Wednesday 28 April 2021

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

 


       மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

பெண் என்பவள் வளர்பிறையும் தேய்பிறையும் போன்றது


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்............

 

இரண்டு மன்னர்களுக்கு  இடையே சண்டை.

 

ஜெயித்த மன்னன் தோற்றவனைப் பார்த்து எனது கேள்விக்கு சரியான பதில் சொன்னால் உனது நாட்டை உனக்கே திருப்பி தருவேன்.

 

தோற்றவன் "கேள்வியை கேளுங்கள்" என்றான்.

 

கேள்வி: ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

 

ஜயித்த மன்னனின் காதலி மன்னனிடம் இந்த கேள்வியை கேட்டு பதில் சொன்னால்தான் அவனை திருமணம் செய்து கொள்வதாக நிபந்தனை விதித்து இருந்தாள்.

 

ஜெயித்தவனுக்கு விடை தெரியாததால் தோற்றவனிடம் கேட்டு விட்டான்

 

தோற்றவன் கேள்விக்கு விடைகாண ஓடினான் ஓடினான் ஒவ்வோரிடமாக ஓடினான். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.

 

தோற்றவன் கடைசியாக ஒரு சூனியக்கார கிழவியிடம் சென்று கேட்டான்.

 

சூனியக்கார கிழவி " உனக்கு பதில் சொல்கிறேன்.அதை நீ சொன்னால் உனக்கு நாடு கிடைக்கும். ஜெயித்த மன்னனுக்கு காதலி மனைவியாவாள்.

 

அது சரி! நீ எனக்கு என்ன தருவாய்?" என்று கேட்டாள்.

 

தோற்றவன் "நீ எது கேட்டாலும் தருவேன்" என வாக்கு கொடுத்தான்

 

சூனியக்காரி விடையை சொன்னாள்:....

 

"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்"

 

இந்த பதிலை தோற்றவன் ஜெயித்தவனிடம் சொன்னான்.

 

தோற்றவனுக்கு நாடு கிடைத்தது.

ஜெயித்தவனுக்கு திருமணம் நடந்தது.

 

நாடு மீண்டும் கிடைத்தவன் சூனியக்கார கிழவியிடம் வந்து" நீ வேண்டியதை கேள்" என்றான்.

 

சூனியக்கார கிழவி "நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றாள்

 

கொடுத்த வாக்கை காப்பாற்ற அவனும் ஒப்புக் கொண்டான்.

 

உடனே சூனியக்கார கிழவி ஓர் அழகிய தேவதையாக மாறி காட்சி அளித்தாள்.

 

அப்போது அவள் சொன்னாள்.

 

நாம் வீட்டில் தனியாக இருக்கும்போது நான் கிழவியாக இருந்தால். உன்னுடன் வெளியே வரும்போது அழகிய தேவதையாக இருப்பேன்.

 

அல்லது

நான்  வீட்டில் அழகிய தேவதையாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது கிழவியாக இருப்பேன்.

 

இந்த இரண்டில் உன் விருப்பம் என்ன? என்று கேட்டாள்.

 

அதற்கு அவன் கொஞ்சம்கூட யோசிக்காமல் சொன்னான்: " இது உன் சம்பந்தப் பட்ட விஷயம். முடிவு நீதான் எடுக்க வேண்டும்"

 

"முடிவை என்னிடம் விட்டு விட்டதால் எப்போதும் அழகிய தேவதையாக உன் மனைவியாக இருக்க முடிவு செய்து விட்டேன் என்றாள்.

 

ஆம்!

 

பெண் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.

முடிவுகள் அவள்மீது திணிக்கப்படும்போது சூனியக்கார கிழவியாகி விடுகிறாள்.

 

இப்போது எல்லாம் புரிகிறதா?

 

ஜெயித்த மன்னன் உச்சம் பெற்ற சூரியன்!

 

உச்சம் பெற்ற சூரியனேயாயினும் பக்கத்தில் மீனத்தில் உச்சம் பெற்ற காதலி சுக்கிரனை மனைவியாக அடைய அவளது கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

 

இதற்கு பதில் சொல்ல தன்னிடம் தோற்றாலும் கூட தனது சொந்த வீடான சிம்மத்துக்கு பக்கத்தில் கன்னியில்    ஆட்சி உச்சம் பெறும் புதனிடம் கேள்வியை கைமாற்றி விட வேண்டும்.

 

முக்கூட்டுக் கோள்களில் புத்திசாலியாகிய புதன் மனமாகிய சந்திரன் எனும் சூனியக்கார கிழவியிடமிருந்தே பதிலை பெற்றாக வேண்டும்.

 

புதனின் மிதுனத்துக்கு 2ம் வீடாகவும் புதனின் கன்னிக்கு 11லாப வீடாகவும் வரும் கடகத்தில் ஆட்சி பெறும் சந்திரன்தானே பதில் சொல்லியாக வேண்டும்

 

வளர் பிறைச் சந்திரன் அழகிய தேவதை!

தேய்பிறைச் சந்திரன் சூனியக்கார கிழவி!

 

இரண்டும் மாறி மாறி அமைவதுதானே மனித வாழ்க்கை!

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

1 comment:

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...