Monday 5 April 2021

சண்டி ஹோமம் ஓர் அறிமுகம்

                                           சண்டி ஹோமம் ஓர் அறிமுகம்

சண்டி தேவி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பழிகள் தடைகள் ஆகியவை அகழும். செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சாண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை. இது அனுபவம் வாய்ந்த 9 வேத விற்பன்னர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம். இதை சரியான முறையில் பூஜைகள் நடத்தபடா விட்டாள் பயனுள்ளவையாக இருக்காது. 9 வேத விற்பன்னர்களை கொண்டு செய்ய படுகின்ற இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும். இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும். சண்டி ஹோமம் என்றால் என்ன .? 1.மஹாகாளி சண்டிகை 2.மஹாலக்ஷ்மி சண்டிகை 3.சங்கரி சண்டிகை 4.ஜெயதுர்கை சண்டிகை 5.மஹா சரஸ்வதி சண்டிகை 6.பத்மாவதி சண்டிகை 7.ராஜமாதங்கி சண்டிகை 8.பவானி சண்டிகை 9.அர்தாம்பிகை சண்டிகை 10.காமேஸ்வரி சண்டிகை 11.புவனேஸ்வரி சண்டிகை 12.அக்னி துர்கை சண்டிகை 13.சிவாதாரிகை சண்டிகை இந்த 13 சக்திகளும் இணைந்த சக்தி மஹா சண்டிகா பரேமஸ்வரி. இந்த யாகங்கள் முரத்தினாலே செய்யப்படும் மார்கண்டேயரால் சொல்லப்பட்ட 700 மந்திரங்களினால் இந்த யாகம் நடைபெறும். இந்த யாகம் செய்வதனால், உலக நன்மை சத்ரு பயம் நீங்கும். லஷ்மி தேவியின் அனுக்ரஹம் கிட்டும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில் முன்னேற்றம். அனைத்து காரியங்களும் வெற்றி. இந்த யாகம் நடக்கும் பொழுது மந்திரங்களை காதினால் கேட்டாலே (ஸ்ருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) அணைத்து விதமான பாபங்களும், எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று சண்டி யாகத்திலே சொல்லபடுகிறது. அதில் சில மந்திரங்கள்: கணபதி பூஜை: கணபதியின் ஆசியில் தான் இந்த பூஜை வழி நடத்தப்படும்.முதலில் கணபதியை வணங்கினாள் அனைத்து தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும்.அதனால் முதலில் கணேஷனை வணங்க வேண்டும் அனுக்கைய சங்கல்பம்: இது ஒரு புதிய சடங்கு வேள்வி செய்ய கடவுளை அனுமதிக்க வேண்டி இந்த பூஜை வழி நடத்தப்படும். இதன் மூலம் எங்கே வேள்வி நடத்தப்படவேண்டும் யாருக்காக நடத்த பட வேண்டும் என்பதை காட்டுகிறது புண்யாகவாஜனம்: இதை ஆரம்பிப்பதற்கு முன்பு மனம் இடம் உடல் ஆகியவற்றை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வழிபடும் இடத்தை சுற்றி மா இலை கொண்டு மந்திர தண்ணீர் தெளிக்கவேண்டும் கலச ஸ்தாபனம்: கலச ஸ்தாபனம் என்பது ஒரு பானையை குறிக்கும். இதில் உலோகம் மற்றும் தண்ணீர் மூழ்க மா இலை வைக்கவேண்டும். இந்த கலசம் தேவியின் அருளை வெளிக்கொணர்வதற்காக செய்யபட்டது. ப்ரயாண சமர்ப்பணம்: இது சிவனுடைய அவதாரமாக கொண்டு இந்த பூஜை வழி நடத்தப்படும். கணபதி பூஜை: வேள்வியை தொடங்குவதற்கு முன் கணபதியை வழிபடவேண்டும். சங்கல்பம்: இடம் மற்றும் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த வழிபாடு. கோ பூஜை: சமஸ்கிருத வார்த்தையான கோ என்பது மாடு என்று பொருள். இந்து மதத்தில் மாடு தெய்வீக குணம் கொண்டதாக கருதப்படுகிறது. பூஜை செய்வதற்கு வைக்கப்பட்ட பொருட்கள் ஆசிர்வாதம் பெறுவதற்காக மாடுவிற்கு வைக்கபடுகிறது. சுஹாசினி பூஜை: வயதான தம்பதியிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக இந்த பூஜை செய்யபடுகிறது. தம்பதி பூஜை: இதில் பூஜை செய்து வயதான தம்பதியிடம் வழங்கபடுகிறது. வயதான தம்பதியிடம் தான் கொடுக்கபடவேண்டும். பிரம்மச்சாரி பூஜை: திருமணம் ஆகாத ஒரு ஆண்மகனை கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது. பூஜையில் அவரது ஆசி இந்த பூஜை நடத்தபடுகிறது சண்டி ஹோமம்: நெருப்பு சடங்கு மந்திரங்கள் கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது. பூர்ணாகுதி: வெற்றிலை, பாக்கு, பருப்புகள், நாணயம், தேங்காய், குங்குமம், மஞ்சள், பூக்கள் இந்த பூஜையில் வைக்கபடுகிறது. மகா தீபாராதனை: சடங்குகள் அனைத்தும் முடிக்கபட்டு பூஜை தீபாராதனையுடன் முடிவடையும். ஹோமம் நடைபெறும் போது யாகத் தீயில் போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீகப் பலன் உண்டு. சண்டி ஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1. விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம் 2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி 3. இலுப்பைப்பூ – சர்வ வஸ்யம் 4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி 5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம் 6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி 7. பூசணிக்காய் – சத்ருநாசம் 8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி 9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி 10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி 11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்) 12. நெல் பொரி – பயம் நீக்குதல் 13. சந்தனம் – ஞானானந்தகரம் 14. மஞ்சள் – வசீகரணம் 15. பசும்பால் – ஆயுள் விருத்தி 16. பசுந்தயிர் – புத்ர விருத்தி 17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி 18. நெய் – தனலாபம் 19. தேங்காய் – பதவி உயர்வு 20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி 21. அன்னம், பசஷணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம் 22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம் 23. சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது. பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில் தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரயங்களுக்கும் பயன்படுகிறது. ஹோமத்தின் போது புனித நீரால் கும்பத்தை நிரப்பி, அலங்கரித்து வேண்டிய தெய்வங்களை அதில் ஆவாஹனம் செய்து (வரவழைத்து), குத்து விளக்கில் அஷ்ட லட்சுமிகளை ஆவாஹனம் செய்து, ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து , பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரமோதி நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன.

Show less

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...