Sunday 15 May 2022

வாழ்வின் தன்னம்பிக்கை மந்திரங்கள்...

                                        வாழ்வின் தன்னம்பிக்கை    மந்திரங்கள்...

1) எலிகள் எந்த காலத்திலும் உணவு இன்றி செத்தது இல்லை. பூனைகளுக்கு மத்தியிலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.அதைபோலபிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும்.


2) கடனாக இருந்தாலும் சரி.அன்பாக இருந்தாலும் சரி. திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு.


3) உண்மையான அன்பு கொண்டவர்கள். எப்பவுமே ஏமாளிதான்.


4) கடவுளே வந்து கை கொடுத்தாலும், தன்னம்பிக்கை இல்லையென்றால் 

கரை சேர்வது கடினம் தான்.


5) சில நேரங்களில் வளைந்து போகுதல் வீரமாம். மரம் வெட்டுபவனின் முதல் இலக்கு. நேராய் நிமிர்ந்து நிற்கும் மரங்களே.


6) பலவீனம் தெரியும்படி எல்லோரிடமும் பேசாதீர். பலம் தெரிய வேண்டும் என்றால் யாரிடமும் அதிகம் பேசாதீர்.


7) இல்லாதவன் மட்டுமே நினைக்கிறான் இருந்தால் நல்லா இருக்கும் என்று!இருப்பவன் இருப்பதை நினைத்து 

ஆனந்த பட்டதே இல்லை.


8) உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.அவர்களுக்கு விளையாட 

ஏதேனும் தேவைப்படும் போது உங்கள் ஞாபகம் வரலாம்.


9) கஷ்டங்களும் அனுபவமும் நம்மை 

சூழும் போது தான் வாழ்க்கை நமக்கு 

நல்ல பாடத்தையும் பாதையும்தெளிவாகக் காட்டும்.


10) மகிழ்ச்சி என்பது நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது நீங்கள் என்ன வைத்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது அல்ல.அது நீங்கள் நினைப்பது பொறுத்தது.


11) வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல, வார்த்தைகளும் தான்.


12) தன் வலிமை தெரியாமல் உயரப்பறக்க நினைக்கும் பறவைகள் எல்லாம் வானில் உயரப்பறந்து விடுவதில்லை.


13) கழுகும் பறவை தான். குருவியும் பறவை தான்.அதனதன் வலிமை அதனதன் உயரம்.


14) தோல்வி என்பது இழிவு அல்ல. தோல்வி வந்து விடும் என்று அஞ்சி பின் வாங்குவது தான் இழிவு. தோல்வியை கண்டு அஞ்சாதீர்கள்.


15) அறிவு என்பது வெறும் விவரத் திரட்டு வாசிப்பின் வரம் அல்லது கணிப்பொறியின் இரவல்.


16) இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால், இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.


17) தினம் தவறாமல் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டே இருக்கும் உறவிடம் திடீரென எதையும் மறைத்துவிடவும் இயலாது. மறைக்க மனம் முன்வருவதும் கிடையாது.


18) உங்களின் தோல்வி எங்கே ஒளிந்து உள்ளது தெரியுமா ?பிரச்சனைகள் வரும் போது அல்ல. பிரச்சனைகளை கண்டு 

நீங்கள் பயந்து விலகும் போது.


19) சுயக்கட்டுப்பாடுடைய மனிதன் 

பலமடங்கு சக்தியைப்பெறுவான்.


20) என்னை யாரும் ஜெயித்ததில்லை, ஏனெனில், இது வரை யாருடனும் போட்டி போடவில்லை.


21) வெல்வதற்கு செல்வம் தேவை இல்லை.. உள்ளம் தான் தேவை.


22) நீங்கள் திறமையானவன் என்பது புதிதல்ல.அதை நீங்கள் இவ்வளவு காலம் மறந்திருந்தீர்கள்.


23) விழித்திருங்கள்.எழுந்திருங்கள்.

வென்றிடுங்கள்.


24) வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமெனில் கொஞ்சம் ஞாபகமறதியும்  வேண்டும்.

 இல்லையேனில் சில நினைவுகள் நம்மை கொன்றுவிடும்.


25) கடவுள் வரம் எல்லாம் தரமாட்டார், சந்தர்ப்பம் தான் தருவார். அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் உங்க கையில் தான் இருக்கு.


26) செய்யும் கடமைகளை சரியாக செய்யுங்கள். என்ன கிடைக்க வேண்டுமோ, தாமதித்தாலும், கண்டிப்பாக கிடைத்துவிடும்.


27) இரண்டொழுக்க பண்பாடு :

யாருக்கும் துன்பம் தராதீர்கள்

துன்பப்படும் உயிர்களுக்கு உங்களால்

முடிந்த உதவியை செய்யுங்கள்



No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...