ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

Thursday, 25 October 2018

கவியரசு கண்ணதாசன்

                                                                   கவியரசு கண்ணதாசன்

பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!!



🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை
இருப்பது அவனுக்குப் புரிகிறது.

🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

🌼இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

🌼வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

🌼பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

🌼பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

🌼நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

🌼இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

🌼நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

🌼கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

🌼காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

🌼விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

🌼எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

🌼எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

🌼பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.

🌼ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

🌼பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

🌼மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

🌼`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’

🌼இதுதான் அந்தப் பழமொழி.

🌼பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

🌼ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

🌼இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

🌼பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

🌼ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

🌼நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.

🌼`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

🌼`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

🌼அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.

🌼அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.

🌼இனி விஷயத்திற்கு வருகிறேன்.

🌼`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

🌼உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

🌼தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

🌼அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

🌼இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

🌼வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

🌼ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

🌼சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

🌼முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

🌼இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

🌼மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு
நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

🌼இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.

🌼சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு.

🌼அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

🌼மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

🌼எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

🌼ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்
நம்முடைய நாட்டிலே உண்டு.

🌼தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

🌼ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

🌼விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

🌼தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

🌼`மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

🌼அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

🌼`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

🌼எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில்
“நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்”
என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம்
தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

🌼நல்லது.

🌼`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

🌼எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

🌼ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

🌼“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

🌼ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

🌼பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

🌼நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

🌼காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

🌼நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை
விடவா அவன் உயர்ந்து விட்டான்.

🌼ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

🌼சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

🌼ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

🌼ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.

🌼ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

🌼அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

🌼வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

🌼ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர,
அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

🌼பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

🌼“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”

🌼“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.

🌼அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது
அவனுக்குத் தெரியுமா?

🌼அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

🌼ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

🌼`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

🌼`மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

🌼எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

🌼மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.

🌼நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.

🌼இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

🌼காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

🌼செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

🌼கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

🌼என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக்
கண்டுபிடிப்பேன்.

🌼என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

🌼தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.

🌷பக்குவமாய் வாழுங்கள்;
வாழ்வதன் பயனை உணருங்கள்;
வாழ்வின் பலனை அனுபவியுங்கள்
at October 25, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

உவமை கதை

                                                                            உவமை கதை

ஒரு பிச்சைக்காரர் இருந்தார்.
அவர் எப்போதும் ஊரின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் அமர்ந்திருப்பார்.
வேறு எங்கும் போய் பிச்சை எடுக்க மாட்டார்.
பசி எடுத்தால் மட்டுமே உணவு கேட்பார்.

பணம் வாங்க மாட்டார்.

அவரது நல்ல பண்பைப் பார்த்த அந்த கிராமத்தினர் தினமும் அவருக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சில நாட்களில் அதிகமான உணவு வந்துவிட்டால், அதையும் யாருக்காவது தானம் செய்து விடுவார்.

எனவே அவரிடம் அந்த கிராமத்தினர்
நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

ஒரு நாள் அவர் இறந்து விட்டார். ஊரே துக்கப்பட்டது.

ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி
ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

பிச்சைக்காரரின் உடலை அவர் தங்கியிருந்த, அவருக்குப் பிரியமான அதே இடத்திலேயே புதைத்துவிட முடிவு செய்தார்கள்.

அவர் இருந்த இடத்திலேயே குழி தோண்ட ஆரம்பித்தார்கள். நாலாவது அடி தோண்டும்போது கடப்பாறை ஏதோ உலோகத்தில் மோதியது போல 'நங்' கென்று சத்தம் கேட்டது.

எல்லோரும் வந்து எட்டிப் பார்த்தார்கள். அந்த இடத்தில் , ஒரு பெரிய பித்தளை அண்டா தென்பட்டது.
உடனே தோண்டுவதை நிறுத்தி விட்டு அண்டாவை வெளியே எடுத்தனர்.
திறந்து பார்த்தால்,
அவர்களுடைய கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை.

ஆமாம்.,
அண்டா முழுக்கத் தங்கமும்,
வைரமும் நிறைந்திருந்தது.

அந்தப் புதையலின் மதிப்பு அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே பல ஆண்டுகளுக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு இருந்தது.

புதையல் ஊருக்குத் தேவையான நல்ல காரியங்களைச் செய்யும்படி
அந்த கிராமத்தின் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைவர் சொன்னார் ,

"தான் உட்கார்ந்திருந்த
இடத்திற்கு கீழே இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா...

அந்த மனுஷன் பிச்சை எடுக்காம ,
ஒரு மகாராஜா மாதிரி வாழ்ந்திருக்கலாம். கடைசி வரைக்கும், பாவம், பிச்சைக் காரனாவே வாழ்ந்து செத்தார்...!"

பலரும் இப்படித்தானே தங்கள் அருகிலேயே இருப்பது தெரியாமல் நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் சமாதானத்திற்கும் பிச்சைக்காரர்களாய் எங்கெங்கோ அலைகிறார்கள்.

at October 25, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப்

                    
ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப்
புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன்
நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது.
நரிக்கு ஏக குஷி…

“நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய
எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு
யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்
படியாகும்!’ என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்
படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை
என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது.
தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை.

மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின்
நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது.”ஆஹா… பசியால்
நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்…’ சிறுத்து விட்டோம்
என்று வருந்தியது நரி.

இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ,
கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம்,
பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல்
நரிக்குப் பின்பாக விழுந்தது… அதனால், நரிக்குத் தன் நிழலே
தெரிய வில்லை…”ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம்.
நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது… ஒரு வேளை இறந்து
போய் விட்டோமோ?’ என்று பயந்தது.

பிறகு, “சீச்சி… நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு
ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்..”‘
என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.

இந்த நரியின் கற்பனை மாதிரி தான்… சிலர் தங்களை வெகு
பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ
தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு
அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி
வாடுகின்றனர்.

காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்; மாலை
நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம்,
ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம், வாழ்வைக் கொண்டாடுவோம்.
at October 25, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கொக்கொக்கக் காத்திரு! அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு

                                                        கொக்கொக்கக் காத்திரு!
                                    அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு



என்கிறார் வள்ளுவர்.

துள்ளி ஓடிடும் சிறு மீன்கள், கரையில் உள்ள கொக்கு கண்ணற்றது, செயல் திறனற்றது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கும் ஏன்? கொக்கு, தான் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கிறதே அதனால்.

இத்தனை மீன்கள் துள்ளி ஓடின, கரையோரக் கொக்கு ஏதும் செய்திடவில்லை, இயலவில்லை; இனி நமக்கென்ன பயம் என்று எண்ணிக் கிளம்புகிறது, சிறிதளவு பெரிய மீன்! என்ன ஆகிறது? கொக்கு கொத்திக் கொள்கிறது! கொக்கு அங்கே இருந்தது அதற்குத்தானே?

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

இரைதேடிக் காத்திருப்பதும், கிடைத்ததும் பற்றிக் கொள்வதும் கொக்குக்கு மட்டும்தானா இயல்பு; மற்றப் பலவற்றினுக்கும் உண்டே! ஏன் கொக்கினை மட்டும் குறிப்பாகக் காட்டுகிறார் வாக்குண்டாம் பாடிய ஔவையார் என்று கேட்கத் தோன்றுகிறதா? காரணத்தோடுதான், காட்டியிருக்கிறார்.

புலிகூட இரை தேடிக் காத்திருக்கிறது, பதுங்கிக் கொள்ளக் கூடச் செய்கிறது.

வல்லூறு கூடப் புறாவைத் தேடி வட்டமிடுகிறது.

ஆனால், பதுங்கி இருந்திடும் புலி, மானைக் கண்டதும் பாய்கிறது, மான் ஓடுகிறது, புலி துரத்துகிறது, பல மைல்கள் கூட அலுப்பு மேலிட ஓடி ஓடி வேட்டையாடிய பிறகே மானைக் கொல்ல முடிகிறது புலியினால்; ஒரு போராட்டம் நடைபெறுகிறது.

வல்லூறு பாய்ந்து வருவது கண்ட புறா தப்பித்துக் கொள்ளப்படும் பாடு, கொஞ்சமல்ல.

கொக்கு மீனைக் கொத்துவது அவ்விதமல்ல! என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் மீன் துள்ளி வருகிறது. கொக்கு அதைக் கொத்தப் போக, மீன் தப்பித்து ஓட, கொக்கு விடாமல் துரத்திச் சென்று கொத்திடும் முறை இல்லை. மீன் வருவதும் கொக்கு கொத்துவதும், மீன் சிக்கிக் கொள்வதும் உடனே இரையாகிவிடுவதும் எல்லாம் கண் மூடிக் கண் திறப்பதற்குள். மீன் வருவதற்கும், மீன் சிக்குவதற்கும் உள்ளே இரையாகிச் செல்லுவதற்கும், இடைவெளிகளே இல்லை; எல்லாம் ஒரே நேரத்தில் நடைபெற்று விடுகிறது. அதனால்தான் கொக் கொக்கக் கொத்திட வேண்டும் என்றார். பாம்பு கூட, ஓசைப்படாமல் தீண்டிவிடுகிறது. ஆளை வேட்டையாடிக் கடிப்பதில்லை. ஆனால், மனிதனைத் தீண்டித் தீர்த்துக் கட்டுமேயன்றித் தின்பதில்லை. கொக்கு தீண்டித் தீனியாக்கிக் கொள்கிறது மீனை. அவ்வளவு கூர்மையான பார்வை. அத்தனை நேர்த்தியான குறிபார்த்திடும் திறன், அவ்வளவு வேகமான கொத்தும் தன்மை, கொக்குக்கு! அத்தனை திறமையாக இரை தேடிக் கொண்ட கொக்கு, புலிபோல உறுமுவதில்லை, இரத்தம் குடித்த மகிழ்ச்சியில் புலி படுத்துப் புரள்கிறதே, அதுபோலவும் இல்லை, ஏதும் அறியாததுபோல, எப்போதும் போல இருக்கிறது கொக்கு, காரியத்தைக் கச்சிதமாக முடித்துக் கொண்டு! இவற்றினை எல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் வள்ளுவர், "கொக்கொக்க' என்று கூறினார்.
Photo
at October 25, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய வித்தியாசமான ஆய்வு ......

                                               சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை
                                                             பற்றிய வித்தியாசமான ஆய்வு ......

Image may contain: 1 person, hat
·
சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை
பற்றிய வித்தியாசமான ஆய்வு ......
வாசித்து பாருங்கள் .... வியந்து போவீர்கள் .......
ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற
சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.
அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத
தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.
"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும்
அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.
"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"
சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது
ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.
இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப்பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும். முருகன் கையிலுள்ள வேலும் இந்த
சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது. மருத்துவர்களின் லோகோவில் இடது
புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.
"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த
சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்
"உள்ளொளியாய் இருந்து
உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி
உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி
எங்குமுனைக் காட்டிடுவான்"
சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம். ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்
வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரேஅவர் எவராலும் பெறப்படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை. முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையனசத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்குகடவுள் முருகன் என்றார் . எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான் படைப்பு உருவாகும் .
ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும் எனவே ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுலுடன் முடிந்து போகும் எனவே எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாட்டி வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே உணர்வோம். எனவே ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை
பிள்ளையார் என்று அழைத்தார்
. சிவன் அணுத்துகள் atom , என்பதை உணர்ந்த அதத்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசத்தியன சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல் இருக்கு செவ்வேல் குறிக்கும் அதவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள். இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிளார்கள் சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பது தான் செவ்வேல் இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன்படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.
ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம். பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது. தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.
ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும். இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் அறியலாம்.



at October 25, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

       கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!


No automatic alt text available.
தமிழ்நாடு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ம பெ ரொ ராபின்
September 30 at 10:06 PM ·
கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா,
ஆவண எழுத்தர்
அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
at October 25, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

திருமணச் சடங்கு

                                                                   திருமணச் சடங்கு

திருமணம் – விளக்கம்
திருமணம் என்ற சொல்லுக்கு விளக்கம் பார்க்கும் போது இருவரும் ஒன்று சேரும் நிலையைக் குறிப்பதாகும். ஒத்த பருவம் எய்திய ஆணையும் பெண்ணையும் கணவன் மனைவியாக்கியதற்குக் கூறப்படுவதாகும். எல்லா மனித இனங்களிடையேயும் திருமணச் சடங்கு நிறைவேற்றப்படுகிறது. சமூகத்திலுள்ள மற்றவர்களுக்கு இச்சம்பவத்தைத் தெரிவிப்பதற்கே இத்திருமண முறை பின்பற்றப்படுகிறது.
1. திருமணத்திற்கு முன் நடைபெறும் சடங்கு
2. திருமணத்தன்று நடைபெறும் சடங்கு
3. திருமணத்திற்கு பின் நடைபெறும் சடங்கு
என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
திருமணத்திற்கு முன் நடைபெறும் சடங்கு
பெண் பார்த்தல்
உறவுக்காரர் அல்லது நண்பர்கள் மூலம் பெண் எங்குள்ளது என்று முதலில் விசாரித்துப் பெண்ணைப் பார்ப்பார்கள். பெண் பிடித்து விட்ட பிறகு மாப்பிள்ளை வீட்டார் ஒரு நாள் வருகிறோம் என்று கூறி விட்டுச் சென்று, மறுபடியும் ஒரு நாள் வந்து பெண் எங்களுக்குப் பிடித்திருக்கிறது, நீங்கள் மாப்பிள்ளை வீடு பார்க்க வாருங்கள் என்று கூறுவார்கள். உணவு சாப்பிட்டுச் சென்று விடுவார்கள்.
மாப்பிள்ளை பார்த்தல்
பெண் பார்க்கச் செல்லும் போது மாப்பிள்ளையும் கூடச் செல்வார். சில சாதியங்களில் மாப்பிள்ளை செல்வதில்லை. ஆனால் மாப்பிள்ளை வீடு பார்க்கச் செல்லும் போது பெண் கூடவே செல்லும் பழக்கமில்லை. பெண்ணின் தாய், தந்தை, தாய்மாமன் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சென்று மாப்பிள்ளை வீடு சென்று மாப்பிள்ளை பிடித்திருக்கிறது என்று கூறி உணவு சாப்பிட்டு, திருமணத்தை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுப்பார்கள். சாதகம் பொருந்தி இருந்தால் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
நிச்சயம் செய்தல்
பெண் வீட்டாருக்கும் பெண்ணுக்கும், மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டாரையும் பிடித்து இருந்து–மாப்பிள்ளை வீட்டாருக்கும் மாப்பிள்ளைக்கும் பெண்ணையும் பெண்ட்டாரையும் பிடித்துவிட்டால் இருவீட்டாரும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சிதான் “நிச்சயம் செய்தல்” இதைத்தான் பரிசம் போடுதல் என்று கூறுகிறார்கள்.
“பரிசம் போட்டாலே பாதி பொண்டாட்டி”
“பரிசம் போட்டாலே பாதி புருசன்” என்று கூறப்படும்.
முகூர்த்த ஓலை
பரிசம் போட்ட பிறகு பெண் மாமன் பெண் வீட்டு உறவினர்கள் மாப்பிள்ளை மாமன் – மாப்பிள்ளை வீட்டு உறவினர்கள் இணைந்து வள்ளுவரின் மூலம் நல்ல நாள் பார்த்து, இரு வீட்டார் சம்மத நாளில் திருமண நாள் குறிக்கப்படுகிறது. ஒரு வெள்ளைத் தாளை எடுத்து நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி, பெண் - மாப்பிள்ளை இவர்களை மையமாக வைத்து, இன்னார் மகளுக்கும் இன்னார் மகனுக்கும் திருமணம் நடைபெறும் என்று எழுதித் தட்டில் வைத்துவிடுவார். இதை இரு வீட்டுத் தாய் மாமனும் தட்டு மாற்றிக் கொள்வார்கள்.
பத்திரிக்கை படைத்தல்
அச்சடித்து வந்த பத்திரிக்கையை ஒரு நல்ல நாள் பார்த்து தெய்வத்தை வேண்டி உறவுக்காரர் மத்தியில் படைக்கப்படுகிறது. படைக்கப்பட்ட பத்திரிக்கையில் நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி, அந்தப் பத்திரிக்கை தெய்வத்திற்கு வைக்கப்படுகிறது
பந்தல் போடுதல்
திருமணத்திற்கு முன்பு ஐந்தாம் நாள் பந்தல் போடப்படுகிறது. பச்சை மூங்கிலை வெட்டி முகூர்த்தக்கால் நடப்படுகிறது. ஏனென்றால், மூங்கிலைப் போல் வம்சம் விருத்தி அடைய வேண்டும் எனவும், இரு பக்கம் வாழை மரம் கட்டுவார்கள். வாழையடி வாழையாக்க் குடும்பம் வளரவேண்டும் என்பதற்காகவும் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
நலுங்கு வைத்தல்
பந்தல் போட்ட பிறகு மாலை நேரத்தில் பெண் வீட்டில் பெண்ணுக்கும் மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கும் நலுங்கு வைப்பது வழக்கமாக உள்ளது. நலுங்கு என்ற சொல் நலங்குதல் நலம் – பொங்குதல் என்ற சொல்லின் சுருக்கம் என்பார்கள். மணவாழ்க்கையில் மணமக்கள் அனைத்து நலங்களையும் வளங்களையும் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் வைக்கப்படும் ஒரு நிகழ்வு.
பெண் அழைப்பு
திருமணத்திற்கு முதல் நாள் நடைபெறும் நிகழ்வு இது. மாலையில் மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள். வரும்போது புதுப்புடவை, பூ, பழம், சந்தனம், குங்குமம், மாலை, நெல் போன்றவற்றை எடுத்து வந்து, பெண்ணை அலங்காரம் செய்து உறவுக்காரர் – அவ்வூர் நாட்டாண்மை – தாய்மாமன் – மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் சபையில் அமரவைத்து இருப்பார்கள். பெண்ணுக்குப் பொட்டு வைத்து பணம் வைத்து கொடுப்பார்கள். பெண் முதியவர்களின் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவாள். பெண் வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிட்டு விட்டு நல்ல நேரம் பார்த்து பெண்ணை அனுப்புவார்கள். வெள்ளிக்கிழமை பிறந்த பெண்ணாக இருந்தால் வாசற்படிக்கு முன் நிற்க வைத்து எதாவது தடையை (மோதிரம்) கழற்றி கொண்டு விடுவார்கள். பழங்காலத்தில் மாட்டு வண்டியிலும் இக்காலத்தில் வாகனத்திலும் பெண்ணை அழைத்து வரும் பழக்கம் உள்ளது.
திருமணத்தன்று நடைபெறும் சடங்கு
பெண்ணை அழைத்து வந்து மணமகனுக்குத் தெரிந்த வீட்டில் தங்க வைப்பது வழக்கம். இன்று நகரத்திலுள்ள மண்டபங்களில் திருமணம் நடைபெறுவதால் மண்டபங்களிலே பெண்ணைத் தங்கவைத்து விடுகிறார்கள். விடிந்து பெண்ணை அலங்காரம் செய்து தயார் நிலையில் வைத்திருப்பார்.
அரசாணிக்கால் நடுதல்
ஒதியங்கால் தரையில் ஊன்றி இருக்கும். அதனைத் தொட்டவாறு ஐந்து அல்லது ஏழு பானைகள் அடுக்கி இருக்கும். ஒதியங்காலில் மா இலை, நாணல் கட்டப்பட்டு இருக்கும். அம்மிக்கல், குத்துவிளக்கு, வாழை இலை, அரிசி, அதன் மேல் சிறிய கலையத்தில் மா இலை வைத்து, நடுவில் தேங்காய் மஞ்சள் பூசி வைக்கப்பட்டிருக்கும். சிறு குச்சுகளை வைத்துத் தீ வளர்க்கப்படும். முதலில் மாப்பிள்ளை வந்து அமர்ந்து அவர் கையில் கங்கணம் கட்டி மல்லிப் பூ மாலை போட்டு, சீக்காய் கழித்து, பட்டு வேட்டி பட்டுச் சட்டை, துண்டு, தேங்காய் பூ மணமாலை வைத்த தாம்பாலம் கொடுக்கப்படும். அதேபோல் பெண்ணையும் அழைத்து, சிறிய மாலை போட்டு, சீக்காய் கழித்து, ஒரு தாம்பூலத்தில் பட்டுப்புடவை, பட்டு ரவிக்கை, மணமாலை, பூ, தேங்காய் போன்றவை வைத்து மணமகள் தாய்மாமனிடம் கொடுக்கப்படும். அவர்கள் அலங்காரம் செய்து மணமேடைக்கு வருவார்கள்.
அரசர் காலத்தில், அரசனின் அனுமதி பெற்றுத்தான் திருமணம் நடைபெற வேண்டும். அதன்படி அரசவையிலிருந்து வருகின்ற கோலை வணங்கிய பிறகுதான் திருமணச் சடங்குகளைத் தொடர வேண்டும். இந்த மரபின் தொடர்ச்சிதான் இன்றைய நாளும் அரசனின் ஆணையாக வந்த காலை அரசானைக்காலாகக் கொண்டு சடங்கு செய்து வருகின்றனர்.
பாத பூசை செய்தல்
மணமக்கள் தங்கள் பெற்றோருக்குப் பாத பூசை செய்வார்கள். எவ்வாறெனில் ஒரு தாம்பாளத்தில் பெற்றோர்களை நிற்க வைத்து அவர்களின் பாதங்களைக் கழுவி பாதத்தின் மேல் சந்தனம் குங்குமத்தை வைத்து பூக்களைத் தூவி வணங்குவார்கள்.
சபையோர் தாலியை வாழ்த்தி வணங்குதல்
ஒரு தாம்பூலத்தில் மங்கல அரிசியும் தேங்காய் மேல் தாலியைக் கயிற்றோடு வைத்து அனைவரிடமும் காட்டி வாழ்த்துப் பெறுவர். அவர்கள் தாலியை வணங்கி, தட்டில் உள்ள மங்கல அரிசியைக் கொஞ்சமாக அள்ளி வைத்துக்கொள்வர். அந்த அரிசியைத் தாலிக்கட்டும் போது மணமக்கள் மேல் தூவுவார்கள்.
தாலிக்கட்டுதல்
வாழ்த்து பெற்று வந்த தாலியை வள்ளுவர் மணமகனிடம் கொடுப்பார். அதை எடுத்து மணமகன் மணமகள் கழுத்தில் கட்டுவார். அப்போது அனைவரும் மங்கல அரிசியை மணக்கள் மீது தூவுவார்கள். முதல் இரண்டு முடிச்சை மாப்பிள்ளை போடுவார். மூன்றாம் முடிச்சை மாப்பிள்ளையின் சகோதரி போடுவார். மணமகன் மணமகளை அணைத்தவாறு பின்பக்கமாகக் குங்குமத்தால் பொட்டு வைப்பார். முதலில் தாய் மாமன் பெண்ணின் நெற்றியில் (காசு) பட்டம் கட்டுவார். இதன் பிறகு நாத்திகள் மணமகள் நெற்றியில் பட்டம் கட்டுவர். அதன் பிறகு மற்றவர்கள் (காசு) பட்டம் கட்டுவார்கள். கல்யாண மாலையில் மனையில் இருக்கும் போது சுமங்கலிப் பெண்கள் வாழ்த்துவார்கள். மணமக்கள் வேட்டியில், மணமக்கள் சீலை முந்தானையில் முடிச்சு போட்டுத் தீயைச் சுற்றி வருவார்கள். தீ வலம் வந்த பிறகு அம்மிக்கல்லில் மணமகள் காலை வைக்கச் சொல்லி நாத்தனார் மிஞ்சி அணிவிப்பார். மொய் எழுதி, பரிசு பொருட்களை வழங்கி விருந்து சாப்பிட்டுச் செல்வார்கள்.
மண மாலையை கழட்டுதல்
மணமக்கள் கழுத்திலிருக்கும் மாலையைத் தானாகக் கழட்டும் பழக்கம் இல்லை. தாய்மாமன் மாலையைக் கழட்டுவார். அதற்குத் தாய் மாமனுக்குப் பணம் கொடுப்பார்கள். அரசாணிப் பானையை எடுத்து அதிலுள்ள ஒதியங்காளை வீட்டிற்குச் சென்று மாப்பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் நடுவார்கள்.
வரவேற்பு
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு மணமகள் வீட்டில் வரவேற்பு நடைபெறும். மாலை கழுத்துடன் அமர்ந்திருக்கும் மணமக்களை வரவேற்பார்கள். அங்கேயும் மணமக்களுக்கு மாலையிடுதல், சீர் வரிசை பொருட்கள் எழுதுதல், மொய் எழுதுதல், உணவு கொடுத்தல் போன்றவை நடைபெறும்.
சாந்தி முகூர்த்தம்
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மணமக்கள் மணமகன் வீட்டிற்கு வந்து விடுவார்கள். மாப்பிள்ளை வீட்டாரிடம் சாந்தி முகூர்த்தத்திற்குரிய பொருளை வாங்கி வரும்படி கூறுவார்கள். அதன்படி பால் பழ வகைகள், பூ, வெற்றிலை, பாக்கு, இனிப்பு வகைகள் வாங்கி வருவார்கள். பெண்ணை அலங்காரம் செய்து ஒரு சொம்பில் பாலைக் கொடுத்து வயதான சுமங்கலிப் பெண்கள் மாப்பிள்ளை இருக்கும் அறைக்குள் அனுப்புவார்கள். பிறகு அவர்களின் இல்லற வாழ்வைத் தொடங்குவார்கள்.
திருமணத்திற்கு பின் நடைபெறும் சடங்கு
மறுவீடு அழைத்தல்
சாந்தி முகூர்த்தம் முடிந்த பிறகு பெண்ணையும் மாப்பிள்ளையையும் பெண் வீட்டிற்கு அழைப்பார்கள். இதைத் தனியழைப்பு அல்லது மறுவீடு அழைத்தல் என்று கூறுவர். தாலிப்பெருக்கிப் போடுதல்.
திருமணமான மூன்றாம் மாதம் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வருவார். மாப்பிள்ளைக்கு வேட்டி, சட்டை, துண்டு, பெண்ணிற்குப் புடவை, இரவிக்கை போன்றவற்றை எடுத்துக் கொடுப்பார்கள். மஞ்சள் நூல் கயிற்றில் இரு பக்கமும் காசுகளை கோர்த்து நடுவில் தாலி இருக்கும். அதைப் பெண் அணிந்துக்கொள்வார்.
ஆடி அழைப்பு
பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஆடி மாதம் சேர்த்து வைக்கும் பழக்கமில்லை. ஆடி மாசத்தில் ஒன்று கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும். வெயில் காலத்தில் பிறக்கும் குழந்தை வெயில் துன்பத்திற்கு உள்ளாகும். இதனால் பெண்ணையும் மாப்பிள்ளையும் சேர்த்து வைப்பதில்லை.
வரிசை எடுத்தல்
தலை (முதல்) தீபாவளி, தலைப் பொங்கலுக்கு வரிசை எடுத்தும் ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களிலும் வரிசை கொடுக்கப்படும் வழக்கம் தொடர்ந்து வருகிறது. (தகவலாளர் சி.புண்ணிய மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் )

               
at October 25, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Tuesday, 23 October 2018

சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய வித்தியாசமான ஆய்வு ....

                                   சித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை
                                               பற்றிய வித்தியாசமான ஆய்வு ....

 ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.
தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு. வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூதஉடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
’சரம்’ என்றால் மூச்சு. ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் காட்டியதால் ‘சரவணன்’ என்ற
சிறப்புப் பெயரும் உண்டு. மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது; சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், ‘பெம்மான் முருகன் பிறவான்; இறவான்...’ என்று அருணகிரி நாதரால் பாடப் பெற்றார்.
அகத்தியர், போகர், ஔவையார், அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத
தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள் எந்த நாட்டிலும் இல்லை. முருகக் கடவுள் இல்லாத ஒரு நபரல்ல, மனிதனாக இருந்தவர் மகானாக மாறி இருக்கிறார்.
"தமிழ் கடவுள் முருகன் என்கிறாய் ஆனால் அந்த தமிழ் கடவுளுக்கு மட்டும் ஏன் இரண்டு மனைவியர் உள்ளனர். கடவுள் ஏன் தமிழ் பண்பாட்டினை காப்பாற்றவில்லை" என முருகனைப் பற்றியும் அவர்தம் மனைவியர் பற்றியும் அறிந்து கொள்ள மானுடராகிய நமக்கு இன்னும் ஞானம் போதாது இருப்பினும்
அவருக்கு மனைவியர் இரண்டு பேர் எதற்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் .அதை தெரிந்து கொள்வதற்கு முன்பு நாம் சுழுமுனை என்றால் என்ன என்பதினை தெரிந்து கொள்ள வேண்டும். மகான் ஸ்ரீமத்சத்குரு சாந்தானந்த சுவாமிகள் தன் கந்தகுரு கவசத்தில் சொல்வதினை பாருங்கள்.
"நடுனெற்றித்தானத்து நானுனை தியானிப்பேன்
பிரம்ம மந்திரத்தை போதித்து வந்திடுவாய்.
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா"
சுழுமுனை என்பது மானுட உடலில் உள்ள ஒரு மைய நரம்பு. நமது உடலில் இரண்டிரண்டு ஜோடிகளாக உள்ள உறுப்புகள் எவை எவை எனப் பார்த்தால் அவை புருவம், கண்கள், மூக்கின் நாசிகள், உதடுகள், மார்பகம், கைகள், சிறுநீரகம் மற்றும் கால்கள் எனச் சொல்லலாம் இவை உடலின் இடது புறமாகவும் வலது புறமாகவும் ஒரு மையத்தினைச் சுற்றி பின்னிப் பினைந்து உள்ளன. அந்த மையமே சுழுமுனை என்பது
ஆகும். இன்னும் விரிவாக சொல்லப் போனால் நமது உடலில் இரண்டு இரண்டு ஜோடிகளாக இல்லாமல் ஒன்று மட்டும் உள்ள உறுப்புகள் எவை எனப் பார்த்தால் அவை எல்லாம் நமது உடலின் மத்தியிலேயே அமைகின்றன.
இவற்றுள் தலையிலிருந்து ஆரம்பித்து பார்த்தால் மத்தியில் உள்ள ஒற்றை உறுப்புகள்
1.நெற்றி (பிரம்மந்திரா)
2.தொண்டைக் குழி (ஆங்ஞை)
3.மார்புக்குழி (விசுத்தி)
4.தொப்புள் குழி (மனிப்புரம்)
5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)
6.மலக்குழி (மூலாதாரம்)
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த சுழுமுனை புருவமுடிச்சிலிருந்து தலையில் விரிந்து பின் குவிந்து ஒடுங்குகிறது இந்த தலைப்பரப்பினை பெரியோர்கள் சாஹஸ்ரா எனவும் அர்ஸ் எனவும் அழைப்பர். மருத்துவர்களின் லோகோவான கீழுள்ள படத்தினைப் பார்த்தால் இது எளிதாக புரியும். முருகன் கையிலுள்ள வேலும் இந்த
சுழுமுனை குறியீடே. வேலின் குவிந்த பரப்பு நமது நெற்றியையும் வேலின் கீழுள்ள தண்டானது மற்ற 6 குழிகளை இணைக்கும் சுழுமுனை கோடாகவும் உள்ளது. மருத்துவர்களின் லோகோவில் இடது
புறமாகவும் வலது புறமாகவும் சுழுமுனையைப் பின்னிப் பினைந்து செல்பவை நமது அவயங்கள். வலது புறம் இருப்பது பிங்கலை இடது புறம் இருப்பது இடகலை.இதைத்தான் கந்தகுருகவசத்தில் ஸ்ரீமத்
சத்குரு சாந்தானந்த சுவாமிகள் சொல்லுகிறார்.
"இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்"
எனவே இடது புறமும் வலது புறமும் உள்ள அவயங்களை இயக்கி இயங்கச் செய்வது இந்த
சுழுமுனையே சுழுமுனை தத்துவத்தினை அறிந்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவனையும் அறிந்திடலாம் குண்டலினி சக்தி எனச் சொல்லப் படுவதும் இந்த சுழுமுனை முடிச்சான நெற்றிப் பரப்பேதான். ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் இறைவன் உறைகிறான். காண்பன யாவற்றிலும் இறைவன்
உள்ளான். இதையே கந்த குரு கவசத்தில் இப்படி சொல்லுகிறார் சதானந்த சுவாமிகள்
"உள்ளொளியாய் இருந்து
உன்னில் அவனாக்கிடுவான்
தன்னில் உனைக்காட்டி
உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி
எங்குமுனைக் காட்டிடுவான்"
சுழுமுனையைப் பற்றி தெரிந்து கொண்டாயிற்று இன்னும் தலைப்புக்கு வரவில்லையே என திட்ட வேண்டாம். ஒவ்வோரு உயிரிலும் உள்ள சுழுமுனையே முருகன்.இடகலை பிங்கலை என இடப்புறமும்
வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. ஆனால், மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒன்று கடவுள் ஒருவரேஅவர் எவராலும் பெறப்படவும் இல்லை. அவர் எதையும் பெற்றிறுக்கவும் இல்லை. எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை. முருகன் என்பது மனிதன் இல்லை சத்தம் ஓசை சிவன் படைப்புக்களை சத்தமாகி முருகன் ஊடாகவே உருவாக்குகிறான் உருவாக்கி கொண்டு இருக்கிறான் அதனாலே ஓசையனசத்ததின் ஊடாக உருவாகும் தமிழ் மொழிக்குகடவுள் முருகன் என்றார் . எமது உடலில் இதயத்தில் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கிறது அது சத்தம் ஓசை முருகன் அந்த சத்தம் எமது இதையத்தில் இல்லை என்றால் உயிர் இறந்து விட்டது உயிர் இருந்தால் தான் படைப்பு உருவாகும் .
ஒரு மொழிக்கு ஓசை கொடுப்பதை என்றால் உலக அறிவான தகவல்களை ஆவனப்படுத்த வேண்டும் எனவே ஆவணப்படுத்தாத அறிவான தகவல் மனித ஆயுலுடன் முடிந்து போகும் எனவே எனவே என்னதான் ஓசை படைப்பாக இருந்தாலும் அதை ஆவணப்படுத்தாட்டி வெறும் ஓசையாக அதன் அர்த்தம் கருத்து தெரியாத வெறும் ஓசையாகவே உணர்வோம். எனவே ஆவணப்படுத்தும் எழுத்து வடிவத்தை
பிள்ளையார் என்று அழைத்தார்
. சிவன் அணுத்துகள் atom , என்பதை உணர்ந்த அதத்தியர் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும் சிவனை சிவசத்தியன சிவலிங்கத்தை வழிப்பட சிவ பக்தர்கள். முதல் தமிழ் சங்க தமிழ் மொழி ஓசை ஊடக உருவாக்க பட்டமையல் ஓசை முருகன் என்றனர் நடராசர் கையில் உள்ள உடுக்கு ஓசையை குறிக்கிறது. முருகனிடம் உள்ள வேல் மனித மூளைக்குல் இருக்கு செவ்வேல் குறிக்கும் அதவது pinnal இதில் இருந்துதான் மெலட்னோன் என்ற சுரப்பு இரவு சுரந்து உடலை சமநிலை சீர் செய்கிறது. இதை மூன்றாம் கண் என்றும் சொல்வார்கள். இதனாலே தான் சிவனின் மூன்றாம் கண்ணில் இருந்து முருகன் தோன்றினார்கள் என்றும் சொல்கிளார்கள் சிவன் மனித உடலில் தலையில் உருவாக்கி இருப்பது தான் செவ்வேல் இதை முருகனுக்கு சூரனை அழிக்க சக்தி கொடுத்தார் என்பதன் பொருள் அறியாமை இருளில் மனிதன் மிருகங்கள் போன்று வாழமல் மனித மூளையில் உள்ள செவ்வேலை பயன்படுத்தி அறியாமை என்ற சூரனை வதம் செய்து அறிவுடன் வாழ செல்லும் வரலாறு விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.
ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம். பெண்பாலிலுள்ள சுரோணிதமும், ஆண்பாலிலுள்ள சுக்கிலமும் சேர்ந்து கருத்தரித்து உடம்பும் உயிரும் உண்டாகிறது. தந்தையிடமிருந்து உயிரும் தாயிடமிருந்து உடம்பும் தோன்றினாலும் தோன்றிய அந்த உடம்பும் உயிரும், நூறு ஆண்டுகள் வரை நட்புடன் இருந்து உடம்பும் உயிரும் பிரியாமல் நட்போடு வாழ்ந்தாலும் ஒரு காலத்தில் எப்படியாவது உடம்பை விட்டு உயிர் பிரிந்து போய் விடுகிறது. இதுவே இயற்கையின் நியதியாகும். பரு தேகமான ஆணும், பெண்ணும் கூடினால், உயிரும் பிரிந்துப் போகக்கூடிய பரு உடம்பும் உண்டாகிறது. ஆனால் சூட்சும தேகத்தை உண்டாக்கவல்ல இடது கலையாகிய பெண்ணும், வலது கலையாகிய ஆணும் சேர்ந்தால் சூட்சும தேகம் உண்டாகும்.
ஆனால் இடது கலையும் வலது கலையும் ஒருபோதும் சாதாரணமாக ஒன்று சேராது. ஆனால் ஒன்று சேராத இடது கலையையும் வலது கலையாகிய சூரிய கலையையும் சுழிமுனையாகிய புருவ மத்தியில் ஒன்று சேர்த்தால் அழிகின்ற பரு உடம்பும் அழியாது, அழியாத சூட்சும தேகமும் தோன்றும், உயிரும் தோன்றி எல்லாம் ஒன்றினுள் ஒன்றாய் கலந்து என்றும் அழிவற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்று மாறாத இளமை கொண்ட ஒளிதேகமாக மாறி விடும். இந்த மாபெரும் இரகசியத்தை முதலில் அறிந்த முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் தான் பெற்ற அந்த பேரின்பத்தை தனது சீடனான அகத்தியம் பெருமானைச் சார்ந்து சேராத இடது வலது கலைகளை சுழிமுனையில் ஒடுக்கி சேர்ந்திட செய்து அகத்தியம் பெருமானையும் மரணமிலாப் பெருவாழ்வை பெறச் செய்தார் என்பதையும் அறியலாம்.


at October 23, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

ருத்ராட்ஷத்தின் – மகிமையைப் பற்றி மஹா பெரியவா சொல்வது


  •                              ருத்ராட்ஷத்தின் – மகிமையைப் பற்றி மஹா
  •                                                      பெரியவா சொல்வது

 ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன்
ஒருபோதும்யமலோகம் செல்வதில்லை.
ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம்
ஆன்மாவிற்கு மஹாபேரானந்தத்தைத் தரும்
ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித
மந்திரம்கூறினாலும்,அதை 1,00,00,000 முறை
உச்சரித்த பலனைத்தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம்
உச்சரிப்பவன்எல்லாவித நோய்களிலிருந்தும்
விடுபடுகிறான். அவனைஅகால மரணமோ,
துர்மரணமோ நெருங்குவதில்லை.
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது
ருத்ராட்ஷம்.அதை அணிபவரை அவர் கண்போலக்
காப்பாற்றுவார்.எனவே அனைவரும்
கண்டிப்பாக ஐந்து முக ஒருருத்ராட்ஷமாவ
து எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்கவேண
்டும்
ஆப்படியானால் யார்
வேண்டுமானாலும் ருத்ராட்ஷம்அணிய
லாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார்
வேண்டுமானாலும்அணியலாம். எல்லா
நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும்
போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும்
எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம்அணிந
்திருக்க வேண்டும் என்று சிவ பெருமானே
கூறியுள்ளதாக சிவபுராணம்
தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால்
அவர்களின்படிப்புத் திறமை பளிச்சிடும்.
ருத்ராட்ஷத்தை பெண்கள்அணிந்தால்
தீர்க்க சுமங்களியாக மஞ்சள்
குங்குமத்தோடுவாழ்வார்கள். இதனால்
அவர்களுடைய கணவருக்கும்தொழிலில்
வெற்றியும் இல்லத்தில் லட்சுமி
கடாசமும்நிறைந்திருக்கும். ஆகையால்
கண்டிப்பாக ருத்ராட்ஷம்அணியவேண்டும்.
எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக
சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக
ருத்ராட்ஷம்அணிவதே போதுமானது.
பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய
ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம்,
நீர்,நெருப்பு, காற்று மற்றும்
ஆகாயம்).நமது கை கால்விரல்கள் ஐந்து.
புலன்கள் ஐந்து. ஆகையால் மிகஅதிகமாக
ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.ஆ
கையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே
மிகச்சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும்
குழந்தைகள் எனசகலமானவர்களும்
அணியலாம். ஐந்து முகருத்ராட்ஷத்திலேயே
மற்ற எல்லா முகருத்ராட்ஷங்களினால்
கிடைக்கின்ற பலன்களும்அடங்கிவிடும்.,
பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது
என சிலர் சொல்கிறார்களே?
பெண்களின்
பெருந்தெய்வமாக
விளங்குபவள்ஆதிபராசக்தி அவள்
ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை,
கொந்தளகம் சடை பிடித்து விரித்து
பொன்தோள் குழைகழுத்தில் கண்டிகையின்
குப்பை பூட்டி என்று விவரிக்கிறது(அருணாசலபுராணம்) பழி,
பாவம்முதலியவற்றை முழுவதுமாகத தீர்த்துக்
கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது
திருமேனிமுழுவதிலும் அகிலாண்டேஸ்வரி
அணிந்துகொண்டாளாம்.
பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்?நமக்கு
வழி காட்டுவதற்காகத்தானே
அம்பிகையேருத்ராட்ஷம் அணிந்து
கொள்கிறாள்!. எனவே
பெண்கள்தாராளமாக அம்பிகை
காட்டும் வழியைப் பின்பற்றிருத்ராட்ஷம்
அணிய வேண்டும். மேலும்,
சிவமஹாபுராணத்திலும் பெண்கள்
கட்டாயம் ருத்ராட்ஷம்அணிய வேண்டும்
என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்
ளார்.
எல்லா நாட்களிலும் பெண்கள்
ருத்ராட்ஷம் அணியலாமா?
பெண்கள், தங்களுடைய தாலிக்
கொடியில்
அவரவர்மரபையொட்டி சைவ, வைணவச்
சின்னங்களைக்கோர்த்துதான் அணிந்திருக்கின்
றனர். அதை எல்லாநாட்களிலும் தானே
அணிகிறார்கள்? சில பெண்கள்,
யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து
போன்றவற்றையும்எப்போதும் அணிந்திருப்பதுண்டே?
இவற்றைப் போல்ருத்ராட்ஷத்தையும் எல்லா
நாட்களிலும் கழற்றாமல்அணிய வேண்டும்.
ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக
அல்ல. உயிரின் ஆத்மாவிற்காக
சிவபெருமானால் அருளப்பட்டது.
ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய
வேண்டுமா?
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள்
வரை ஆண் -பெண் இருபாலரும்
கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
ஏனெனில் நம்மைப் படைத்ததே
பாவங்களைப்போக்கி சிவபெருமானின்
திருவடியை அடைவதற்காகவேநம் வாழ்க்கையில்
வரும் கஷ்டம், வேதனை, துன்பம்,
வலிஇவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே
ருத்ராட்ஷம்அணிய வேண்டும். ருத்ராட்ஷம்
அணிந்தால் மறுவிறவிஇல்லை மஹா
பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதைசிலபேர் நீ
அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான்
அணியவேண்டும் என்று
சொல்வார்கள், அதைப்
பொருட்படுத்தக்கூடாது. இறைவனுக்கு
ஒருவர் மீது கருணை இருந்தால்மட்டுமே
ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும்
பாக்கியம்கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க
முழுக்கசிவபெருமானுடையது.
சிவபெருமான் கண்களை விழித்து1000
வருடங்கள் கடும் தவம் இருந்து அவர்
கண்களில்இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.
ருத்ராட்ஷத்தைஅணிந்து
கொண்டவர்கள் சிவ குடும்பத்தில்
ஒருவராவார்.சிவபெருமான் தன்
குடும்பத்தில் இருப்பவர்களுக்குகஷ்டத்தையும்,
துன்பத்தையும் கொடுப்பாரா?.
அதனால்யார் என்ன
சொன்னாலும் கண்டிப்பாக
ருத்ராட்ஷத்தைஅணியவேண்டும். ருத்ராட்ஷதை
அணிந்த பின் எந்தசூழ்நிலையிலுமே கழற்றவே
கூடாது. நீங்கள் இப்பொழுதுஎப்படி
வாழ்க்கை நடத்திக்கொண்டிரிக்கின்றீர்களோஅதேபோல் வாழ்ந்தால் போதும்
இதில் எவ்விதமாற்றத்தையும் செய்யத்
தேவையில்லை. நெற்றியில்திருநீறு அணிந்து
ஓம் நமசிவாய சொல்லி
வந்தாலேபோதுமானது.
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு,
கணவன் - மனைவி இல்லற தாம்பத்யம்
நேரங்களில் ருத்ராட்ஷம்அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே
இயற்கையானதே.இதில் எந்த நிகழ்ச்சியும்
செயற்கையானதே கிடையாது.நீத்தார்
கடன் போன்றவற்றை செய்யும் போது
அதைசெய்விப்பவரும், செய்பவரும்
ருத்ராட்ஷம்அணிந்திருப்பது அவசியம்.
இதனால் பித்ருக்களின்ஆன்மாக்கள்
மகிழும் என்று சிவபெருமானேஉபதே
சித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம்
ஆகையால்இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது
கண்டிப்பாக ருத்ராட்ஷம்அணியலாம்.
அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.
சரி ருத்ராட்ஷத்தை அணிந்து
கொண்டேன், இதன்பலன்கள் தான்
என்ன?
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால்
கங்கையில்குளித்த புண்ணியம் கிடைக்கும்
என்கின்ற புராணங்கள்,கங்கையில்
மூழ்கினால் பாவம் போகும் என்பது
நம்அனைவருக்கும் தெரியும்.
பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம்
உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால்
கொடியபாவங்கள் தீரும்.
இதனால் நம் வாழ்வில் ஏற்படும்துன்பங்
களும் படிப்படியாகக் குறைந்து விடும்.
மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி
கடாஷ்சமும்,செய்யும்
தொழிலில் மேன்மையும்,
சகலவிதமானஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு
பகவானின் பேரின்பமும்,ஆனந்தமும் கிடைக்கும்
என்று சிவ மஹா புராணம்அறுதியிட்டுக்
கூறுவதையும் கருத்தில் கொள்க.
இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால்
இதய நோய்,ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,
புற்றுநோய்போன்றவற்றின் தீவிரம் குறைவதாக
வெளிநாட்டவர்களின்ஆய்வுகள்
கூறுகின்றன. எனவே தூங்கும்போதும்
கூடருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய
அவசியம்கிடையாது. திருமணம்
ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம்இல்லாத
வர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும்க
ண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து
தினந்தோறும் 108முறை எழுத்தாலோ மனதலோ
பஞ்சாட்சரத்தைசொல்லிவந்தால் 18
மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள்நிறைவேறும்.
ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை
கிட்டுமா?
சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன்
தால் வணங்கிஅவர் கருணை
செய்தால்தான் அவருடைய
நாமத்தைக்கூடநாம் சொல்ல முடியும்.
அப்படியிருக்க அவர்ருத்ராட்ஷத்தையே நமக்கு
அளித்துள்ளாரே அதனால்திருநீறு தரித்தல்,
ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சரமந்திர
மான "ஓம் நமசிவாய" உச்சரித்தல்,
இம்மூன்றும் ஒருசேரச் செய்து வந்தால்
முக்தி எனும் மஹா பேரானந்தத்தைஅடைவீர்.
இம்மூன்றும் இந்து தர்மங்கள்,
தர்மத்தைவிடாதவர்களை இறைவன்
கைவிடமாட்டார். மேலும்நவகிரஹங்கள்
நன்மையே செய்யும், (ஏழரைச்
சனி,அஷ்டமச்சனி, ராகு-கேது) தோஷத்தின்
தாக்கங்கள்குறையும். ருத்ராட்ஷம்
அணிந்திருக்கும் வேலையில் உயிர்பிரிந்தால்
சிவபெருமான் திருவடியை அடைந்து
நற்கதிஎற்படும். பேய், பிசாசு, பில்லி, சூனியம்,
மந்திரம், தந்திரம்,இவை அனைத்தும் ருத்ராட்ஷம்
அணிந்திருப்பவர்களைஒன்றுமே
செய்யமுடியாது. ஆகையால்
ஒவ்வொருவரும்கண்டிப்பாக
ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ஒருவர்ஏழுஜென்மங்கள்
தொடர்ந்து புன்னியம்
செய்திருந்தால்மட்டுமே அவர்களுக்கு
ருத்ராட்ஷம் அணியும் மஹாபாக்கியம்
கிடைக்கும்,.
இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர்
திருநீறு,ருத்ராட்ஷம் அணியத்
தயங்குகிறார்களே?
உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள்
அவர்களின் மதசின்னங்களை அணிய
வெட்கப்படுவதில்லை. நாம் நமதுமதச்
சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம்
மற்றும்நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை
ஏன்விடவேண்டும்இதற்காக யாராவது
நம்மைக் கேலிபேசினாலும்
பொருட்படுத்தக்கூடாது.
அப்படிப்பேசுகிறவர்களா நமக்குச் சோறு
போடுகிறார்கள்?அவர்களா நம்மைக்
காப்பாற்றுகிறார்கள்? ஆனால்
மதச்சின்னங்களை அணிந்து நமசிவாய என்று
எல்லாக்காலத்திலும் சொல்லிக்
கொண்டிருப்பவர்க
ளசிவபெருமான் நிச்சயம்
காப்பாற்றுவார். அவரவர்,
தங்கள்வாழ்க்கையிலேயே இதை அனுபவப்
பூர்வமாக உணரலாம்.ருத்ராட்ஷம்
அணிபவர்கள் கண்டிப்பாக எந்தசூழ்நிலையிலும் ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது.
யார்என்ன சொன்னாலும் அதைப்
பொருட்படுத்த
வேண்டாம்.சிவபெருமானின்
அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும்இருந்தால்
மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும்.இப்பேற்பட்ட மஹிமை பொருந்திய
ருத்திராக்ஷத்தை நாம் எப்போதும் அணிந்து
நற்பயன் அடைவோம்.

ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்.
at October 23, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, 22 October 2018

ஈசனே

                                                                           ஈசனே

ஈசனே உனை தேடி வந்தேன்
கூசாமல் பேசும் கூட்டம் விட்டு
நேசனே நின் பாதம் அடையவே
பேசாமல் அமர்கிறேன்,
வாய் பேசும் காலம் போக்கியே
கண்பேசும் காலத்தில் வந்தேன்
மெய் பேச மொழியில்லை என்றே
உன் நாமமுரைக்க வந்தேன்,
கருப்பையில் சமமாய் இருந்து
கண்மணியே எனக்கேட்ட என் வாழ்வு
ஒரு கைப்பையே என் உடமையாகிட
உன்அடியே சரணமென்று வந்தேன்,
மகனை வளர்த்தேன்
மகளையும் வளர்த்தேன்
என்னை வளர்க்கத் தவறியதால்
உன்னை நாடும் நிலையாச்சு,
தூணே துனையென்று
தூய உள்ளத்தோடு வந்தேன்
நானே நினைந்துருகுகிறேன்
நிமலனே காத்தருள்வாய்,
ஊரை விட்டு வந்தேன்
உறவை விட்டு வந்தேன்
உடலை விட்டுட்டு சிவனே
உன்னடி சேர்த்தருள்வாய்,
வாழட்டும் எம் வம்சம்
வாழையடி வாழையாக
மோட்சம் தந்த என் பின்னோர்க்கு
சூட்சுமமாய் என் வாழ்த்துக்கள் .
#ஓம்_நமசிவாய

Image may contain: one or more people

at October 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கா்ம வினை

                                                                                    கா்ம வினை

 ஒருவா் எந்த தொழில் செய்தாலும் தொடா் தோல்விகள் மட்டுமே கிடைத்து வந்தது . இதனால் அவன் தன் சொத்து சொந்தம் அனைத்தையும் இழந்தான் . மிகவும் மனம் உடைந்து ஓா் நாள் ஆலயம் சென்றான் அங்கு ஒரு ஆன்மீக பொியவரை கண்டு தன் பிரச்சனைகளை கூறினாா் .
அவா் அவனது பிரச்சனைக்கான காரணத்தை அறிந்து இவை அனைத்திற்கும் உன் கா்ம வினையே காரணம் என்றாா் . அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்றான் . அவரோ இறைவனிடம் உன்னை முழுமையாக அா்ப்பணித்து மனதார வணங்கி வா தானாக சாியாகும் என்று கூறிச்சென்றாா் . அதன்படியே அவனும் மனதார இறைவனை வழிபட தொடங்கினான் .
நாட்கள் பல சென்றது
ஒரு நாள் அடுத்த தொழில் துவங்கலாம் என்று வீட்டில் உள்ள நகைகளை விற்று பணம் எடுத்து கொண்டு வந்து கொண்டு இருந்தான் . அதை பாா்த்து பின் தொடா்ந்து வந்த ஒருவன் அதை திருடி சென்றான் மிகவும் மனம் உடைந்த அவன் அந்த பணம் கிடைக்குமா என்று ஜோதிடம் நாடி என்று அனைத்தும் பாா்த்தான் அவா்களும் பாிகாரம் என்ற பெயாில் மேலும் அவனிடம் பணம் பறித்தனா் .
இருந்தாலும் அவனது பக்தி குறைய வில்லை .
நேரடியா ஆலயம் சென்றான் அய்யனே இனி நான் வாழ வழி இல்லை ஆகையால் உம் ஆலயத்திலேயே உயிரை விடுகிறேன் . என்று கூறி ஆலய தெப்ப குளத்தில் குதித்து உயிா்விட சென்றான் . விரக்தியில் சென்றதால் கீழே பாா்க்காமல் படியில் உள்ள பாசியில் கால் வைத்து கீழே வழுக்கி விழுந்தான் தலையில் அடிபட்டது . உயிரற்ற நிலைக்கு சென்றான் . அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாா்கள் . மரண தருவியில் மீட்டு எடுத்தனா் .
கண்விழித்தான் முதல் செய்தி பாிபோண பணம் கிடைத்தது என்ற காவல் துறையின் செய்தி .
இரண்டாவது இந்த நிலையை கண்டு ஒன்று சோ்ந்த வந்த சொந்தங்கள்.
மூன்றாது புதிய தொழிக்கு வங்கியில் ஏற்பாடு செய்த கடன் தொகையும் கிடைத்தது .
எழுந்து மகிழ்ச்சியுடன் சென்று இறைவனை வழிபட்டு நன் முறையில் தொழில் செய்து வாழ்ந்து வருகிறான் .
எங்கே சென்றது அந்த கா்ம வினை .
ஆம் கா்மவினையை யாராலும் குறைக்கவோ கூட்டவோ முடியாது . சிவனையும் சித்தா்களையும் தவிற அவா்களிடம் தன்னை அா்பணித்தான் .
உடலால் செய்த அனைத்துமே கா்ம வினைகளே அதைபோல் அவன் உடலால் சம்பாதித்த பணத்தை ஒருவன் திருடி சென்றான் ஆம் கா்ம வினையை எடுத்து சென்றான் .
பின் அதனால் தற்கொலை செய்ய வேண்டும் என்று இருந்த விதியை இறந்தும் மீண்டது போல் இறைவன் மாற்றினாா்.
அதே போல் தான் உங்கள் கஷ்டங்களை எண்ணி வருந்தாதீா்கள் இறைவனிடம் சரணடையுங்கள் மலைபோல் வந்த கஷ்டங்கள் அனைத்தும் பனி போல் உருகி விடும் 
at October 22, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, 21 October 2018

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து

     இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து
புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,
இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது
சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்கு வெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!


at October 21, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, 20 October 2018

சாப்பிட செல்வம் வளரும்

                                                 சாப்பிட செல்வம் வளரும்

1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது
2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.
1. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. ஏன தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.
2. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
3. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.
4. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
5. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.
6. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
7. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
8. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
9. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
10. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
11. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது
12. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
13. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.
14. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
15. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
16. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.
17. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
18. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.
19. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
20. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
21. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.
22. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
23. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
24. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
25. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
26. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
27. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
28. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
வாழ்வில் செய்யக்கூடாதவை
1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.
2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.
3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.
4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது.
5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.
6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.
7. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.
8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.
9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.
10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.
11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.
12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.
13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.
14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.
15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது. மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.
வாழ்க வளமுடன்....
at October 20, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

எது கெடும்

                                                                      எது கெடும்

 பாராத பயிரும் கெடும்
பாசத்தினால் பிள்ளை கெடும்
கேளாத கடனும் கெடும்
கேட்கும்போது உறவு கெடும்
தேடாத செல்வம் கெடும்
தெகிட்டினால் விருந்து கெடும்

ஓதாத கல்வி கெடும்
ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்
சேராத உறவும் கெடும்
சிற்றின்பன் பெயரும் கெடும்
நாடாத நட்பும் கெடும்
நயமில்லா சொல்லும் கெடும்
கண்டிக்காத பிள்ளை கெடும்
கடன்பட்டால் வாழ்வு கெடும்
பிரிவால் இன்பம் கெடும்
பணத்தால் அமைதி கெடும்
சினமிகுந்தால் அறமும் கெடும்
சிந்திக்காத செயலும் கெடும்
சோம்பினால் வளர்ச்சி கெடும்
சுயமில்லா வேலை கெடும்
மோகித்தால் முறைமை கெடும்
முறையற்ற உறவும் கெடும்
அச்சத்தால் வீரம் கெடும்
அறியாமையால் முடிவு கெடும்
உழுவாத நிலமும் கெடும்
உழைக்காத உடலும் கெடும்
இறைக்காத கிணறும் கெடும்
இயற்கையழிக்கும் நாடும் கெடும்
இல்லாலில்லா வம்சம் கெடும்
இரக்கமில்லா மனிதம் கெடும்
தோகையினால் துறவு கெடும்
துணையில்லா வாழ்வு கெடும்
ஓய்வில்லா முதுமை கெடும்
ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்
அளவில்லா ஆசை கெடும்
அச்சப்படும் கோழை கெடும்
இலக்கில்லா பயணம் கெடும்
இச்சையினால் உள்ளம் கெடும்
உண்மையில்லா காதல் கெடும்
உணர்வில்லாத இனமும் கெடும்
செல்வம்போனால் சிறப்பு கெடும்
சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்
தூண்டாத திரியும் கெடும்
தூற்றிப்பேசும் உரையும் கெடும்
காய்க்காத மரமும் கெடும்
காடழிந்தால் மழையும் கெடும்
குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்
குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்
வசிக்காத வீடும் கெடும்
வறுமைவந்தால் எல்லாம் கெடும்
குளிக்காத மேனி கெடும்
குளிர்ந்துபோனால் உணவு கெடும்
பொய்யான அழகும் கெடும்
பொய்யுரைத்தால் புகழும் கெடும்
துடிப்பில்லா இளமை கெடும்
துவண்டிட்டால் வெற்றி கெடும்
தூங்காத இரவு கெடும்
தூங்கினால் பகலும் கெடும்
கவனமில்லா செயலும் கெடும்
கருத்தில்லா எழுத்தும் கெடும்
at October 20, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, 19 October 2018

#பயனுள்ள_100_மருத்துவ_குறிப்புகள்.

                                     #பயனுள்ள_100_மருத்துவ_குறிப்புகள்.

1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.
3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.
4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.
6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு..!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!
32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
உணவே மருந்து
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!
49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
மருந்தே வேண்டாம்
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.
லப்… டப்..!
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்….
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி…!
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
கிட்னி
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு..!
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.வைத்தியசாலை
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…!
86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
நோயாளிகள் தங்கும் இடம்
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது...
at October 19, 2018 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Comments (Atom)

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...

  • குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்
                                    எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/                             குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
  • ஆத்துப்பொள்ளாச்சிஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!
    ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ   ஆனந்தாய்பேச்சியம்மன்   (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...
  • உடல்கட்டு மந்திரம்
                                                  எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/        உடல்கட்டு மந்திரம் நாம் பல்வேறு...

கும்பாபிஷேகம்

  • Home

About Me

sriannathaipechiamman
View my complete profile

Report Abuse

Labels

  • https://en.wikipedia.org/wiki/User_talk:Annathaiamman/sandbox#.E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AF.8B.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.87

Blog Archive

  • ▼  2026 (567)
    • ▼  March (7)
      • நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......
      • சுக்கிரனுக்கு திரிகோணத்தில் (1, 5, 9 ஆகிய வீடுகளில...
      • தண்ணீர் குடிப்பதற்கான சரியான நேரமும் நன்மைகளும்! 💧
      • மரங்களின் கிளையிலிருந்து உதித்த வனதேவதை! மாரிஷா🌳
      • அனுமன் செய்த தியாகம்!
      • கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்ன...
      • ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்
    • ►  February (134)
    • ►  January (426)
  • ►  2025 (472)
    • ►  December (284)
    • ►  November (128)
    • ►  October (25)
    • ►  September (9)
    • ►  August (3)
    • ►  July (3)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (1)
    • ►  January (9)
  • ►  2024 (33)
    • ►  December (5)
    • ►  November (7)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (5)
    • ►  July (6)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (3)
  • ►  2023 (31)
    • ►  December (1)
    • ►  August (4)
    • ►  July (2)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (6)
  • ►  2022 (58)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  May (12)
    • ►  April (21)
    • ►  March (9)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2021 (23)
    • ►  May (15)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2020 (14)
    • ►  August (1)
    • ►  May (4)
    • ►  February (3)
    • ►  January (6)
  • ►  2019 (305)
    • ►  December (8)
    • ►  November (15)
    • ►  October (32)
    • ►  September (96)
    • ►  August (19)
    • ►  July (66)
    • ►  June (5)
    • ►  May (18)
    • ►  April (3)
    • ►  March (17)
    • ►  February (13)
    • ►  January (13)
  • ►  2018 (276)
    • ►  December (21)
    • ►  November (10)
    • ►  October (45)
    • ►  September (17)
    • ►  August (26)
    • ►  July (5)
    • ►  June (40)
    • ►  May (28)
    • ►  April (10)
    • ►  March (23)
    • ►  February (19)
    • ►  January (32)
  • ►  2017 (493)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (20)
    • ►  September (5)
    • ►  July (41)
    • ►  June (109)
    • ►  May (140)
    • ►  April (101)
    • ►  March (54)
    • ►  February (13)
Watermark theme. Powered by Blogger.