Saturday 26 March 2022

பணத்தைப் பற்றி சில வரிகள்




 

     பணத்தைப் பற்றி சில வரிகள்

குழந்தை இல்லாதவர்கள் மற்றவர்கள் குழந்தை மேல்

அதிகமாக பாசம் வைக்க மாட்டார்கள் பணம் ஒன்றே குறிக்கோள் ஆக இருப்பார்கள்


பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்று சொல்லுவார்கள் அந்த அளவிற்கு பணத்தின் ஆதிக்கம் மனிதர்களிடையே உண்டு.

இந்த உலகில் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் சக்தி பணத்திற்கு அதிகமாக இருக்கின்றது. இந்த பணத்தாசை அதிகமானால் ஒருவன் நிம்மதியாக இருக்க முடியாது.

பணமும் மகிழ்ச்சியும் பரம
விரோதிகள். ஒன்றிருக்கும்
இடத்தில் மற்றோன்று
இருப்பதில்லை.

பணத்தை வைத்திருப்பவனுக்கு
பயம். அது இல்லாதவனுக்கு
கவலை.

பணத்தை அடிக்கடி குறை
கூறுவார்கள். ஆனால்
அதை யாரும்
வெறுப்பதில்லை.

பணத்தின் உண்மையான
மதிப்பு பிறரிடம் கடன்
கேட்கும் போது தான்
தெரியும்.

பணத்தை சம்பாதிக்க
வேண்டும் என்பதற்காக
ஒழுக்கத்தை விற்று
விடாதீர்கள்.

சிலர் பணத்தை வெறுப்பதாக
கூறுவார்கள். ஆனால்
அவர்கள் வெறுப்பது
பிறரிடமுள்ள
பணத்தை தான்.

பணத்திற்கு கடல் நீரின்
குணம் உண்டு. கடல்
நீரைக் குடிக்க குடிக்க
தாகம் அதிகமாகும்.
அது போன்று தான்
பணமும்.

பணம் ஒன்று தான்
உங்கள் வாழ்வின்
இலட்சியம் என்றால்
நிச்சயம் அது தவறான
வழியிலே தான்
தேடப்படும்.

நாம் பணக்காரர்களாக
இருக்க கடமைப்படவில்லை.
ஆனால் ஒழுக்கம்
உள்ளவர்களாக இருக்க
கடமைப்பட்டிருக்கிறோம்.

பணக்காரன் ஆக வேண்டுமா..?
அதற்குப் பணத்தைக் குவிக்க
வேண்டியது இல்லை.
தேவைகளைக்
குறைத்துக் கொள்.

பணம் இருந்தால் உன்னை
உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால்
யாருக்கும் உன்னைத்
தெரியாது.

மனிதனுக்கு பெருமை
சேர்ப்பது பட்டமோ..?
பதவியோ..? பணமோ..?
அழகோ..? அல்ல.
அறிவு ஒன்றே
ஒருவருடைய உயர்வுக்கு
வழிவகுக்கும்.

பணம் இருந்தால் நீங்களா..?
என ஆச்சரியமாக கேட்பதும்.
அதுவே பணம் இல்லாமல்
இருந்தால் “ஓ நீயா”
என்று கேவலமாகவும்
பார்ப்பது தான்
இந்த உலகம்.

பணமா பாசமா என்று
கேட்டால் எல்லோரும்
பாசம் என்று தான்
சொல்லுவார்கள். ஆனால்
அந்த பாசத்தின் அளவை
நிர்ணயம் செய்வதே
இங்கே பணம் தான்.

இங்கு உலகம் உன்னை
தூக்கி வைத்து ஆடுவதையும்
தூக்கி எறிந்து வீசுவதையும்
நிர்ணயிப்பது உன் குணமல்ல
நீ வைத்திருக்கும் பணம்.

பணம் கொடுத்தால் பல
உறவுகள் உன்னை
தலையில் தூக்கி
வைத்துப் போற்றும்..
கொடுத்த பணத்தை
திரும்ப கேட்டுப் பார்
மண்ணை வாரி
தூற்றும்.

உயிருள்ள உறவுகளில்
யார் யார் முக்கியம்
என்று உயிரற்ற
பணமே முடிவு செய்கிறது.

ஒருவரின் இறுதி
ஊர்வலங்கள்
எடுத்துரைக்கும்..
சம்பாதிக்க வேண்டியது
பணங்களை அல்ல
நல்ல மனங்களை
என்று.

கையில் இருக்கும்
போதும் காலி செய்யும்
போதும் தெரிவதில்லை
தேவைக்காக பிறரிடம்
கை கட்டி கை நீட்டி
வாங்கும் போது தான்
தெரியும் பணத்தின்
அருமை என்னெவென்று.

காலம் நமக்கு
கற்றுக் கொடுத்த பாடம்
“பணம் இருந்தால் நாலு பேர்
நம்மை திரும்பி பார்ப்பார்கள்
பணம் இல்லையோ நாம்
நாலு பேரை திரும்பி
பார்க்க வேண்டும்.”


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...