Sunday 22 May 2022

திருநீறும் ○ ருத்ராட்சமும்...

 


.
திருநீறும் ○ ருத்ராட்சமும்...
ஒரு ஊரில் ஒரு திருடன். அவன் திருடாத இடமே இல்லை,
ஊர் மக்கள் அனைவரும் அந்த ஊர் ராஜாவிடம் சென்று முறையிட்டனர்.
அந்த திருடன் ராஜா இடமும் சிக்காமல் சாமத்தியமாக தப்பித்து தப்பித்து வந்தான்.
ஒரு கட்டத்தில் ராஜா முடியாமல் இந்த திருடனை பிடித்துத் தந்தால் ருபாய் ஐந்து லட்சம் என ஆணையிட்டார்.
இது ஒருபுறம் இருக்காட்டும்...
சில நாட்கள்கழித்து அந்த ராஜா மந்திரியை அழைத்து,
யார் பற்று இல்லாமல் இருகின்றார்களோ அவருக்கு என் ராஜாங்கத்தில் பாதி தந்து விடுகின்றேன். என அறிவித்து. நீங்கள் சென்று யார் பற்று இல்லாமல் உள்ளார் என தேடிபார்த்து அழைத்துவாரும் என ஆணையிட்டார்.
மந்திரி தேடி செல்லும்போது இந்த திருடன் அவரிடம் வசமாக மாட்டிக்கொண்டான்.
மந்திரியின் சூழ்ச்சியினால் உன் தலைக்கு ராஜா ஐந்து லட்சம் என கூறியுள்ளார்.நான் சொல்வது போல் நீ நடித்தால் உனக்கு இருபது லட்சம் தருகின்றேன், மேலும் உன்னையும் தப்பிக்க வைக்கின்றேன். என உறுதி அளித்தான்.
சரி என இந்த திருடனும் சம்மதித்தான்.
அந்த திருடனுக்கு ,
*திருநீறும் ருத்ராட்சமும்* போட்டு ஒரு சன்யாசி போல் வேடம்மிட்டு நீ இந்த மரத்தின் கீழ் அமைதியாக அமர்ந்து இருப்பது போல் நடி, ராஜா வந்து எதை தந்தாலும் வேண்டாம் என்று சொல்,
கடைசியாக அவர் தன் ராஜியத்தில் பாதியை உனக்கு தானமாக தருவார். அதை வாங்கி என்னிடம் தா, நான் உனக்கு பேசியது போல் இருபது லட்சம் தருவேன். என ஒப்பந்தம் செய்துக் கொண்டனர்.
பின் அந்த மந்திரி ராஜாவிடம் சென்று ஒரு சன்யாசி பற்றுகளைவிட்டு மரத்தடியில் அமர்ந்து உள்ளார். அவரை தரிசித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்றார்.
ராஜா சென்று மரத்தின் கீழ் உள்ள அந்த சன்யாசி (திருடன்)யின் காலில் விழுந்து வணங்கி, ஐயா தங்களுக்கு தானமாக ஒரு லட்சம் பொன்மலை தருவேன் அதை எற்றுக்கொள்க என, இந்த சன்யாசி *வேண்டாம்* என்றார்.
பின் ஐந்துலட்சம், பத்து லட்சம். இருபது லட்சம், ஐம்பது லட்சம் என உயர்ந்த. நகை, பணம், என தானமாக தந்தார்.
இந்த சன்யாசி எதுவும்
*வேண்டாம்* என்றார்.
பின் ராஜா நீயே சத்தியசீலன் என் ராஜாங்கத்தில் பாதி தங்களுக்கு தானமாக தருகின்றேன். நீங்கள் அதை பெற்றுக் கொண்டு எனை வாழ்த்த வேண்டும் என்றார்.
(இப்போது தான் மந்திரிக்கு சந்தோஷம் நாம் சொன்னது போலவே நடிக்கின்றான் .என தன் மனதுக்குள்ளே சிரித்து மகிழ்ந்தான்)
ஆனால் அந்த சன்யாசி *வேண்டாம்* என்றார். (மந்திரிமுகம் மாறிவிட்டது அடப்பாவி வேண்டாம் என்றுவிட்டானே,
இவனை இப்போது திருடன் எனவும் நாம் சொல்ல முடியாது, என்ன செய்வது என மனதுக்கு உள்ளே குழப்பத்தில் நிற்க)
கடைசியாக அந்த ராஜா தன் மகளையே தங்களுக்கு திருமணம் செய்து தருகின்றேன் என கூறினார்.
அதற்கும் அந்த சன்யாசி
ஐயா நானோ பற்று அற்றவன் எனக்கு எதுக்கு இதுஎல்லாம் *வேண்டாம்* என்றார்.
நீரே தீர்க்கதரிசி என வீழ்ந்து வணங்கி அந்த ராஜா சென்றுவிட்டார்.
பின் அந்த மந்திரி வந்து அடப்பாவி என் வயத்துல இப்படி மண்அள்ளி போட்டு விட்டாயே இது நியாமா என சண்டை போட,
அதற்கு அந்த சன்யாசி
ஐயா நான் திருடன் தான்.
எப்போது நீங்கள்
*திருநீறும் ருட்த்ராட்சமும்* என் மீது தரித்தீர்களோ அப்போதே என் மனம் மாறிவிட்டது.
மேலும் என் தலைக்கு ஐந்து லட்சம் என விலை வைத்த ராஜா
என் கோலத்தை பார்த்து என் காலில் விழுந்தார்.
அந்த பணிவு எனக்காக அல்ல
என் மேல் உள்ள இந்த
*திறுநீறுக்கும் ருத்ராட்சத்துக்கும்* தான்,
நான் எதை *வேண்டாம் வேண்டாம்* என்று சொன்னேனோ அதைவிட உயர்வான பெருள் தான் எனக்கு கிடைத்தது.
மதிப்புள்ள இந்த பெருளை நான் வேண்டாம் என்றால் விலைமதிப்பில்லா அந்த இறைவன் எனக்கு கிடைப்பான்*
அதுவே எனக்கு போதும் என்றார்.
ஆம், என் அன்பின் உறவுகளே
*இந்த திறுநீறும் ருத்ராட்ச்சமும்* நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
இதை வைத்து வியாபாரம் செய்யாமல்
வறுமை வந்தாலும் *வைராக்கியம்*
என வாழ்ந்து வந்தால் நமக்கு நிச்சயம் இறையின் அருள் உண்டு.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...