கள்.
🎀 கொம்புகளின் இடையில் பலவண்ண ரிப்பன்கள், குஞ்சம், சலங்கை 🔔, பலூன்களை கட்டி, நெற்றியில் மஞ்சள் குங்குமம், சந்தனம், கழுத்தில் தோரணம், மாவிலை மாலை போட்டு புதிய மூக்கணாங்கயிறு, தாம்புக்கயிறு அணிவித்திடுங்கள்.
🌾 தாம்பாளத் தட்டுகளில் தோட்டத்தில் விளைந்த பயிர்களை வைத்தும், தேங்காய் 🥥, பூ 🌸, பழம் 🍎🍌, நாட்டுச்சர்க்கரை 🍬 என எல்லாவற்றையும் பூஜைக்காக எடுத்து வையுங்கள்.
🔥 பொங்கல் பொங்கும்போது பொங்கலோ பொங்கல்! மாட்டுப் பொங்கல்! என்று எல்லோரும் குரல் கொடுத்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டுங்கள். அதன் பின் பசு, காளை, எருமை, ஆடு என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் போன்ற பிரசாதத்தை ஊட்டிவிடுங்கள். பிறகு மாடுகளை சுத்தி திருஷ்டி கழித்து விட்டு வழிபடுங்கள்.
🙏 உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க🪵, ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி, எண்ணற்ற விதங்களில் மாடுகள் நமக்கு பயன்படுகிறது.
🌅 சில வீடுகளில் கால்நடைகளுக்கு காலையிலேயே பூஜை செய்துவிடுவார்கள். சிலர் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜை செய்து அதன்பின் கால்நடைகளை சற்று வெளியே ஓட்டிப் போய் திரும்ப வீட்டுக்கு கூட்டி வருவார்கள்.
🪜 வீட்டுக்கு திரும்பக் கொண்டு வரும்போது வீட்டு நிலைப்படியில் உலக்கையை வைத்து அதைத் தாண்டிப் போகுமாறு அழைத்துச் செல்வது வழக்கம்.
🎊 இவ்வாறு உங்கள் வீட்டு கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து, மரியாதை செலுத்தி மகிழ்ந்திடுங்கள்..!!
🙏 செய்யும் உதவிக்கு.. மனிதனுக்கு மட்டுமல்ல.. மாடுகளுக்கும் நன்றி சொல்வோம்..!🙏

No comments:

Post a Comment

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...