Wednesday 30 March 2022

நான்” என்ற எண்ணம் இருக்கலாமா.....??? ஒரு அலசல் :-

                      நான்” என்ற எண்ணம் இருக்கலாமா.....??? ஒரு அலசல் :-


 எப்படிப்பட்டவன்.......???  


நல்லவனா.......??? 


பொல்லாதவனா......???  


நான் என்ற எண்ணம் இருக்கலாமா.....???  


இருக்கக் கூடாதா......??? 


ஒரு அலசல் :- 


என்னிடம் நான் என்ற அகம்பாவம் கிடையாது என்று நினைத்து விட்டாலே 


நான் தான் என்ற அகம்பாவம் தாண்டவம் ஆடுகிறது என்றே பொருள் 


தன்னை முன்னிலை படுத்த வேண்டும் என்று நினைத்தால் 


"நான்" அங்கே குடி கொண்டிருக்கிறது என்று அர்த்தம் 


தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் 


தான் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் 


இதே நிலை தான் 


தன்னை யாரும் கவனிக்கவில்லையே என்று கவலைப் பட்டாலும் 


அதுவும் அகங்காரத்தின் அடுத்த பக்கம் தான் 


கவலையை வெளிப்படுத்தினாலும் அகம்பாவம்


வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே கவலையுற்று இருந்தாலும் ஆணவம் தான் 


தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்றாலும், 


அதை நினைத்து கண்ணீர் விட்டாலும் அகம்பாவமே ஆனந்த தாண்டம் ஆடுகிறது என்று அர்த்தம் 


ஆக, கவலைப் படுதலும், 


கண்ணீர் சிந்துவதும், 


கௌரவம் வேண்டும் என்று நினைப்பதும், 


அகம்பாவத்தின் வெவ்வேறு தோற்றப்பாடுகள் தான் 


இந்த விஷயத்தில் ஆன்மீக கருத்திற்கும், 


சுய முன்னேற்ற சிந்தனைக்கும் முரண்பாடுகள் இருப்பது போல தோன்றும் 


ஆன்மிகம் தன்னை அறியச் சொல்லும்.  


ஆனால், 


சுய முன்னேற்ற சிந்தனை தன்னை முன்னிலை படுத்த சொல்லும் 


இதில் எதை எடுத்துக் கொள்வது.....???


தன்னிலை விளக்கம் பெற்றால் நமக்கு தெளிவு வந்துவிடும் 


எங்கு..??? எதற்காக.....??? எப்படி நானை கையாள்வதென்று 


நான் என்னும் உணர்வு நிலை உணர்ச்சி நிலையாக மாறும்போது தான் பிரச்சினை தலை தூக்குகிறது 


அதற்கு மகரிஷி கொடுக்கும் பெயர் தான் “தன்முனைப்பு”


ஒரு காரியத்தை தன்னால் செய்ய முடியும் என்று நினைத்தால் அது தன்னம்பிக்கை


தன்னால் தான் முடியும் என்று நினைப்பது தற்பெருமை.  


தன்னால் மட்டுமே முடியும் என்பது தன்முனைப்பு


சுய மதிப்போடு வாழ முற்படுவது கெளரவம் 


சுயத்தை உயர்த்த பிறரை தாழ்த்துவது கர்வம் 


அகத்தை மீறும்போது 


அது பாவத்தை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது 


அதனால் தான் “அகம்பாவம்” என்று சொல்லி வைத்தார்கள்.


அன்றாட வாழ்வில் உறவுகளுக்குள் ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுக்கவில்லையானால் 


நாமும் பதிலுக்கு அதே முறையை வெளிப்படுத்தி 


தன்னை சுய மரியாதை மிக்கவராக காட்டிக் கொள்கிறோம்.  


இதற்கு துணையாக 


“மதியாதார் தலை வாசல் மிதியாதே”  


என்ற பழமொழியையும் முன்னிலை படுத்தி சமாதானம் தேடுகிறோம் 


ஆனால், 


“ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்” என்பதை மட்டும் மறந்து விடுகிறோம் 

 

நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று பார்ப்போம் 


எந்த ஒரு காரியத்தையும் முனைப்போடு செய்தால் தான் காரியத்தை சிறப்பாக செய்ய முடியும் 


இந்த இடத்தில் முனைப்பு முயற்சி, செயல் வேகம், ஈடுபாடு, தூண்டல், ஆர்வம், செயல் ஒழுக்கம், பங்களிப்பு பன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு 


நான் என்ற எண்ணம் சுயத்தைப் பற்றிய சிந்தனையாக மட்டும் இருக்கும் பட்சத்தில் ஒரு தீங்கும் நேராது 


ஏனெனில், 


சுயத்தினுடைய தன்மை சமப்படுத்துதல், ஒன்றாக்குதல், நிலைப்படுத்துதல், பாகுபாடற்ற தன்மை.....


எந்த ஒரு வகையிலும் நான் என்ற உள்ளார்ந்த தன்மை பிறரை தாக்காமல் இருக்குமோ 


அந்த நான் உயர்ந்த தன்மை கொண்ட நான்.  


துன்பம் தருபவர்களுக்கு கூட ஊகத்தையே உரமிட்டு 


அவர்களை காயப்படுத்தாமல் விலகிச் சென்றால், 


இந்த நான் நம்மை அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்திருக்கும்.  


இந்த நிலையில் உள்ள "நான்" என்ற உணர்வு ‘பொல்லாதவன்’ அல்ல “பொலன் ஆனவன்” (பொலன் = தங்கம். தமிழ் அகராதியில் தேடி எடுத்த வார்த்தை)


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...