Friday, 16 January 2026

பத்ரகாளி அகோர மந்திரம் (தியானம்)


 பத்ரகாளி அகோர மந்திரம் (தியானம்)

--------------------------------------------
அரி ஓம் நமசிவாய அங் நங் அங் இங் அருண நடமாடிடும் அம்பிகே அகோர வீரபத்ர காளி அம்மே விரித்த சடையும் மூன்று கண்ணும் இருண்ட மேனியும் ஏறிட்ட பார்வையும் கடித்த பல்லும் காலில் பொற்சிலங்கையும் ஆயிரம் கையும் ஸ்ரீ சூல கபாலவும் கையில் எடுத்த வாரியல்லும் தெற்றிபல்லும் சிந்தின குருதியும் சீரிய முகவும் கொண்ட அகோர வீரபத்ரகாளி வா வா வஞ்சனை செய்தவனை சூனியம் செய்தவனை அஷ்ட கர்மங்கள் செய்தவன தாக்கு தாக்கு தூரு தூரு கொல்லு கொல்லு சண்ட பிரஜண்டி ஜாடு ஜாடு அகோர வீர மகாகாளி உன்னையும் என்னையும் படைத்த ஆதி பரமசிவன் தன்னாணு என்னுடைய வாக்கில் நின்று அருள் செய்திடும் அம்மே ஸ்ரீ வீரபத்ர காளி உன் பாதம் நமோ நமஸ்தே...
மந்திரத்தை பிரயோகம் பண்ணும் முறை:
இந்த மந்திரம் பத்ரகாளியின் தியான மந்திரம் ஆகும். மாந்திரீக கர்மங்கள் செய்வதற்கு செல்லும்போதும் அந்த இடத்தில் மகாகாளிக்கு பூஜை வைக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை அந்த இடத்தில் தியானம் பண்ண அந்த பூஜை எளிதில் வெற்றி ஆகும்..
இந்த மந்திரம் மகாகாளிக்கு பூஜைகள் செய்யும் போதும் மந்திர கர்மங்கள் பிரயோகம் பண்ணும் போதும் ஜெபிக்க வேண்டிய மந்திரம் ஆகும்.
மேலும் பத்ரகாளி பூஜை செய்து வருபவர்கள் இந்த மந்திரத்தை 21 தடவை வீதம் சொல்லி வர அவர்களின் சத்ருக்கள் தானாக அழிந்து போவார்கள்.
எதிர்த்து வருகின்ற சத்துருக்கள் அவர்களைத் தெரியாமலே அவர்கள் அழிந்து விடுவார்கள். ஒரு சிறந்த பாதுகாப்பு கவசம் மந்திரமாக இந்த மந்திரம் செயல் படும்.
இந்த மந்திரத்தை மட்டும் சித்தி பண்ணி பத்ரகாளி தேவியின் அனுக்கிரகத்தைப் பெற முடியும்.
காளி பூஜை செய்தவர்கள் இது போன்ற மந்திரங்கள் கட்டாயம் மனப்பாடம் பண்ணி வைத்திருப்பது மிக நல்லது.
இந்த மந்திரம் ஜெபிக்கும் போது சாதாரண சுத்தமான பூஜை பொருட்கள் வைத்தால் போதும் (அகோர பூஜையும் குருதி பூஜையும் கூட பண்ணலாம் தேவை என்றால்) அது அவரவர் பூஜை மார்க்கத்தை பொறுத்து உள்ளது.

No comments:

Post a Comment

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...