Sunday 3 November 2019

கண்ணபிரானும், அர்ஜுனனும் இருவரும் தேரில்





கண்ணபிரானும், அர்ஜுனனும் இருவரும் தேரில் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை பார்த்து அது புறா தானே அர்ஜூனா என்றார் கண்ணன்.
அர்ஜுனனும் ‘ஆம்’ என்றான்.
‘இல்லையில்லை கழுகு மாதிரி தெரிகிறது’ என்றார் கண்ணன்.
‘ரொம்ப சரி. அது கழுகே தான்’ என்றான் அர்ஜுனன்.
‘மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை’ என்றதும், ‘அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான்’ என்று மூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன்.
‘என்னடா நீ! நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே! அது என்ன பறவை என தெளிவாகச் சொல்!’ எனக் கண்ணன் அர்ஜுனனிடம் வினவினான்.
‘கண்ணா! என் பார்வையை விட உன் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை அதிகம். மேலும், அந்தப் பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்? நீயே எல்லாம். நீ மனது வைத்தால் சில கணங்களுக்குப் பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே! ஆக, இப்படிப் பட்ட உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன்’ என்றான் அர்ஜூனன்.
அதனால் தான் கண்ணனுக்கு, அர்ஜுனனை மட்டும் ரொம்பப் பிடித்தது. அதாவது அர்ஜுனன் தன் மேல் வைத்து இருந்த விஸ்வாசத்தை, நம்பிக்கையை கண்ணன் விரும்பினார்.
ஆக, பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! என்று புராணங்களே கூறுகையில். இது நம்புகிற மாதிரி இல்லையே என்று வாதம் செய்தால், மனிதனானவன் பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க இயலாது.
இறைவனின் மேல் நாம் கொள்ளும் நம்பிக்கையே முதல் படி என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த அடிப்படை தத்துவத்தை புரிந்து கொண்டால் போதும், பக்தி மார்கத்தில் மனம், மணம் கமழும்.
நமோ நாரயணா
பக்தவச்சலா ! பண்டரிநாதா!பாண்டுரங்கா!நமோ!நமோ!.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...